ஒரு காட்டாறு .

அந்தக் காட்டாற்றின் கரையில் ஒரு மாமரம் இருக்கிறது .

மாமரத்துக்கு நேர்மேலே மழைமேகங்கள் வந்து குவிந்து  கொண்டிருக்கின்றன .

மழை கொட்டுகொட்டுன்னு கொட்டுகிறது .

வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது .

அந்தப் பெரிய காட்டாற்றின் வெள்ளம் மாமரத்தில் மோதுகிறது ,

கரை இடிந்து விழுகிறது .

மாமரத்தின் வேர்களை முடிக்கொண்டிருந்த  மண்ணை வெள்ளம் கொண்டு போய் விட்டது .

மாமரத்தின் வாளை மண்  இல்லாமல்  வெள்ளம் கழுவி வைத்திருக்கிறது  .

மாமரத்தின் உச்சியில் கொழுந்து இலைகளாக இருக்கு ,

மாமரத்தில் குளிர்ந்த காற்று மோதுகிறது .

மரணபயத்தில் மாமரத்தின் கொழுந்து இலைகள் நடுங்குகிறது .

  -அவ்வையார்

  நற்றிணை 381