கடுங்கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்
நெடுந்தேர் இன் ஒலி இரவும் தோன்றா;
இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை;
‘நிறுத்தல் வேண்டும்’ என்றி, நிலைப்ப 5
யாங்ஙனம் விடுமோ மற்றே, மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறிக்,
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய, 10
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா, பைதல் அம் குருகே.

ஒரு சிறிய கிராமம்.

அது ஒரு கடலோரக் கிராமம்.

அந்தச் சிறிய கிராமத்தில் எப்பமும் மீன் மணம் மணந்துக்கிட்டேதான் இருக்கும்.

அந்தக் கிராமத்துக்குச் சொந்தமான ஊர்ப்பொதுச் சத்திரத்தில் உயரமான ஒரு பனை மரம் இருக்கிறது.

அந்தப் பனை மரத்தில் மண்டகுலுங்கக் குலுங்கப் பனை ஓலைகள் ஏராளம் தொங்கிக் கொண்டிருக்கிறது.

அந்தப் பனை மரத்தில் இரண்டு நாரைகள் ஒரு கூடு கெட்டிருக்கு.

இந்த இரண்டு நாரைகளும் விடியறதுக்கு முன்னக்கூட்டியே எந்திரிச்சிரும் இவுக எந்திரிச்சதும் ஜோடியா மீன் வேட்டைக்குப் போவாக. இவுக பொழுது அடைஞ்சதுக்குப் பிறகுதான் கூட்டுக்கு வருவாக..

பெண் நாரைதான் கூட்டுக்கு மொதமொத வரும்.

இன்றைய பகல்மறைந்து விட்டது.

இரவு வேகமாக வந்து கொண்டிருக்கிறது.

அந்தச் சிறிய கடல்கரைக் கிராமம் கசகசன்னு இருட்டாருக்கு.

ஆண் நாரை அந்தப் பனைமரத்துக்கு வந்துருக்கு.

அந்த ஆண்நாரை அதன் சொந்தக் கூட்டில் தன் பெண் தாரையைத் தேடுகிறது.

கூட்டில் பெண் நாரை இல்லை.

பெண் நாரையைக் காணோம்ன்னதும் அந்த ஆண் நாரை சத்தம்போட்டுச் சத்தம் போட்டு அதன் மனைவியைக் கூப்பிடுகிறது.

அந்த இரவு பூராவும் அந்த ஆண் நாரை அழுது அழுது அதன் மனைவியைக் கூப்பிட்டுக் கொண்டே இருந்தது.

பெண் நாரை கூட்டுக்கு வரவே இல்லை.

 

நற்றினை 338
மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரிசாத்தனார்