கொழுஞ் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன்,
செழுங் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கினம்
மீன் குடை நாற்றம் தாங்கல்செல்லாது,
துய்த் தலை மந்தி தும்மும் நாட!
நினக்கும் உரைத்தல் நாணுவல்- இவட்கே 5
நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப்
பசலை ஊரும் அன்னோ; பல் நாள்
அரி அமர் வனப்பின் எம் கானம் நண்ண,
வண்டு எனும் உணராவாகி,
மலர் என மரீஇ வரூஉம், இவள் கண்ணே. 10

பலாப்பழங்கள் பெருசு பெருசாத் தொங்கிக் கொண்டிருக்கிறது. பழங்
ஒரு பலா மரம்.

அது ரொம்பப் பெரிய பலாமரம்.

அந்தப் பெரிய பலாமரத்தில் நீளமான ஒரு கிளை.

நீளமான அந்தக் கிளையில் களின் பளுவைத் தாங்க முடியாமல் அந்தக் கிளை வளைந்து கொண்டிருக்கிறது.

நீளமான அந்தக் கிளையில் ஒரு கொக்கு உக்காந்துக்கிட்டிருக்கு. கொக்கு அதன் கால்களுக்கு அடியில் ஒரு மீனை மிதித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் கொக்கு அந்த மீனைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொத்திக் கொத்தித் தின்று கொண்டிருக்கிறது. கொக்கு மீனைக் கொத்தக் கொத்த மீன் நாத்தம் அந்தப் பலாமரம் முழுதும் மணந்து கொண்டிருக்கிறது.

கொக்கு உக்காந்திருக்கிற அந்தக் கிளைக்கு நேர் எதிரில் நீளமான இன்னொரு கிளை இருக்கு. அதில் ஒரு குரங்கு உக்காந்து கொண்டிருக்கிறது. அது அழகான ஒரு இளம் பெண் குரங்கு. இந்தப் பெண் குரங்குக்கு மீன் மணம் பிடிக்கவில்லை.

ஓயாமல் தும்மிக்கொண்டிருக்கிறது அழகான அந்த இளம் பெண் குரங்கு.

மதுரை மருதன் இளநாகனார்
நற்றிணை 326