சோழ தேசத்தின் பழைய தலைநகர் பழையாறையின் பேரிளவரசியாக வலம் வந்த. மாமன்னர் அருள்மொழிவர்மரின் அக்கா குந்தவை தேவியின் வருகையினால். கரந்தை நகரம் மட்டுமின்றி தஞ்சை அரண்மனை முழுவதும் மகிழ்ச்சி கடல் பொங்கியது என்றே கூற வேண்டும்.
அப்படியான தருணத்தை குந்தவை தேவியின் நீண்டகால வருகைக்குப் பின்னர். குடும்பம் சகிதமாக சந்தோஷகளைப் பகிர்ந்தும். குதூகலப் பட்டுக்கொண்டிருந்தது மாமன்னர் அருள்மொழிவர்மரின் லஷ்மி விலாசம்.
சோழ தேசமே ஆச்சரியம் கொள்ளும் வகையில்.வாணர்குல தளபதி வந்தியத்தேவர் குந்தவைதேவியின் புதல்வர் ரங்கமஞ்ச ஆதித்தனை. அரசவை சபையோர் முன்னிலையில் பாளையத்து தளபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட செய்தி காட்டுத் தீ போல தேசம் முழுவதும் பரவியது. வந்தியதேவனுக்கு புதல்வர் இருப்பதாகவும். பல நாடுகளுக்கு சென்று போர் செய்து இப்போது தஞ்சையை அடைந்ததாக புனைவு கதைகளும் மக்களிடம் வெகுவாக சென்றடைந்திருந்ததை தஞ்சையின் வீதிகளில் உலாவுவோர் பேசிச்சென்றது அங்கே காவலுக்கு இருந்த வேளக்கார காவல்காரர்களுக்கு நகைப்பையும் வியப்பையும் கொடுத்தென்றே சொல்லலாம்.
நகர பெருவீதியில் வந்துகொண்டிருந்த வளையல் வியாபாரியோ. அரண்மனை வாயிலில் நின்றிருந்த பெருமீசை வைத்திருந்த ஒரு காவலரிடம் வந்து.
காவலரே. வந்தியத்தேவரோட புது இளவரசர் பாளைய தேசம் அப்படிங்கிற ஒரு நாட்டினை ஜெயிச்சி இப்போ பெருவுடையார் கோவில் கும்பாபிஷேக நிகழ்விற்க்காக வந்துருக்கிறாராமே. பாளைய தேசத்துக்கு வந்தியத்தேவர் மகன் ஆதித்தனையே பட்டாபிஷேகம் பண்ண ராஜராஜர் உத்தரவிட்டுள்ளாராமே. உண்மையான சேதி சொல்லுமய்யா. என நகைத்தபடியே காவலனிடம் கேட்க.
மீசை வைத்த அந்த காவனும் குசும்பாக. ஆமாமா. நீர் கூறுவதும் நெசந்தான்யா வளையல் வியாபாரியே!.
அதுமட்டுமில்ல. முத்தரையர் புடிச்சிவச்சிருந்த தஞ்சாலூர. பழுவேட்டரையர்கள் வச்சிகிட்டிருந்தாங்களே. அதுக்கப்புறமா இப்போ மாமன்னர் ராஜராஜருக்குப் பிறகு இந்த அரண்மணைய ஒமக்கே கொடுக்கப் போறதாவும் சேதி கேள்விப்பட்டோம்.!
என கேள்வி கேட்டவரிடமே புதிர் போட. கேள்வி கேட்ட வளையல் வியாபாரியோ விழிபிதுங்கியபடி. ஏடாகூடமாக கேள்வி கேட்டுவிட்டோமோ என்பது போல எண்ணி. மறு கேள்வியில்லாது தமது வேலையை பார்க்க கிளம்பிவிட்டார் தலையில் ஏற்றிய பெருஞ்சுமையுடன்.
அரண்மணையின் உள்ளே குந்தவைதேவியார் வானதி மாடத்தில் உள்ள செம்பியன்மாதேவியாரின் நினைவு மாடத்திற்கு சென்று. அங்குள்ள தமது பெரியம்மா கற்றளியை வணங்கிவிட்டு. லஷ்மி விலாசத்தை நோக்கி நடந்த அந்த அழகு நடையாள். வானதி மாடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
உடல் முழுவதும் போர்த்தியிருந்த அங்கவஸ்திரமும் அழகு மிளிர்ந்த பழையாறை இளவரிக்கான அந்தஸ்த்தினைக் கொடுத்தது.
லஷ்மி விலாஸத்திலிருந்து வெளியே வந்த ராஜராஜரின் துணைவியார் தந்திசக்திவிடங்கி என்றழைக்கப்படும் கொடும்பாளூர் மாதேவடிகள். குந்தவையை கண்டதும் காலை ஒளிக் கதிரவனின் ஒளிக்கீற்றைப் போல ஆர்ப்பரிக்கும் முக மலர்ச்சியோடு இன்புற வரவேற்றார்.
தேவியாரின் பின்னே மூன்று மகள்களும் அத்தை அத்தை என்னை ஆரத்தழுவி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். அவர்கள்
பின்னே அருள்மொழிவர்மரும் அவரது மகன் ராஜேந்திரனோடு தங்கள் வம்சத்தின் வீரதேவதையை வரவேற்று அன்றைய நாளின் இளங்காலை வேலையை மலரச் செய்து கொண்டிருந்தனர்.
கழுகு வனத்தின் நாயகன் ரங்கமஞ்ச ஆதித்தன் கரந்தை அரண்மனையின் அழகை ரசித்துக்கொண்டு. ஒவ்வொரு அறையாக உள்சென்று அங்குள்ள அழகோவியங்களை அசந்து பார்த்தும். ஒவ்வொரு அறைகளிலும் வரையப்பட்டிருந்த சோழ தேசத்தின் வீர வரலாற்று சரித்திர சித்திரச்களையும் கண்டு தங்களது வம்சத்தின் வரலாற்றுப் பெருமைகளை மனதிற்க்குள் அசைபோட்டுக் கொண்டே நிலா முற்ற நிலவரையை நோக்கி நடக்கலானான்.
பழுவேட்டரையர் தஞ்சையை ஆட்சி செய்தபோது. சுந்தரர் காலத்திய சோழ தேசத்தின் நாணயங்கள் செய்யும் பொன் உலைக்கலமாக இருந்தது இந்த நிலா முற்றம்.
தற்போது வேளக்கார படையினர் குதிரைகளை கட்டும் லாயமாக மாறியுள்ளது.
இங்கே குந்தவை வானதி கூடத்தில் உள்ள லஷ்மி விலாசத்தில் நுழைந்தவுடன்.
வீரத்தமிழ் அக்கவைக்கு அருமை தம்பியின் வணக்கங்கள்.
எண்ணிலடங்கா சோகத்தையும் சில மகிழ்ச்சியை கொடுத்த. உங்களால் உயிர்ப்பெற்ற உங்கள் அருமை தம்பி. இந்த தேசத்தின் மாகாசக்கரவர்த்தியான நான். உங்கள் பொக்கிஷத்தை உங்கள் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வந்துள்ளேன். மனமுவந்து ஏற்றுக் கொள்வீர்களாக.! என்று லட்சுமி விலாஸ கூடத்தில் குழுமியிருந்த குடும்பத்தார் முன்னிலையில் நிலாமுற்றத்தில் இருந்து வானதி மாடத்தினுள் சற்றே நுழைந்த வந்த ரங்க மஞ்ச ஆதித்தனைப் பார்த்து இருகைகளையும் நீட்ட. அருள்மொழிவர்மரின் கைகளை பிடித்த குந்தவையை விழிகளில் வழிந்த ஆனந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டே மகன் ஆதித்த கரிகாலனை நோக்கினாள்.
இக்காட்சியை கண்டு கொண்டிருந்த குடும்பத்தார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட. வல்லவரையர் குந்தவை தேவியின் மனங்களிலோ மகிழ்ச்சி கடல் அலையாக பொங்கியது என்றே கூற வேண்டும். ஒரு பக்கம் தனது அருமைப் புதல்வன் தங்களுக்கு கிடைத்த கிடைத்ததும் மறுபக்கம் சோழ தேசமே போற்றும் வகையில் ஒரு பெரிய மாவீரனாக அருள்மொழிவர்மரால் உருவாக்கப்பட்டு. அரசவை சபையோரிடையே அறிமுகப்படுத்தப்பட்டு. தனது தம்பியின் கரங்களால் தனது மகன் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைக் கண்டு குந்தவை வந்தியத்தேவனின் மனங்கள் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்தது.
அருள்மொழிவர்மர் தேவரின் அவர் குடும்பத்தாரும் அளவில்லா சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர். ரங்கமஞ்ச ஆதித்தனோ. தனக்கு புதியதொரு உறவு கிடைத்து அதன் மூலம் தமக்கு குடும்பப் பொறுப்பும். சோழத்தின் அரசவை கடமையும் சேர்ந்துள்ளது போன்ற நினைவு நிழலாடியது. அதே வேளையில் யாரோ தம்மை உற்று நோக்குவது போல ஒரு உள்ளுணர்வு அவனின் உணர்ச்சிகளை எழுப்பியது.
குடும்பங்கள் சகிதமாக அறை முழுவதும் சொந்தபந்தங்கள் சூழ மகிழ்ச்சியான பல கதைகளைப் பரிமாறிக் கொண்டிருந்த வேளையில். வாசலுக்கு அருகே உள்ள பெரிய மரத்தூணுக்குப் பின்னால் ஒரு அழகிய மங்கையொருவள் அஞ்சனை விழியாலே. சோழ தேசத்தின் சொப்பன தேவியராக. ஒளிந்து ஒளிந்து ரசித்துக்கொண்டிருந்தாள் பாளைய தேசத்தின் இளவரசனை வைத்த விழி இடராது.
தான் வளர்ந்த கழுகுவனத்தில் பெண்களின் வாடையில்லாது. போர் பயிற்சியையும் சைவ சமய நெறியும் படித்து வளர்ந்திருந்த பாளைய தேசத்தின் ஆஜானுபாகுவாக வளர்ந்திருந்த ஆதித்தனுக்கு. அந்த அழகியின் விழிகளில் இருந்து வரும் நாணல்களை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் தலையை கவிழ்ந்து அருகில் போய் நின்று கொண்டான். இல்லை இல்லை ஒளிந்து கொண்டான்.
தனது வலது கரத்தால் அருகில் அமர்ந்திருந்த குந்தவை தேவியின் தோளில் கையை வைத்து மெதுவாக சீண்டினான்.
அம்மா. அங்கே யாரோ ஒரு பெண் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். என்று குந்தவி தேவியின் காதில் மெதுவாக கிசுகிசுத்தான் பாளைய தளபதி ஆதித்தன்.
மகன் சொன்னவுடன் எதிரே நிமிர்ந்து பார்த்த குந்தவை தேவியோ.! தன் எதிரே வாசலுக்கு அருகில் உள்ள தூணுக்குப் பின்னால் ஒரு அழகி மறைந்து கொண்டு நிற்பதை பார்த்து கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள்.
குடும்பம் சகிதமாக உற்றார் உறவினர்கள் நெடுநாளுக்குப் பின்னர் பழங்கதைகளை பேசிக் கொண்டிருந்த ராஜராஜர்.கண்டராதித்தர்.அவரது மனைவி. வந்தியத்தேவர் ராஜராஜ சோழனின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் திடீரென குந்தவை தேவியின் சிரிப்பொலியைக் கேட்டதும்
அனைவரின் உரையாடலும் ஒரு கணம் நின்று அனைவரும் இவர்களையே நோக்கினர்.
அங்கம்மா தேவியரே இங்கு வருக . என அந்த அழகியை நோக்கி குந்தவை அழைக்க .
தூணுக்கு பின்னாளில் இருந்து விலகிய அந்த காந்த விழியாளை கண்டவுடன் சொக்கிப்போனார் சொக்கன் நாமத்தையே உச்சரித்து வளர்த்த ரங்கமஞ்ச ஆதித்தன்.!
ராஜராஜர் அருள்மொழிவர்மனின் முதல் புதல்வி குந்தவை சாளுக்கிய மன்னர் விமலாதித்தருக்கு மணமுடித்து கொடுக்கப்படுள்ளார். இரண்டாம் புதல்வி மாதேவடிகள் கொடும்பாளூர் தேசத்து இளவரசருக்கு மணம் முடித்துக் கொடுத்து விட. மூன்றாவதாக பருவம் எய்து ராஜ்ஜியத்தின் அழகியாக வலம் வந்து கொண்டிருந்தாள் அங்கம்மா மாதேவியார் அவர்கள்.
ஏழு கடல் தாண்டி ஏழு லோகம் சென்று வந்தாலும். இப்படி ஒரு அழகியை யாவரும் கண்டிருக்க முடியாது என்பதுபோல. அழகில் சிறந்த வனப்புமிக்க அங்கம்மா என்ற மாதேவடிகள் குனிந்த தலை நிமிராது தனது அத்தைக்கு அருகில் வர. தாயின்அருகில் நின்றிருந்த ஆதித்தனுக்கோ. தன்னை நோக்கி கோல விழியால் அன்ன நடையாக வருவதை கண்டபோது.
அந்த ஏழுகடல் அலைகளும் இவன் முகத்தில் திரும்ப திரும்ப அடித்ததுபோலவும்.
முகமெல்லாம் வியர்த்து விருவிருக்க தனது தாயை விட்டு நகர எத்தனித்தான்.
சிறு நாழிகைக்குள் ஆதித்தனின் உணர்வுகளை அறிந்து கொண்ட குந்தவை தேவி ஆதித்தனின் வலது கையை பிடித்து அங்கேயே நிற்கும் படி சைகை உத்தரவு பிறப்பித்தார்.
இதயம் படபடத்தது.இருபக்கமும் இயற்கையாகவே இறக்கைகள் முளைத்து சிறகடித்து பறக்க மனம் தயாராக இருந்தது போல ஒரு பிரம்மை தானாகவே உருவாகியது.
அங்கவை தேவியா.!
அத்தைக்கு குந்தவையிடம் செல்லாமல். கொடும்பாளூர் தேவியாரான தனது அம்மாவிற்கு அருகில் ஓடிச்சென்றாள்.
வந்தியத்தேவர் சிறிது மௌனச் சிரிப்புகளை உதிர்த்துவிட்டு.
அத்தைக்கு அருகில் வாம்மா. என்று அன்போடு அழைக்க. ராஜராஜர் தனது அருமை புதல்வியை நோக்கி.
மாமாவின் சொல்படியே நடந்து கொள் என்று அங்கமா தேவியாருக்கு அன்புக் கட்டளையிட.
ராஜராஜர் அருகிலிருந்த கண்டராதித்தரோ.
அங்கம்மா தேவியே. எனது தமையனின் புதல்வியே. உமது தந்தையார் மிகவும் பாசத்தோடு மரியாதை கொண்டுள்ள உனது அத்தையின் புதல்வர்தானம்மா இந்த ஆதித்தன். அவர் அருகில் இருந்த கண்டராதித்தரின் மனைவி கோதைபிராட்டி அங்கம்மா தேவியாரை அரவணைத்துக் கொள்ள. புன்னகை ததும்ப பூக்களை உநிர்த்தாள் இவள்.
கண்டராதித்தர் தொடர்ந்து.
பாண்டியன் தலைகொய்த பரகேசரி என தேசம் போற்ற பேரெடுத்து. அற்பவயதில் ஆகாயம் சென்ற உமது பெரிய மாமனின் பெயரைத்தான் இவருக்கு சூட்டியுள்ளனர்..என என்று வீரம் ததும்பும் இதழ்களால் புன்னகையை உதிர்த்துவிட்டு. ஆதித்தனை அருகில் அழைக்க. அங்கம்மா தேவியாரையும் அருகில் அழைத்தார்.
இதையெல்லாம் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மாதேவடிகள் மற்றும் அருள்மொழிவர்மனின் புதல்வர் ராஜேந்திர சோழன் என எதிர் காலத்தில் அழைக்கப்பட்ட பட்டத்து இளவரசன். வல்லவரையர் குந்தவை என ஒட்டு மொத்த குடும்பமும் இருவரின் நளினங்களை பார்த்து ஒரு வித சந்தோஷ சங்கடங்களை அடைந்திருந்தனர் என்றே கூறலாம்.
இருவரும் கண்டராதித்தர் அருகில் வந்தனர்.
அங்கம்மா. ஏழேழு உலகையும் ஆளுகின்ற உமது தந்தையான சோழதேசத்தின் மாமன்னர் அருள்மொழிவர்மனின் ஆளுகைக்கு உட்பட்ட தளபதிகளில் ஒருவர் இந்த ஆதித்தன். வருங்காலத்தில் ஏதோ ஒரு தேசத்தை ஆளப்போகும் மகாபுருஷராகவும் பேரெடுக்கப் போகிறான் இவன். அந்த நேரத்தில் இந்த ஆதித்தனின் ஆட்சியின் கீழ் வாழும் சமூக மக்கள். சந்தோஷத்துடன் வாழ போகிறார்கள்..
என்று ஆதித்தனின் புகழ் பேசி இவளிடம் அறிமுகப்படுத்த. குனிந்து தரையைப் பார்த்துக் கொண்டிருந்த அங்கம்மா தேவியாரோ. மெதுவாக சிறிது நிமிர்ந்து ஆதித்தனின் முகத்தை பார்த்த மறுநாழிகை தரைதனது கட்டைவிரலால் கோலம் போட ஆரம்பித்தார்.
தொடர்ந்த கண்டராதித்தர்.
வல்லவரையன் புதல்வரே. நீ இப்படி ஒரு ஆஜானுபாகுவாக வீரனாக இங்கு வந்து நிற்பாய் என்று நாங்கள் கனவில் கூட நினைத்ததில்லை. சோழதேசம் எண்ணற்ற பல அதிசயங்களை கண்டுள்ளது.
நேற்றைய சபையில் திடீரென தோன்றிய உன்னை. இவர்தான் சோழ தேச தளபதி வந்தியத்தேவன் குந்தவையின் புதல்வர் என மாமன்னர் அறிவித்தபோது. வாயடைத்துப் போயினர் சபையினர் அனைவரும். நான் முதற்கொண்டு.
ஆதித்தன் எனும் சோழ மன்னர்களின் பெயரை தாங்கியுள்ள இளவரசனே கேள்.
என் தம்பி மகளான அங்கம்மாவை பெண்தானே என்று சாதாரணமாக நினைத்து விடாதே யப்பா.
இவள் வாளெடுத்து சுழற்றினால்.எதிரியெல்லாம் தலையை பிய்த்துக்கொண்டு தன் எல்லையை நோக்கி ஓட ஆரம்பிப்பான்.இவள் மேல் ஏறினால் புரவி கூட முப்பத்தாறு குழி பறந்து செல்லும் வலிமை பெறும்.
இவள் யானை மீது வலம் வந்தால். சோழ தேசமே வணங்கிச் செல்லும். அப்படிப்பட்ட இந்த அங்கம்மா தேவியார் தான் எங்கள் குடும்பத்தின் அழகு தெய்வமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்..
என்று ஒரு பெரிய அறிமுக உரையை கூற.. அருகிலிருந்த அருள்மொழிவர்மரோ.
தமையனார் கண்டராதித்தரே.
தங்களின் அறிமுக உரையால் இரு சிறு குழந்தைகளும் நாணங்கொண்டு பரிதவித்துப் போய் இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறிது விடுதலை கொடுங்கள்… என்று புன்னகையோடு கூற. அருகில் இருந்த குந்தவை தேவியோ.
அங்கம்மாதேவியார் எங்கள் அம்மாவின் மறு உருவம் நீ … என்று தங்களது தாயான மலையமான் மாதேவடிகளை நினைவுகூறிய அந்த வேளையில்.
நிலாமுற்றம் வாயிலின் அருகே வாயிற்காப்போன் பனை இலச்சினை பொருந்திய வேல் கம்புடன் வேகவேகமாக வருவதை பார்த்த வந்தியத்தேவர்.. விபரம் ஏதும் உள்ளனவா.. என்று அந்த வீரனைப் பார்த்து சத்தமாக கேட்டார்.
வாணர்குல தளபதியே. சோழ தேசத்தில் ஈடு இணையற்ற மாமன்னரை காண மலையமான் தேவரும் மற்றும் கொடும்பாளூர் அரசரும் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தங்களுக்கு அறிவிக்கவே.. பழுவூர் அரசர் நக்கன் அவர்கள் எம்மை இங்கே அனுப்பி உள்ளார்.. என்று.
வந்த விஷயத்தை வெகு சீக்கிரத்தில் அறிவித்துவிட்டு தலைவணங்கி வந்தியத்தேவனுக்கு வணக்கத்தைச் செலுத்தி விட்டு திரும்பிச் சென்றார் அந்த பழுவேட்டரைய வீரர்.
சில நாழிகையில் அரண்மனை வாயிலில் இருந்து முழாஒலி முழங்கியது.
சோழ தேசத்தில் மிக முக்கியமான நிகழ்ச்சிகளிலும் அரண்மனைக்கு முக்கியதொரு விருந்தாளிகள் வரும் பட்சத்தில் மட்டுமே முழாம் முழங்குவது சம்பிரதாயமாகும்.
அதை உணர்த்தும் விதமாகவே வாயிலில் முழங்கிய அந்த ஒளியினை கேட்ட கரந்தை சமஸ்தானத்தில் இருந்த அனைவரும் வந்திருப்பது யார் என்று அறியும் ஆவலோடு கூட ஆரம்பித்தனர்.
விஷயத்தை முன்னமே அறிந்து இருந்த சோழரின் குடும்பமானது மலையமான் தேவரையும். கொடும்பாளூர் வேளாளரையும் ஆரத்தி எடுத்து வரவேற்பு மகிழ்ச்சி பொங்க வரவேற்ற விதம் புரவி மேல் அமர்ந்திருந்த கொடும்பாளூர் வேளாளருக்கும். பல்லக்கில் திரைவிலக்கி பயணப்பட்ட மலையமான் தேவருக்கும். தஞ்சை அரண்மனையில் வெகு நாளைக்குப் பிறகான வருகையாலும். பழுவேட்டரையர் மற்றும் உத்தம சோழனின் ஆட்சிக்குப் பிறகும் சில முறையே இங்கு வந்திருந்த இருவரும். தற்போது ஒரு பிரமிப்புடனும் ஆச்சரியம் கலந்த சந்தோஷத்துடனும் அரண்மனையில் வாயிற்கதவில் வீரர்கள் கொடுத்த மரியாதைக்கு தலைவணங்கி பல்லக்கும் புரவிகளும் உள்ளே நுழைந்தது.
வாயிற் கதவுகளுக்கு அடுத்ததாக முதலில் எதிர்ப்பட்ட செம்பியன் மாதேவியார் நினைவு கற்றளியை. இருவரும் ஒருசேர வணங்கிய பின்னர். அடுத்ததாக தென்பட்ட நிலா முற்றம் மட்டும் வானதி மாடத்தின் வழியே உள்ளே செல்ல. அங்கே லட்சுமி விலாஸ வாயிலில் குடும்பம் சகிதமாக நின்றிருந்த மாமன்னர் அருள்மொழிவர்மர். மகிழ்ச்சி பொங்க தங்களின் வம்ச வழிகாட்டிகளான இந்த இருபெரும் தளபதிகளை சிரம் தாழ்த்தி கரம் கூப்பி அன்போடு வரவேற்றனர்.
இலங்கை தேசத்தில் எமக்கு வழிகாட்டியாகவும். அரசியல் ஆலோசனைகள் கொடுத்து. பல போர்களிலும் தமக்கு தோள் கொடுத்த கொடும்பாளூர் வேளாளரின் இளைய சகோதரரின் மகள் தான் மாமன்னர் அருள்மொழிவர்மரின் துணைவியார் தந்திசக்தி மாதேவடிகள்.
சுந்தர சோழரின் துணைவியார் மலையமான் தேவியாரின் சகோதரர்தான் இந்த மலையமான் தேவர் ஆவார். அருள்மொழிவர்மருக்கு மாமன் முறையாவார்.
ஆக குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் இருவர் அரண்மனைக்கு விஜயம் செய்தது மட்டுமல்லாது குடும்பம் சகிதமாக அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த தருணம் ராஜராஜ சோழனுக்கு அளவில்லா மகிழ்ச்சியை கொடுத்தது.
வந்தியத்தேவனும் குந்தவை தேவியும் இந்த இரு குடும்ப மூத்த உறுப்பினர்கள் காலில் விழவும் அருகிலிருந்த ரங்க மஞ்ச ஆதித்தனும் தமது பெற்றோருடன் சேர்ந்து இவர்கள் காலில் விழுந்து வணங்கி பெரியவர்களின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்டனர்.
தஞ்சை அரண்மனை வாயிலில் இருந்து மறுபடியும் முழாம் ஒலிக்க.கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மறுபடியும் ஒரு ஆச்சரியம். அடுத்து வருவது யாரோ என்று அனைவரும் ஒரு புதுவித எதிர்பார்ப்புடன் வானத்தை நோக்கி தங்கள் பார்வையை நோக்கினர்.
வாயிற் கதவுக்கு அருகில் வலது இடதாக இரு புரவிகளில் வீரர்கள் அமர்ந்து வர. பின்னே கஜ புலத்தோடு சிறு மலையே அசைந்து வருவது போல பெரியதொரு கரிய யானை அசைந்து வர அதன் மேல் கம்பீரமாக வந்து கொண்டிருக்கிறார். யானையின் மேல் அமர்ந்து வந்த சூடாமணி விகாரத்தின் பௌத்த குருமார் அவர்கள்.
முன்னொரு காலத்தில் அருள்மொழிவர்மரின் உயிரை காத்த இந்த நாகப்பட்டினம் சூடாமணி விகாரத்தின் பௌத்த துறவி அவர்களை பார்த்ததும். ராஜ ராஜ சோழர் மட்டுமில்லாது பட்டத்து அரசியான லோகமாதேவி என சோழரின் குடும்பம் சகிதம் வயது முதிர்ந்த சூடாமணி விகாரத் தலைவரை கரம் கூப்பி வரவேற்றனர்.
அருள்மொழிவர்மர் ஆட்சிக்குப் பிறகு அந்த நாகப்பட்டினம் சூடாமணி விகாரத்தின் பெயர் ராஜராஜ பெரும்பள்ளி என மாற்றப்பட்டதும். அந்த பௌத்த விகாரத்திற்கு ஆனைமங்கலம் என்ற ஊரையே தானமாக அளித்து ஒரு பெரும் சமயப் பொறையை ஆற்றியுள்ளார் ராஜராஜ சோழர்.
தஞ்சை அரண்மனை முழுவதும் மாக் கோலம் பூண்டது போல திருவிழாவாகவே மாறியது.
யானையில் இருந்து இறங்கிய பௌத்ததுறவி தமது கையில் வைத்திருந்த செங்கோலால் மாமன்னருக்கு ஆசிகள் வழங்கி அருள் பாலித்தார்.
இந்தக் காட்சியை அருகில் இருந்து கண்டு கொண்டிருந்த வந்தியத்தேவன் குந்தவை தம்பதியினர் மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும் அல்லாது கண்டராதித்தர் குடும்பமும் பல்லவர் தேவர் சகிதமாக ஒருசேர வணக்கம் கூறி வந்திருந்த உறவுகளை அன்போடு வரவேற்றனர் லட்சுமி விலாசம் எனப்படும் ராஜராஜரின் இல்லத்திற்கு.
ராஜராஜசோழரின் வரலாற்று சரித்திரத்தை எழுதி முடிக்க அளவுகோல் இல்லை என்பது போல ராஜராஜசோழரின் இந்த மகத்தான ராஜராஜேஸ்வரம் கும்பாபிஷேகத்திற்கு பிறகு ராஜராஜரைக் காண வருபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.
அதுமட்டுமல்லாது ராஜராஜனின் குடும்பத்தின் புதுவரவான வந்தியத்தேவன் குந்தவை தம்பதியினரின் புதல்வர் ரங்கமஞ்ச ஆதித்தன் பற்றிய செய்திகள் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்ற இந்த வேளையில் அந்த இளவரசனை காணவும் வந்திருந்த விருந்தினர்களுக்கு ஒரு ஆவலை உண்டு பண்ணியது.