இரவில் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தும்போது அதன் வெளிச்சத்தால் கண்கள் கூசாமலிருக்கும் வகையில் டார்க் மோட் என்ற அம்சத்தை வாட்ஸ்ஆப் நிறுவனம் கொண்டுவந்துள்ளது தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல் பரிமாற்றத்திற்காக பயன்பட்டு வரும் செயலிகளில் அனைவராலும் பயன்படுத்தப்பட்டுவரும் வாட்ஸ்ஆப்பை  2014ம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனம்  கைப்பற்றியது. அதற்குப்பின் வட்ஸ்ஆப்பில் பல  புதிய அப்டேட்டுகள் பேஸ்புக் நிறுவனத்தால் கொண்டுப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள்,  இரவில் பயன்படுத்தும்போது அதிகப்படியான வெளிச்சம் காரணமாக கண் கூசுவதாக கருத்து தெரிவித்துவந்தனர்.  தற்போது அவர்களது மனக்குறையை போக்கும் வகையில், இரவில் கண்கூசாதாவாறு வாட்ஸ்அப்பை பயன்படுத்தும் முறையாக ‘டார்க் மோட் (Dark Mode) என்ற சிறப்பம்சம் கொண்டு வரவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.  வாட்ஸ்ஆப்பின் வால்பேப்பரை கருப்பு நிறத்தில் மாற்றிக்கொள்ளும் வசதிதான் ’டார்க் மோட்’.  முன்னதாக இந்த வசதி யூ டியூப், ட்விட்டர்  உள்ளிட்ட செயலிகளில் உண்டு.

இதுகுறித்து, இதுவரை வாட்ஸ்அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்தவித தகல்வளையும் அறிவிக்காத நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகின்றன. தற்போது முதற்கட்டமாக வாட்ஸ்அப் பீட்டா 2.19.82 வெர்ஷனில் இந்த வசதி சோதனை செய்யப்பட்டுள்ளது.

நோக்கியாவின் லூமியா சிரீஸ் கைப்பேசிகளில் இந்த வசதி இயல்பாகவே இடம்பெற்றிருந்தது. இரவு நேரத்தின் போது பயனாளிகள் கண்களுக்கு இதமாக ஒளிர்வை தரும் வகையில் இந்த டார்க் மோடு வசதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.