கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் நடக்கும் அனைத்து செய்திகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்தவந்த #pray for Nesamai ஹாஸ்டாங், தற்போது டீசர்ட்டில் வெளியாகியுள்ளது.

உலகளவில் யார் இந்த நேசமணி என்று நேசமணியை கூகுளில் தேட ஆரம்பித்தவர்கள் லட்சக்கணக்கனோர். நேசமணியை வைத்து உலக பத்திரிகை அனைத்தும் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவே மறக்கடித்துவிட்டனர் என சொல்லலாம்

இந்நிலையில் திரூப்பூர் சேர்ந்த ஒரு நிறுவனம் ஒன்று, இந்த ஹாஷ்டாக்கை வைத்து டீசர்ட் தயாரித்துள்ளது. மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் இந்த டீசர்ட் பரப்பரப்பாக விற்பனையாகியுள்ளது. உலகளவில் இந்த டீசர்ட்டை வாங்க நேசமணியின் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள். இந்த டீசர்ட்டுகள் எங்கே கிடைக்கும் என பரவலாக தேடபட்டு வருகின்றன.