56 அமைச்சர்களைக் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 22 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. அதில் 16 பேர் மீது பெரும் குற்ற வழக்குகள் உள்ளன.
அக்குற்றங்களில் பயங்கரவாதம், தேசத்துரோகம், துப்பாக்கிச் சூடு, கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை, வகுப்புவாதம், தேர்தல் மீறல்கள் மற்றும் கடத்தல் ஆகியவை அடங்கும்.
ஆறு அமைச்சர்கள் – பிரதாப் சந்திர சரங்கி, பாபுல் சப்ரியோ, கிரிராஜ் சிங், நித்யானந்த் ராய், அமித் ஷா மற்றும் பிரஷ்ஹாத் ஜோஷி ஆகியோரின் மீது மதம், இனம், பிறந்த இடம், குடியிருப்பு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களுக்கு இடையே உள்ள விரோதத்தை ஊக்குவிப்பதில் தொடர்புடைய வழக்குகள் அறிவிக்கப்பட்டுள்ளன. (ஐ.சி.சி பிரிவு -153 ஏ) மற்றும் மத நம்பிக்கை அல்லது மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதன் மூலம் மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்குடனான வேண்டுமென்றே தீங்கிழைக்கும் செயல்கள் (ஐபிசி பிரிவு -295 ஏ) தொடர்பான வழக்குகளும் இவர்கள் மீது உள்ளன.
அஸ்வினி குமார் சௌபே, நிதின் கட்காரி மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோர், தேர்தலில் வாக்காளர்களுக்குச் சட்டவிரோதமாகப் பணம் கொடுத்தது (ஐபிசி பிரிவு -171H), லஞ்சம் (ஐபிசி பிரிவு – 171E) மற்றும் (ஐபிசி பிரிவு -171எஃப்) தொடர்பான வழக்குகள் உள்ளன.
பா.ஜ.க. வி.முரளிதரன், மீது கொலை முயற்சி (ஐபிசி பிரிவு -307) உள்ளது. இவர்தான் வெளி விவகார அமைச்சராகவும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மக்களின் நலன் காப்பவர்களும் பாராளுமன்றத்தின் மாண்பைக் காப்பவர்களும் இருக்க வேண்டிய அவையில் சிறையில் இருக்க வேண்டிய குற்றவாளிகள் இருப்பது பெரும் அவலம்.