பல்லா நெடுநெறிக் ககன்று வந்தெனப்
புன்றலை மன்றம் நோக்கி மாலை
மடக்கண் குழவி அலவந் தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்
சேயர்தோழி சேய்நாட் டோரே.

நாங்கள் ஒரு மாடு வளர்க்கிறோம்.
எங்கள் மாடு ஒரு கன்றுக்குட்டியை ஈன்றிருக்கிறது.
கன்றுக்குட்டி அழகாக இருக்கிறது.
கன்றுக்குட்டியின் கண்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
மாடு காட்டுக்கு மேயப் போய் இருக்கிறது.
இது சாயங்கால நேரம்.
மாடு வீட்டுக்கு வரும் நேரம் இது.
மாடு இன்னும் வீட்டுக்கு வரவில்லை.
சாயங்காலம் ஆகியும் தாய் வராததால், தாயைக் காணாமல் கன்றுக்குட்டியின் முகம் வாடிவிட்டது.
எங்கள் கன்றுக்குட்டி ஏக்கத்தோடு அது வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

கருவூர்க் கதப்பிள்ளை
குறுந்தொகை 64