அகத்துறைப்பாடல்களே அதிகம் ஆட்சிபுரியு ம்சங்கக் கவிதைகளின் பெரும்பாலான கவிதைகளில் காதல் நிறைவடைந்து தலைவி தலைவன் தோள் சேர்ந்து இருவரும் காமக்கடல் நீந்துவதாகவே புனையப்பட்டுள்ளது. காதலை விடஅதற்குப் பின்னான கூடலே கொண்டாடப்பட்டுள்ளது.

 

காமக்கணிச்சி உடைக்கும் நிறையென்னும்

நாணுத்தாழ் வீழ்த்த கதவு

 

நாணமென்னும் தாழிட்ட நிறை எனும் கதவை காமக் கோடரி உடைக்கும்.

காமக்கணிச்சி என்று ஒரு புதுப் பதத்தையே உருவாக்குகிறார் வள்ளுவர்.

அவரே காமக் கடும்புனல் என்றும் சொல்லுகிறார். கீழ்க் கணக்கோ

மேல்க் கணககோ, வர்ணனைகளுக்கும் இடம் இல்லாமல் இல்லை.

 

நாலடியாரில் ஒரு பாடல் (பெரும்பாலாருக்கு அதை ஒரு நீதி நூலாகவே தெரியும்)

கண்கயல் என்னும் கருத்தினால் காதலி

சென்றதும் அம்ம சிறுசிரல் பின் சென்றும்

ஊக்கி எழுந்ததும் எறிகல்லா ஒண் புருவம்

கோட்டிய வில்வாக்கு அறிந்து

 

தலைவியின் அழகிய கண்களைக் கண்டு அவை கயல் மீன்களென்று மயங்கி

அவற்றைப் பிடிக்கப் பறந்து உடன் சென்றது மீன் கொத்தி. முகத்தை

நெருங்கிய அது அவளது வளைந்த புருவத்தைப் பார்த்து வில் வளைப்பதாய்க்

கருதி பயந்து விலகிப் பறந்தது. இதில் பின் பகுதிதான் புனைவின் உச்சம்’

இவை போன்ற புனைவுகள் மட்டும் நீடிக்க, காமம் என்கிற பதம் மட்டுப்பட்டு,

பிற்காலத்தில் பாரதி பாடல்களிலெல்லாம் கூட நாசூக்காகவே சொல்லப்

பட்டது. பக்தி இலக்கியப் பாதிப்புடன் உள்ள பாரதி பாடல்களில்க் கூட

ஆண்டாள் அளவுக்குக் கூட சிருங்கார ரசம் இல்லை. கொஞ்சம் அடக்கி

வாசிக்க வேண்டிய கட்டாயம் ஏதும் அப்போது இருந்ததா, இல்லை அப்போது

ஏதாவது பண்பாட்டுக் காவலர்கள் பாதுகாப்புப் பணியிலிருந்தார்களா

தெரியவில்லை.

பாரதிகாலத்தில்மட்டுமல்ல, கலகத்திற்கு பெயர்பெற்ற, நவீனம் கட்டற்றுப்பாய்ந்த புதுக்கவிதைக் காலத்திலும்கூடகாதல்புனித வஸ்துவாகவேபார்க்கப்பட்டது. காமம் குறித்த சொல்லாடலே பாவமாகப்பார்க்கப்பட்டது. அல்லது காமம்காதலுடன் சேராதாஎன்றகேள்வி முன்வைக்கப்படவேஇல்லை.

1990 இல்போபால் பாரத் பவனில் நடைபெற்ற ”கவிபாரதி” என்கிற கவிஞர்கள்ச ங்கமத்தில் ஒருஅமர்வு Eroticism in Indian Literature– என்கிற மாதிரியிலானதலைப்பில் பேசப்பட்டது. (நவீன) தமிழ்க்கவிதை சார்ந்துயாரும்பேசிய நினைவில்லை. ஆனால் இப்போதவது பேசப்படவேண்டும்எ ன்றுநினைக்கிறேன். ஒட்டியும் வெட்டியுமாவதுபேசப்படலாம்.

எனக்குத்தெரிந்து தமிழ்நாடனின் காமரூபம் (1972) மகுடேசுவரனின், காமக்கடும்புனல் என இரண்டு நவீன கவிதைநூல்களே வந்துள்ளன. இரண்டாவதான ’காமக்கடும்புனல்’ நூலை எழுதும்படி மகுடேசுவரனை ஊக்குவித்தவர்களில் நானும் உண்டு. வடமொழிக்கவிதைகளில், காளிதாசன், பர்த்ருஹரி, பவபூ திகவிதைகளில் காமம் காதலாகவேபார்க்கப்பட்டிருக்கிறது. வடமொழியில் நேரடித்தொடர்புடையவர்கள். இது பற்றிவிரிவாகப்பேசக்கூடும் .ஆனால்அதுதமிழுக்குப் புதியவிஷயமில்லை.  நம்து அகப்பாடல்கள் ஏ. கே. ராமானுஜம் போன்ற சிலர் தவிர்த்து வெளியே அதிகம்கொண்டு செல்லப்படவில்லை. நவீன கவிதையில் அது இன்னும் திகமும்எழுதப்படவில்லை.