நான் என் காதலனை விரும்பிக் காதலித்தேன்.

என் காதலனும் என்னை விரும்பிக் காதலித்தான்.

ஒருநாள் நாங்கள் இரண்டுபேரும் மாலைமாற்றித் திருமணம் செய்து கொண்டோம்.

நாங்கள் மாலை மாற்றித் திருமணம் செய்து கொண்டபோது எங்கள் திருமணத்தை நேரில்பார்த்த மனிதப்பய சாட்சிகள் யாரும் இல்லை.

எங்கள் ஊர் கடல்கரைச் சோலைக்குப் பக்கத்தில் உள்ள ஆற்றாங்கரையில் நாங்கள் இருவரும் மாலை மாற்றித் திருமணம் செய்தோம்.

நாங்கள் இருவரும் மாலைமாற்றித் திருமணம் செய்துகொண்டபோது ஆற்றில் ஒரு நாரை மட்டும் நின்றுகொண்டிருந்தது.அந்த நாரையின் கால்கள் தினைத்தட்டையைப் போல் இருந்தது.அந்த நாரை ஆற்றில் ஓடுகிற தண்ணீரில் ‘ஆரல்’ மீன் வருகிறதா என்று அது குனிந்த தலை நிமிராமல் இரை தேடிக்கொண்டிருந்தது.

நாங்கள் இரண்டுபேரும் மாலைமாற்றித் திருமணம் செய்து கொண்டதை அந்த நாரைகூட பார்த்திருக்க வாய்ப்பில்லை.

என் கணவர் என்னை ஏமாற்றிவிட்டு இப்போது என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டார்.

-கபிலர்-

குறுந்தொகை 25