ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் பத்தாவது போட்டியில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர், முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. மே30 ஆம் தேதி தொடங்கிய இத்தொடர் ஜூலை14 ஆம் தேதி நிறைவடைகிறது. 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது சுமார் 12 நகரங்களில் மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் நடப்பெறுகின்றது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் முறைப்படி இத்தொடர் நடக்கிறது.
இந்நிலையில், இன்று நாடிங்ஹாமில் நடக்கும் பத்தாவது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர், முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
அணி விவரம்:
வெஸ்ட் இண்டீஸ்: கிறிஸ் கெயில், எவின் லீவிஸ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரன், சிம்ரான் ஹேட்மேயர், ஆண்ரே ரசல், ஜேசன் ஹோல்டட், கார்லோஸ் பிராத்வெயிட், ஆஸ்லே நட்ஸ், செல்டன் காட்ரல், ஒசேன் தாமஸ்.
ஆஸ்திரேலியா: ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் கூல்டர் நைல், பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.