பொள்ளாச்சி சம்பவத்தை அடுத்து  இது போன்ற சம்பவஙகள் நடக்காமல் இருக்க பொள்ளாச்சியைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும், துப்பாக்கி வைத்துக்கொள்வது சட்டரீதியான பிரச்சனை என்பதால் அதனை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.