அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ  தனது உலக உண்மைப் புத்தகத்தின் சமீபத்ய பதிப்பில்  இந்தியாவின் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும்  பஜ்ரங் தாலை மத போராட்ட அமைப்புகள் என குறிப்பிட்டுளது. இவர்களை “அரசியலில் ‘அழுத்தம் தரும் குழுக்கள்” என்று வகைப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரடியாக மக்கள் தேர்தலில் பங்கெடுக்க மாட்டார்கள் ஆனால் மறைமுகமாக அரசியலில் ஈடுபடுவதும் அரசியல் அழுத்தம் தருபவர்களாக உள்ளார்கள்.

இதே போன்று “அரசியலில் ‘அழுத்தம் தரும் குழுக்கள்” என ஆர்.எஸ்.எஸ், ஹூரியத் அமைப்பு, ஜாமித் உலேமா-இ ஹிந்தை குறிப்பிட்டுள்ளது.

ஹூரியத் அனைத்துக்கட்சியை பிரிவினைவாத குழு என்றும் , ஆர் எஸ் எஸ்ஸை தேசியவாத அமைப்பு என்றும் ஜாமித் உலேமா-இ ஹிந்தை மத அமைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் தங்களை மத போராட்ட அமைப்புகள் என சொன்னதற்கு கடும் கண்டனத்தையும் அதற்கு எதிராக போராடபோவதாகவும் அறிவித்தது.

சி.ஐ.ஏ வின் இந்த “வேர்ல்ட் ஃபேக்ட்புக்” எனப்படும் புத்தகம் அமெரிக்க அரசுக்கு, உளவுத் தகவல்களையும் மற்ற நாடுகளைப் பற்றியோ அல்லது ஒரு பிரசனையைப் பற்றிய உண்மையான விவரங்களைத் தெரிவிக்கும் புத்தகம். இது ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இதில் நாடுகளின் வரலாறு, மக்கள், அரசு , பொருளாதாரம், சக்தி, புவியியல், தகவல் தொடர்பு, போக்குவரத்து துறை, ராணுவம், நாடுகள் எதிர்கொள்ளும் பன்னாட்டு பிரச்சினைகள் என உலகிலுள்ள 267 நாடுகளைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது.

இதை  சி.ஐ.ஏ 1962 இல் இருந்து பதிப்பிக்கிறது. ஆனால் இது பொதுமக்களுக்கு 1975 இல் தான் தெரியவந்தது. இந்த ஃபேக்ட்புக்  அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களுக்காகவும் , அமெரிக்க உளவுத்துறையினருக்காகவும் தயாரிக்கபடுகிறது.

மற்ற நாடுகளின் உளவு அமைப்புகளுக்கு நம் நாட்டிலுள்ள இயக்கங்களின் உண்மையான முகத்தை அந்நாட்டு அரசுகளுக்கு சொல்லுவும் கடமை இருக்கிறது. அந்த வகையில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும்  பஜ்ரங் தால் மற்றும்  ஆர் எஸ் எஸ் போன்றோரின் நோக்கங்களை நமது தலைவர்களும் ஊடகங்களும் நமக்கு மறைத்தாலும் அவர்களை உலகம் எப்படிப் பார்க்கிறது என்பது தெரிகிறது.