ஆதித்த கரிகாலரின் துர் மரணத்திற்குக் காரணமான பாண்டிய தேச ஆபத்துதவிகளையும் அதற்கு உடந்தையாக இருந்த வீரநாராயண சதுர்வேத மங்கல சபையரால் விடுவிக்கப்பட்ட அந்தணர்களையும் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்கிற அனல் பறக்கும் ஆவேசமான வார்த்தைப் போர் வெடித்தது தருமாசனம் என்றழைக்கப்பட்ட அரசவையில்.

அரசவைத் தலைவரும்‌ சுந்தர சோழரின் நம்பிக்கைக்குரிய நண்பருமான அவையின் மூத்த ஆலோசனை தலைவர் பிரம்மராயரோ இந்த விவாதத்தை தவிர்க்குமாறு வேண்டிக்கொள்ள பழுவேட்டரைய இளவரசன் பழுவூர் நக்கனோ ஆவேசங்கொண்டு பேச அடுத்ததாக பாளைய அரசர் நல்லப்ப உடையார் பேச ஆரம்பித்திருந்தார்.

உலகெலாம் ஒளிப்பிழம்பாய்
ஒப்பிலா மிளிரச் செய்து
உயிரெல்லாம் கரம் கூப்பி
தொழுகின்ற அம்பலத்தானே.!
இள வேளை ஏர் பூட்டி
இழு புரவி பவனி வரும்

சோறு வளம் படைத்த
சோழர் தளபதியாம் சுந்தர புதல்வருக்கு.!

கொள்ளிடத்து ஆர்ப்பரிக்கும்
ஆற்றங்கரை நாட்டானின்
செம்மாந்து காவல் காணும்
செயல்திறன் படை கொண்ட
அருள்மொழி தேவருக்கு.!

காலாட்படை தோழ
பாளைய தேசத்தானின்
பைந்தமிழ் வணக்கங்கள்.!

பாளைய தேசம் என்கிற எங்கள் சிறிய நாடானது. தாங்கள் அனுகூலத்தால் ஆக்கப்பட்ட சிறப்புமிக்க சமஸ்தானமாக இன்று விளங்குகிறது. பூமியைப்போலப் பொறுமை உடையவர்களாக எம் மக்களும். புலிக்கொடி இலட்சினைப் போல அழகு கொண்ட எம் பெண்டிரும் தாயைப் போல அன்புள்ள கொண்ட பெருஞ்சேர் பட்டிணத்தார் பலர் வாழும் இந்த தேசத்தின் குடிமகனாக பிறப்பெடுக்க எத்தனை எத்தனை தவம் செய்தோனோ முற்பிறவியில்.

அப்படிப்பட்ட தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சபையோரின் தருமாசன ஆலோசனை அவையில், அடியேனையும் இணைத்துக் கொண்டுள்ளது ஈடில்லா மகிழ்வைத் தருகிறது.

சிறப்பான மேநாட்டு உக்தியுடன் உலகாந்த பண்பாட்டுத் தனித்துவங்கள் உருவாகி வருகிற இந்த வேளையில் மனித மனங்களை செழுமைப்படுத்தும் வல்லமை படைத்து.

தமிழ் இலக்கியங்களை எடுத்தியம்பும் வகையில், மரபுகளில் காலூன்றி நின்று புதுமையை நோக்குவதாக அமையப்பெற்ற இந்த வானதி தேசத்தில் வாழையடி வாழையாக பல போர் வீரர்களை தோற்றுவித்து அறம் வளர்த்து அன்பையும் செழிக்கச் செய்து புண்ணிய பூமியான இந்த சோழ தேசம் செய்த தவப்பயனாய் தழற்புனர் சுடரொளியாக. பாளைய தேசம் ஒன்றிணைந்த சோழதேசத்தின் காலாட்படை தளபதியான நல்லப்ப உடையாரின் நன்றிகளையும் வணக்கத்தினையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

சோழ ராஜ்யத்தின் மிக முக்கியமான மற்றும் இரகசியமான அந்தரங்க விஷயத்தை பாதுகாத்து வரும் காலாட்படையினருக்கு தோழராக விளங்கும் யாம் சோழ தேசத்தின் அரிதான சிற்பிகள் ஈன்றெடுத்த முத்தினை. வீரத்தோடு செதுக்கி. ஒளி வீசும் விக்கிரமாககொண்டு வந்துள்ளேன்.

ஆம். வாணரர் குல அரசர் வந்தியத்தேவர் குந்தவைப் பிராட்டியின் அருமைப்புதல்வரை… ஆனைப் படையணியே அச்சம் கொள்ளும் அளவிற்கு ஒரு மகா வீரனாக மெருக்கேற்றி அழைத்து வந்துள்ளோம்.

ஆண்டுகள் பல உருண்டோடினாலும், தேசத்தின் காவலனான தாங்கள் அன்று முன்மொழிந்த வாக்குறுதியை ஆர்வம் குறையாது இன்று நிறைவேற்றி விட்டதாகவே பெருமை கொள்கிறேன். நாவைந்து ஆண்டுகளுக்கு முன்பு சின்னஞ் சிறாப் பாலகனாக எம் கையில் ஒப்படைத்து இவனை ரகசியம் காத்து இளவரசாக வளர்க்க நீங்கள் இட்ட மொழி விட்டொழியாது காத்து வந்தேன்.

ஏன்.!!

தேசத்தின் ஏனைய யாவொருவரும் இனங்கானாது ஆனைக்கு போர்முறைப் பயின்றுக்கொடுக்கும் ஒரு சிறிய வனாந்திர தேசத்தில் வளர்க்கப்பட்ட அந்த பிஞ்சுப்பாலகனை இன்று அமுது நெஞ்சு கொண்டு ஆரத்தழுவி ஒப்படைக்க வந்துள்ளேன் தாங்களிடம்.

இவ்வாறு நல்லப்ப அரசர் கூறிய கணத்தில், அவையோர் அனைவரும் என்ன விதமான விவாதம் இங்கே நடக்கிறது என்பதில் ஐயம் கொண்டும் நல்லப்ப உடையாரின் பேச்சையும். பேச்சிலிருந்து வரும் மூர்ச்சையடையச் செய்யும் ரகசிய பாஷையும் இலகுவாக அறிய முடியாமலும் இமைகளை மூட மறந்தும் எச்சிலை விழுங்க மறந்தும் சிலை போல பதுமையாகினர்.

அவையில் வசீகரித்திருந்த பிரம்மராயர் முதற்கொண்டு அநபாயர் கண்டராதித்தர் வரையிலும்‌ நல்லப்ப உடையார் என்ன சொல்ல வருகிறார் என்பதை யூகிக்க இயலாது. ஆர்வம் பொங்க அடுத்த வரிகளை கேட்க காதுமடல்களை தீட்டிக்கொண்டிருந்தனர்.

அவையின் மத்தியில் சபையின் முதல்வராக. முறுக்கிய பெருமீசையும் முறுக்கேறிய இரு விழி பார்வைகளும் விழியின் மேல் உள்ள புருவத்தின்பால் போர் காயங்களால் நெற்றியில் ஏற்பட்ட நீண்டதொரு காயத்தின் அடையாள தழும்புகளுக்கு மேல்
கம்பீரமாக நிலைகொண்டு அழகூட்டியது ராஜராஜ பெரு வேந்தனின் கிரீடம்.

கிரீடத்தின் மேல் மத்தியில் வீரத்தின் அடையாளமான சோழ தேசத்தின் இலட்சினையான புலி சின்னம் பிரவாகமாக பளிச்சிட நடுவிலே கீழிருந்து மேலாக ஒரு கோடும் கிரந்த எழுத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கிரீடம் வீரத்திற்கு அழகு சேர்த்தது.

மேலும் தோள் முதல் பாதம் வரை முழுவதுமாக பொருத்தப்பட்டிருந்த சீனப்பட்டால் நெய்யப்பட்ட வேலைப்பாடுள்ள அங்கவஸ்திரத்தோடு.! அகிலத்தையே ஆளப் பிறந்த அரசர் இவர் என்று முத்தமிழ் வார்த்தைகளால் மாலைகள் கோர்த்து அருள்மொழிவர்மரின் கிரீடத்திற்கு அணிவித்தால் அது எப்புகழை அடையுமோ.!

அதுபோல அந்த ராஜசபையில் கம்பீரத்தோடு காட்சியளித்த ராஜராஜன் 300 தேசத்தின் அதிபதி என்றால் ஈடாகுமா இன்னும் உலகத்தில் ஆள வேண்டிய அந்நிய தேசங்கள் எங்கெல்லாம் உள்ளனவோ என மனக்கணக்கு போட்டுக்கொண்டது மேலுள்ள கிரீடம்.

நல்லப்ப தளபதியின் பேச்சு சிறிது இடைவெளி விட்டதுபோல இருந்தாலும் அடுத்து என்ன சொல்ல போகிறார் என்பதை முன்னமே யூகித்தது போல புன்னகை பூவினை முன்னிறு இதழ்களால் சிந்தினார் மா ராஜராஜர் மேலும் வலது புறம் தனது பார்வையை சுழற்றி வந்தியத்தேவனைப் பார்க்க,

சபையோரோடு சகிதமாக அமர்ந்திருந்த தேவனோ பார்வையின் பாஷையை அனுகித்து மேற்பேச்சை தொடரலானார்…

தருமாசன அவையில் வீற்றிருக்கும் எனது சபையோரே வாழிய நின் புகழ் வாழிய மாமன்னர்.

எத்தனையோ பல சரித்திர திருப்பங்களைக் கண்ட இந்த நாடு. இப்போதும்கூட ஏதாவது ஒரு வரலாற்றுத் தொடர்களை எழுதிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வாழ்வியல் சரித்திரத்தில் இந்த அடியேன் வாணர் குல வீரனும் ஒரு பாத்திரமாக புனையப்பட்டு சோழ தேசத்தில் வாழ்ந்து வருவதை நம்ப இயலவில்லை எம்மால்..

என் அன்பு மனையாள். பூம்புகார் இளவரசி குந்தவைக்கும் எனக்கும் அவதரித்த என் அருமைப் புதல்வனை ஆராதித்து தூக்கி வளர்க்க வாய்ப்பில்லாது. ஒரு சித்த பிரமை நிலையை உருவாக்கித் தந்துள்ளது இந்த சோழ குடும்பத்தின் சூழ்நிலை.

நாங்கள் பெற்ற மகனையே வெளியில் மகிழ்வோடு சொல்லி கொண்டாட முடியாத சந்தர்ப்ப சூழ்நிலையில்தான் எங்கள் குழந்தையை ஈன்றெடுத்தோம்.

ஆம். எம் நெஞ்சில் என்றென்றும் நிலைத்திருக்கும் இளவரசர் ஆதித்த கரிகாலரின் துர் மரணம் நடைபெற்ற சில காலங்களில் மகப்பேறு அடைந்தார் பழையாறை அரசிளங்குமரியான குந்தவை.

அப்போது குடும்ப உறவுகளில் ஏற்பட்டிருந்த மனக்கசப்பு மற்றும் சந்தேகப்பார்வைகள் மட்டுமல்லாது. யார் யாரை பழி வாங்க துடிக்கிறார்கள் என எங்களாளேயே யூகிக்க இயலாத மன நிலையில் இருந்தபோது என்ன செய்வதென்று தெரியாது இருந்த நிலையில். ஆபத்பாந்தவனாக எங்கள் வம்சம் தழைத்தோங்க எங்களுக்கு பக்கபலமாக இருந்தவர் இந்த பாளைய நல்லப்ப உடையார்.

மாமன்னர் இலங்கை தீவிலிருந்து வந்த வேளையில் எங்கள் மகனும் பிறந்திருக்க. அப்போது இருந்த குடும்ப பகை காரணமாக இந்த பிஞ்சும் கொல்லப்படலாம் என ஆராய்ந்து மாமன்னர் அருள்மொழிவர்மரால் எடுக்கப்பட்ட முடிவு தான். பாளைய தேசத்தில் சராசரி வைணவ நெறியாளனாக வளர்க்கப்படான்.

இப்போது மாமன்னரை நோக்கி, தொண்டை நாட்டினை தூதுகொண்டு வென்றெடுத்த வெற்றியின் வேந்தே.
சைவமும். வைணவமும். பௌத்தமும். பல வகை சித்தாந்தங்களையும் சிறப்பாக கற்றுள்ள தங்கள் மருமகன் ரங்கமஞ்ச ஆதித்தரை தங்களிடமை ஒப்படைப்பதில் எண்ணிலடங்கா சந்தோசம் அடைகிறேன் என கூறிய வந்தியத்தேவர் பார்திபேந்திர பல்லவரை நோக்க.

பல்லவ தொண்டைமானோ…பாளைய நல்லப்ப உடையாரை உற்று நோக்க…
அவையின் முன்னவர் பிரம்மராயருக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்த அந்த இளைஞனை நோக்கினார் நல்லப்பர்…

சோழ தேச இளவரசே சற்று இங்கே வாரும்‌ என அந்த இளைஞனை நோக்கி நல்லப்பர் அழைக்க….அவையில் கூடியிருந்த அனைவரும் பிரம்மராயரையும் அந்த இளைஞரையும் மாறி மாறி நோக்க..

புன்னகை ததும்ப புதுவாற்றின் தடாகத்தில் பாயும் நன்னீர் போல….
வீரத்தை நெஞ்சில் ஏற்றி விவேகத்தை சிந்தையில் வீற்றி. பவ்யமான பாவணையோடு நல்லப்பரை நோக்கி அந்த இளைஞன் நடக்க..
தனக்குப் பின்னால் சாமரம் வீசிக்கொண்டிருந்த இந்த இளைஞனா வந்தியத்தேவனின் புதல்வன் என தனது யூகங்களின் புரவிகளை பறக்கவிட்டார் ராயர்….

ராயருக்கு இணையாக மூத்த ஆலோசகராக வீற்றிருந்த கண்டராதித்த மதுராந்தகத் தேவரோ. என் அண்ணன் ராஜராஜன் இவ்வளவு கூர்மையுள்ள அதிபுத்திசாலி ஆற்றல் கொண்டவனா.?
ராஜதந்திரத்தை கரைத்து குடித்திருப்பான் போலும் என எண்ணிக்கொண்டார்.

அருகில் இருந்த அநபாயரோ இது என்ன மாய மந்திரமா என தனக்குள்ளே கேள்வியையும் கேட்டு. மந்திரமில்லை மாமன்னரின் லீலை போலும் என்று ஆறுதலும் கூறிக்கொண்டார்…  கையில் வைத்திருந்த‌ வீர வாளை மேல்நோக்கி உயர்த்திய வந்தியத்தேவன். வான் முட்டும் புகழ் கொண்ட சோழதேசத்தின் புதிய தளபதி. குந்தவை பிராட்டியின் புத்திர சீலன். என் தமையன் ..இதோ இந்த ஆதித்தன் தான் என மனமுருக சத்தம் போட.
நடந்து வந்து கொண்டிருந்த ஆதித்தனோ..திகைப்பில்லாது. கூச்சமில்லாது.பயமின்றி அவையில் அனைவர் முன்னும் ஆரவாரமின்றி. அடக்கத்தோடு நின்றிருக்க……

அருள்மொழிவர்மர்… ஆசனத்தில் இருந்து இறங்கினார்.
இரண்டு மூன்று படிகளை பாதம் அழுத்தி இறங்கினாலும்..பார்வை மட்டும் ஆதித்தனை விட்டு விலகவில்லை..

ஆஹா…
பாளையத்தேவரே….
நாளைய தேசத்தின் சரித்திரத்தை இன்றே தஞ்சையில் மலரச்செய்து விட்டீர்கள் நல்லப்பரே..எனதருமை மருமகனை‌ மண் பேசும் மணிமுடிச்சோழருக்கு ஈடாக உருவாக்கியுள்ளீர்.! போங்கள்…!
என் அருமை மருமகனே…உன் மாமனைக்காண இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்டாயா. வா என் அருகில் என ஆதித்தனை அழைக்க….

பாசப்போராட்டித்தில் ஒரு பக்கம் தந்தையும் மறுபக்கம் தாய்மாமன் என தான் ஒரு குழந்தைபோலவே மாறியுள்ளதையும்‌ கண்கள் இரண்டும் சொட்டுநீரை பாயச்செய்ய..

எனதருமை மாமன்னருக்கு இந்த வாணரர் குல அடியேனின் மெய் வணக்கங்கள் என அருள்மொழிவர்மரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தான் இளைஞன் ஆதித்தன்…
அடுத்த க்ஷணமே காலில் விழுந்த ஆதித்தனின் இரு தோள்களையும் பிடித்து தூக்கி.

பட்டத்து யானையாக இந்த மஹா தேசத்தின் ராஜ வீதிகளில் ஜெயகோஷத்தோடு பவனி வருக.
தஞ்சை நகரெங்கும் செங்கோல் படை சூழ வலம் வருக.
என் தமக்கையின் தலப்புதல்வனே
சங்கம் முழங்கும் கருணையாக அடியார்களின் பக்தனாக வந்திடுக.
என ரங்கமஞ்ச ஆதித்தனை வாழ்த்தி சிற்றுரை ஆற்றினார்.

நாளின் பகல் பொழுது மறைந்துவிட்டதை கூட மறந்துவிட்டனர் அனைவரும்.

இரவு மலர்ந்து பெருமண்டபம் முழுவதும் தீப்பந்தங்கள் ஏற்றயதைக் கூட கவனிக்காது ஆச்சரியமும் அதிசயமும் கலந்த பாசப் பகிர்வு நடைபெற்ற அவைக்கூட்டத்தில் பேசிப் பங்கெடுத்த சபையோரும் அவையோரும் இனிய இந்த தினத்தை எப்போதும் மறந்திட முடியாது.

மெய்க்கீர்த்திகள் விளக்கேற்றிய அந்த வேளையில் சபையின் திசையெங்கும் பட்டொளி வீசி பரவியது மணம் கமழும் எண்ணெய் தீபங்கள்.

மாட மாளிகையோடும் கோபுர தரிசனத்தோடும் தஞ்சை நகரை அழகாக்கும் அவதனிப்பில், இரவு ஒளியினில் சந்திரனோடு போட்டியிட்டு ஓடத்தொடங்கினர் நகர வீதியின் சிறார்கள்.

அரண்மனை வாயிற் கதவுகள் இன்னமும் யாருடைய வருகைக்காகவோ காத்திருப்பது போல.
பெருங்கதவுகளும் கதவுகளை ஒட்டிய வேளக்கார வீரர்களும் பூமாலை மஞ்சங்களோடும் வாத்திய முழக்க குழுக்களோடும் காத்திருக்க.
வானதி மாளிகையிலோ. பட்டத்து ராணியான உலகமாதேவியாரும் புதல்விகள் இருவர் மற்றும் ராஜராரின் இளைய புதல்வர் மற்றும் உத்தம சோழனின் வாரிசுகளும்.மதுராந்தகனின் மனைவிமார்களும் குழந்தைகளும் இன்னும் குடும்பம் சகிதமாக பழையாறையில் இருந்து வரவிருக்கும் சுந்தர சோழரின் புதல்வி.அரசிளங்குமரியான குந்தவையின் வரவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தருமாசன சபைக்கு போன ராஜராஜரும் கூட இன்னமும் வராததை எண்ணி, அண்ணி நேராக சபைக்கு சென்றிருப்பாரோ. அவரது மகனைக் கண்டு ஆரத்தழுவி ஆனந்தமாகி இருப்பாரோ அவரது கணவரான வந்தியத்தேவரும் கூட இன்னமும் நிலா முற்றத்தை அடையவில்லையே. ஏனிந்த தாமதம்‌ என ஆர்வம் அதிகரித்திருந்தது கோடும்பாளூர் மாதேவியாருக்கு.

வாயிற் பெருங்கதவுகளுக்கு அருகே மேளதாளங்கள் முழங்க யானை மேல் அமர்ந்து அன்ன நடையாக ஆர்ப்பரிக்க வருகை புரிந்தாள் ராஜராஜரின் தமக்கை குந்தவை தேவியார்  கலியின் வல்லமையால் காரிருள் போக்க வந்த சோழ குல வீர மங்கையவள்.

ஷத்ர தர்மத்தை நிலைநாட்ட உத்தம சோழனையே எதிர்த்த வீரபிராட்டியார் என தேசத்தின் குடிகளால் அழைக்கப்படுபவள்.
பல காலங்களுக்கு பிறகு இன்று இந்த தஞ்சை அரண்மனைக்கு வருகை புரிந்துள்ளார்.

வானதி மாடம் நிலா முற்றம் வழியாக லஷ்மி விலாசத்தை அடைந்த குந்தவை அங்கு வாயிலில் ஆர்த்தி எடுக்க காத்திருந்த கொடும்பாளூர் தேவியரை கண்டதும் ஓடிப்போய் கட்டிக்கொண்டாள்.

அத்தையின் வருகையால் அரண்மனையே திருவிழாக்கோலம் பூண்டதுபோல அங்கிருந்த இளஞ் சிட்டுக்கள் துள்ளிக்குதித்தோடியது.

குந்தவை பிராட்டியரின் வருகையை அறிந்துகொண்ட ராஜராஜனோ வந்தியத்தேவன் மற்றும் ரங்கமஞ்ச ஆதித்தனுடன் லஷ்மி விலாசத்தை அடைந்திருந்தார்.

பல்லாண்டு கழித்து தான் பெற்ற மகனை‌ மிகப்பெரிய வீரனாக பார்த்த அந்த தாயின் விழிகளில் ஆனந்த கண்ணீரில் ஆர்ப்பரிக்க.
குடும்பம் முழுவதும் குதூகலத்துடன் குழுமியிருந்தனர்.

முந்தைய தொடர்: https://bit.ly/2X7dLTg