நம்மில் பெரும்பாலோர் கடந்த காலத்தில் வெறும் காலில் நடந்திருப்போம் , குறிப்பாகக் குழந்தை பருவத்தில், நம் பெற்றோர்களும் மூத்தவர்களும் நம்மை அப்படி நடக்கக் கூடாது என்று எச்சரிப்பார்கள். நாம் அவற்றை அலட்சியம் செய்யும்போது கோபப்படுவார்கள். வெறும் காலில் நடப்பதினால் நாம் காயமடையலாம் அல்லது நமக்கு நோய்க் கிருமிகள் தொற்றிக்கொள்ளலாம் என்றும் அவர்கள் நம்பினார்கள்.
ஆனால் பல நூற்றாண்டுகளாக, விஞ்ஞானம் வெறும் காலில் நடப்பதின் நன்மைகளைக் கண்டறிந்துள்ளது. அதன்படி வெறும் காலில் நடப்பதால் பூமிக்கு நெருக்கமாக நீங்கள் இருக்கிறீர்கள், உங்கள் கால்களால் பூமியின் ஆற்றலை அதிகபட்சம் அணுக முடியும். விஞ்ஞான கோணத்தைத் தவிர, நாம் வெறுங்காலுடன் நடந்து செல்லும் பொழுது, பூமியின் வெப்பநிலை, அதன் மென்மைத்தன்மை மற்றும் அதன் மேற்பரப்பு, காலைப் பனியின் ஸ்பரிசம் போன்றவை மிக அற்புதமான அனுபவம் தருவதாக இருக்கும்.
கோட்பாட்டளவில், இது மனித உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்திகள் கிடைப்பதற்கு ஒரு நல்ல ஆதாரமாக உள்ளது, இது நாள்பட்ட நோய்களைத் தடுக்கவும் வயதாவதின் வேகத்தையும் மட்டுப்படுத்துகிறது. இது உடலியல் மாற்றங்களைத் தூண்டுகிறது, மேலும் தூக்கத்தை மேம்படுத்தவும், வலியைக் குறைக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், வீக்கங்களைக் குறைக்கவும், மற்றும் பிற உடல்நல நன்மைகள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
பூமியின் ஆற்றல் கண்டுபிடிப்பு.
1952 ஆம் ஆண்டில், ஜெர்மனியின் முனிக் நகரத்தில் தொழில்நுட்ப பல்கலைக்கழக இயற்பியலாளரான பேராசிரியர் டபிள்யூ. எஸ்.ஷுமன் புவியின் அதிர்வலைகளை நிரூபிக்கத் தொடங்கினார். ஒரு கோளம் மற்றொரு கோளத்திற்குள் இருக்கும் போது, ஒரு மின் அழுத்தம் உள்ளது என அவர் அனுமானித்தார். அவரது ஆய்வு முடிவுகளுக்குப் பிறகு பூமியின் அதிர்வெண் 10 ஹெர்ட்ஸ் என்று கணித்தார்.
1954 ஆம் ஆண்டு வரை பூமியின் அதிர்வெண் 10 ஆக இருந்து வந்தது, மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட்டு பூமியின் அதிர்வெண் 7.83 ஹெர்ட்ஸ் என்று உறுதி செய்யப்பட்டது, பின்னர் இது பிற விஞ்ஞானிகளால் சோதிக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டது. அப்போதிலிருந்து இது உலகெங்கிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஞ்ஞான அளவாக இருந்துவருகிறது.
பூமியின் நன்மைகள் பற்றிய ஆய்வு.
பங்கேற்பாளர்களை வெறும் காலில் நடக்க வைத்து ஆய்வுகள் பல செய்யப்பட்டது. அவர்கள் கால்களில் மின் கடத்தும் கருவிகள் இணைக்கப்பட்டன. 30 நிமிடங்கள் கழித்துப் பங்கேற்ற பலருக்கு உடலெங்கும் புத்துணர்வு தருவது போல இருப்பதாகச் சொன்னார்கள். அவர்களை சில வாரங்கள் கழித்து தொடர்பு கொண்டபோது, மன அழுத்தம் குறைந்திருப்பதாகவும், உடலில் வீக்கம் மற்றும் ஹார்மோன் அளவுகளில் நேர்மறையான முன்னேற்றங்களை அறிவித்தனர்.
இதய மருத்துவரும் நரம்பியல் நிபுணரான கே.சோகல் மற்றும் பி.சோகால், ஆஸ்டியோபோரோசிஸ், குளுக்கோஸ் கட்டுப்பாடு மற்றும் தைராய்டு குறித்து ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தினர், அதன்படி எலும்புத் தேய்மானங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைவதைக் கண்டனர்.
ஆறு மாதங்களாக நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு மருந்து சாப்பிட்டும், உடற்பயிற்சிகள் செய்தும் குறையாத அளவுகள், 72 மணி நேரம் வெறும் காலில் நடைப்பயிற்சி செய்த பிறகு ரத்தத்தில் கிலுக்கோசின் அளவு குறைந்தது.
தைராய்டு நோய் சோதனையில் முடிவுகள் தெளிவாக இல்லை. ஆனால் வெறும் காலில் நடப்பதால் தைராய்டு அமைப்போடு தொடர்புடைய சுரப்பிகளில் நல்ல மாற்றங்கள் தென்பட்டன.
இது தவிர பல உடல்நல நன்மைகளும், குறைபாடுகளை மட்டுப்படுத்தவும் செய்கிறது. அவை
- மன அழுத்தம் நிவாரணியாகச் செயல்படுகிறது.
- உடலில் வீக்கம் குறைகிறது.
- உடலின் சமநிலை மற்றும் கால்களின் வலிமையை அதிகரிக்கிறது.
- கால்களின் இயக்கம் மற்றும் சீரமைப்பு அதிகரிக்கிறது.
ஆனால் வெறும் காலில் நடப்பதற்கான சில முன்னெச்சரிக்கைகள்.
- நீரிழிவு நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கூரான பொருட்கள் அவர்களை காயப்படுத்திவிடும். அவர்கள் எளிமையான காலணி பயன்படுத்த வேண்டும். மேலும் அவர்கள் நடை முடிந்தபின் கால்களைக் கழுவி, ஒழுங்காக ஈரப்படுத்தி, முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும்.
- நீங்கள் நடக்கும் நிலப்பரப்பில் மிகவும் கவனமாக இருங்கள், உடைந்த கண்ணாடிகள், ஆணிகள், வெட்டிய பாறைகள் உங்களைக் காயப்படுத்தலாம். ஈரமான நிலப்பரப்பு வழுக்கிவிடச் செய்யும்.
- நீங்கள் இதற்கு முன் வெறும் காலில் நடைப்பயிற்சி செய்யாவிடில், கால்களில் வலிமை கூட்டுவதற்கு சிறிய விஷயங்களிலிருந்து ஆரம்பிக்கலாம். ஷூவைப் பயன்படுத்தி ஆரம்பிக்கவும்.
பூமிக்குரியது இலவசம், இது ஒரு போனஸ் தான், இன்னும் ஆராய்ச்சி இன்னும் பலன்களை அல்லது அதன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றாலும், நாம் பூரணமாக, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும். யாராவது அதை எங்களுக்குப் பரிந்துரைக்க வேண்டும் காத்திருக்க வேண்டும், அது கூட நன்றாக இருக்கிறது.
இறுதியாக, வெறும் காலில் நடப்பது உங்கள் உடலின் சமநிலையை அதிகரிக்கிறது. அது உடலின் நலனை அதிகரிக்கிறது. இது மிகவும் எளிமையானது, முற்றிலும் இலவசமானது. இது சம்பந்தமாக தொர்டந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் நாம் யாரும் இனி சொல்லக் காத்திருக்காமல் நாமே நடக்கத் தொடங்குவோம்.