பிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபாட்டதாக நிரூபிக்கப்பட்டு வாழ்நாள்தடை விதிக்கப்பட்டதை அடுத்து மேல்முறையீட்டுக்குச் சென்ற ஸ்ரீசாந்த்தின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அத்தடையை நீக்கியது.

2013 ஆம் ஆண்டு தொடரின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுப்பட்டனர் என்று டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்ட மூவருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு ஆணையம்(பிசிசிஐ) வாழ்நாள் தடைவிதித்து நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்குமாறு பிசிசிஐ-க்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த பிசிசிஐ, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதோடு, தன் மீதான வாழ்நாள் தடையை நீக்க வேண்டும், தன்னை மீண்டும் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று(மார்ச்,15) இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை  நீக்கி, மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது குறித்து ஸ்ரீசாந்த் அளித்துள்ள மனுவிற்கு, பிசிசிஐ மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.