தமிழகத்திற்கு வரவிருந்த ஃபானி புயல் ஒடிசாவை தாக்கி கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சேதமேற்படுத்தி நாசம் செய்துள்ளது. கடுமையாக வீசிய சூறைக்காற்றால் பல இடங்கள் பாதிக்கப்பட்டு பொது மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வீட்டை விட்டு வெளிவர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே சென்னையை வாட்டி வதைக்கும் வெய்யில் இன்றிலிருந்து சுட்டெறிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த கத்திரி வெய்யில் மே 26ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் கூறியுள்ளது. பொதுமக்கள் பகல் நேரங்களில் தங்கம் பயணங்களை குறைத்துக்கொள்ளுதல் வெப்பத்தை சமாளிக்க போதுமான அளவு முன்னேர்பாடுகளுடன் செயல்பட வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
மேலும் வானிலை ஆய்வுமைய அறிக்கைபடி தமிழகத்தில் பல நகரங்களில் 100டிகிரிக்கு அதிகமான வெப்பம் வீசிவருகிறது. வரும் நாட்களில் இது இன்னும் அதிகரிக்கும் என கூறியுள்ளது