வங்காக் கடந்த செங்காற் பேடை
எழாஅலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
குழலிசைக் குரல் குறும்பல அகவும்
குன்றுகெழு சிறுநெறி அரிய என்னாது
மறப்பருங் காதலி யொழிய 5
இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே.

 

ஒரு காட்டில் ஒரு வக்காக் குருவி ஒரு கூடு கட்டியிருக்கிறது. அந்தக் கூட்டில் ஒரு அம்மாக் குருவியும் அதன் குஞ்சுகளும் இருக்கின்றன.

இந்தக் குருவிகளின் கால்கள் செக்கச்செவேர் என்று சிகப்பாய் அழகாக இருக்கிறது. இந்தக் குருவிகளின் குரல் புல்லாங்குழலின் இசையைப் போல் இனிமையாக இருக்கிறது..

கணவன் குருவி இரைதேடப் போய் இருக்கிறது.

அது கூட்டுக்குத் திரும்பி வருகிற நேரம் இது.

ஆனால் அது கூட்டுக்கு இன்னும் திரும்பிவரவில்லை.

கணவன் குருவி இன்னும் கூட்டுக்கு வராததால் பெண்குருவி தன் கணவனை எதிர்பார்த்துக் கொண்டு மனவேதனையோடு அது தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறது.

அந்த நேரம் ஒரு பருந்து அந்தக் குருவிக் கூட்டுக்கு வருகிறது.

தன் குஞ்சுகளையும் தன்னையும் கொல்ல வருகிற பருந்தைப் பார்த்ததும் அம்மாக்குருவி மரண பயத்தில் கூப்பாடுப் போட்டு அழுகிறது. அம்ம அழுவதைப் பார்த்து அதன் குஞ்சுகளும் அம்மையோடு சேர்ந்து அழுகின்றன.

-தூங்க லோசியார்
குறுந்தொகை 151