தர்க்கரீதியாக எந்தவொரு காரணமுமின்றி சகமனிதன் மீதி இனம், மதம் மற்றும் மொழி சார்ந்து வெறுப்பை உமிழ்வது பாசிசத்தின் அடிப்படை அலகு. பாசிசம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போது சூரியனுக்குக்கீழ் தாங்கள்தான் ஆகச்சிறந்தவர்கள் என்ற கற்பிதத்தை சாசனப்படுத்தி அதன்வழியே அனுமதிக்கப்பட்ட மற்றும் நன்கு ஒருங்கிணையப்பட்ட அத்துமீறுதல்களின் வழியே மற்றவர்களின் செல்வத்தை அபகரிப்பதில் ஆரம்பித்து அவர்களின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, மொழி, இலக்கியம், ஒரு மனிதன் அவன் ஆன்மாவை நிலைத்திருக்கச்செய்யத் தேவைப் படக்கூடிய சகலத்தையும் அழித்து, இறுதியில் அவனை யும் அழித்தொழிக்கும். இதற்கு ஆகச்சிறந்த சான்று அயோக்கியன் ஹிட்லர் தலைமையிலான நாசிக்களின் ஜெர்மனியை சொல்லலாம். இரண்டாம் உலகப்போரில் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்த நாசிகளின் அட்டூழியங்கள், யூதர்களின் இன அழிப்பிற்காக அவர்கள் ஏற்படுத்திய வதை முகாம்கள், ஐரோப்பாவின் மற்ற தேசங்களை கைப்பற்றிய போது கொள்ளையடித்து அறிய ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள், நேச நாடுகளின் பொருளாதாரத்தைச் சீரழிக்கக் கள்ள நோட்டுகளை உருவாக்கிது, போரின் முடிவுக்குப் பின்பு “ ஹோலோகாஸ்ட்” என்றழைக்கப்பெற்ற வதைமுகாம்கள் அங்கு நடை பெற்ற இனப்படுகொலைகளும் யூதர்கள் பரப்பிவிட்ட புரளி என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது, தங்களுடைய அடையாளங்களை மாற்றிக்கொண்டு போருக்கு பிறகான ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் குடியேறியது, நியுரம்பெர்க்ஹ் விசாரணை என கோமாளிகளின் பெருங்கூட்டம் என்று குறைத்து மதிப்பிடப்பெற்ற நாசிக்களின் போர்க்குற்றங்கள் சார்ந்து அநேக நூல்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் உருவாகின, உருவாகிக்கொண்டிருக்கின்றன மேலும் உருவாக்கம் பெறும் ஏனென்றால் படைப்புகளின் வழியாகவே நாம் வரலாற்றை கற்கிறோம். அந்த வரிசையில் சமீபத்திய வரவு மார் டர்ஹறோனாவின் …