உலகம் முழுதும் உறங்கிக்கொண்டிருந்த அதிகாலை வேளையில். சோழ மண்டலத்தின் தலைநகரான தஞ்சை நகரம் விழிப்புடனும் பரபரப்புடனும் நகர்ந்து கொண்டிருந்தது. சோழ தேச அனைத்துப் படையினரும் தஞ்சை நகரில் காலை வேளையில் நடக்க இருக்கின்ற பெருவுடையார் கோவில் கும்பாபிஷேக பெருவிழாவினை காண. சோழ வள தேச மக்கள் மாட்டு வண்டிகளிலும் குதிரை வண்டிகளிலும், பாத யாத்திரீகர்களாகவும். சாரை சாரையாக நகரை நோக்கி படையெடுத்துக் கொண்டிருந்தனர்.
அகிலம் முழுவதையும் தன் குடைக்கீழ் கொண்டுவந்து சோழ நாட்டின் வளர்ச்சியையும்,நாகரிகத்தையும் காலத்தால் அசைக்கமுடியாத படி வரலாற்றில் பதிவுசெய்ய வேண்டும் என்ற அந்த சோழ வர்ம பேரரசர் அருள்மொழிவர்மரின் கலைத்திறனை இன்று உலகம் வியக்கும் அளவிற்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது தஞ்சை பெருவுடையார் கோவில் மகா கும்பாபிஷேக திருவிழா.
நகரை நோக்கி வந்துகொண்டிருக்கும் மக்களின் களைப்பைப் போக்க உற்சாக பானங்கள் ஒவ்வொரு தெரு முக்கிலும் கொடுக்கப்பட்டு நகருக்குள் வரவேற்கப்பட்டார்கள். பெருவுடையார் சன்னதியின் வாயிலில் சங்கீத ஒலிகளின் சம்பாஷனைகள் ஆர்ப்பரிக்கத் தொடங்கியிருந்தன. இசை ஒலிக்கும் படையினரும் சோழப்படையின் அனைத்துப் பிரிவினரும் பெருவுடையார் கோவிலை சுற்றிலும் அரண்போல குழுமியிருந்து வருகின்ற பார்வையாளர்களுக்கு வாழ்த்தொலி கீதங்களை இசைத்துகொண்டிருந்தனர்.
முறையே. மாமன்னரும் அவரது குடும்பத்தாரும் ஏனைய உயர் பதவியில் உள்ள அரச வம்சத்தாரும் சோழ மண்டலத்தில் உள்ள அனைத்து சிற்றரசர்களும் வீரம் செறிந்த புலிக்கொடிகளோடு நுழைவு வாயில் வழியாக பெருவுடையார் சன்னதியை அடைந்து உள்நோக்கி சென்றனர். படைத்தளபதிகளும் இசை முழங்க இந்த வேலையில் தரிசித்த மக்கள் உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு மகா கட்டிடக்கலையை உருவாக்கிய மாமன்னரின் புகழை ஓங்கி பறைசாற்றி வாழ்த்தொலி பாடினர்.
சிவனடியார்கள், வைணவர்கள், பௌத்த மத குருக்கள் இன்னும் தூர தேசத்து மன்னர்களும் மற்றும் மண்டல அதிராசராச இராசராசப் பாண்டி செயங்கொண்ட சோழ,சோழ நிகரிலி மலை மும்முடி வேங்கை என எட்டு மண்டலத்தாரும். மேலும் கோட்ட, கூற்றத்தின் நிர்வாக சபையினரும் சிறப்பு அழைப்பாளர்களுக்கான மாடங்களில் அமரவைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
மாமன்னர் ராஜராஜ சோழர் அருள்மொழிவர்மர் தன் குடும்பம் மற்றும் அரச சபையினர் புடைசூழ, அதிகாலை வேளையில் கம்பீர நடையோடு அர்த்த மண்டபம் வழியே தெற்கு வாயிலுக்கு வரும்வழியில், பெருவுடையார் சன்னதியில் வீற்றிருந்த நந்தியைத் தொட்டு வணங்கி கருவறை நோக்கி நகர! அங்கே கம்பீரமாக வீற்றிருக்கும் கல்வெட்டு நம்மை வரவேற்கிறது.
“நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்தக் கல்லிலே வெட்டி அருள்க….” என பொறிக்கப்பட்ட கோவிலின் கூட்டமைப்பிற்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி கூறும் அந்தக் கல்வெட்டினைக் கடந்து உள்ளே செல்கையில்.
30 வகையான மங்கள இசை முழக்கங்கள் பெருவுடையார் சன்னதி முழுவதும் இசைத்து! மாபெரும் ஒரு அதிகாலை விடியலை அழைத்துக் கொண்டிருந்தது.
முப்பத்தி முக்கோடி தேவர்களும் சோழ வம்சத்தின் வீரம் செறிந்த வெற்றி மன்னர்களும் வந்திருந்து வாழ்த்தும் படியாக இசைக்கப்பட்டது இசைக் கருவிகள்.
ஆயிரக்கணக்கான யானைகளும்,
குதிரைகளும்,1000க்கும் மேற்பட்ட சிற்பிகள், ஓவியர்கள்,ஆசாரிகள், கொல்லர்கள், நடன கலைஞர்கள், சமையல் வேலையாட்கள், கற்களை பிளக்கும் வீரர்கள் என ஒரு மாபெரும் படையே கடந்த மூன்று நான்கு ஆண்டுகளாக இந்த விண் முட்டும் கோவிலை எழுப்ப விழிப்போடு அரசருக்கு உற்ற துணையோடும் உறுதுணையாக செயல்பட்டு கொண்டிருந்ததின் இறுதி நாளான இன்று.
மக்கள் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக பெருகிக்கொண்டே தஞ்சை நகரை அடைந்து ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகளைப்போல நகர வீதிகளை அடைத்துக்கொண்டு! திருவிழாவிற்கு மக்களும் மாமன்னர்களும் இந்த அதிகாலை வேளையில் தங்கள் குடும்பம் சகிதம் வந்திருந்து விழாவினைச் சிறப்பித்து கொண்டிருந்தனர்.
கோவிலின் உள்ளே அர்ச்சனை தீப ஆராதனை. லட்சார்ச்சனை என கோவில் கருவறை பிரதிஷ்டை வெகு விமரிசையாக சைவ சமய தமிழ் திரு மந்திரங்கள் ஓத. பன்னிரு ஆழ்வார்களும் சைவ சமயம் தழைத்தோங்க சோழர் காலத்திய அப்பர் திருஞான சம்பந்தரும் இந்த பிரதிஷ்டை திருவிழாவில் ஒரு சிறப்பு விருந்தினராக விருந்தினர் மாடத்தில் அமர்ந்திருந்தார்.
மேலும் தெரிந்த கைக்கோளப்படை, கைக்கோளப் பெறும் படை, வேளக்கார படை, முனையதரையர் படை, உடையார்பாளையம் காலாட்படை மற்றும் அறுபதனாயிரம் யானைப் படைகளைப் பெற்ற யானைப்படையின் பல பிரிவுகளும் குதிரைச் சேவகர் என்றழைக்கப்பட்ட குதிரைப்படையும் தேர்ப்படை, காலாட்படையின் துணைப்படை என இன்னும் வில் மற்றும் வாள் வீச்சு வீரர்களும் மேலும் மருத்துவ படையினரும்.
கடற்படை பிரிவில் இருந்த கண்ணி, தளம், மண்டலம், கனம், அணி போன்ற படைத்தளபதிகளும் பற்பல படைப்பிரிவுகளின் தலைவர்களும் தளபதிகளும் சேனாதிபதிகளும் அணிபதிகளும் தங்களின் அங்கிகளோடு வெற்றி முரசு ஒலிக்க ஒவ்வொருவராக வாழ்த்தொலி பாடி பெருவுடையார் சன்னதிக்கு அழைக்கப்பட்டனர்.
கோவிலின் கர்ப்பக் கிரகத்திற்கு நேர் எதிரே அமைக்கப்பட்டிருந்த பெரிய விழா மேடையில் அருள்மொழிவர்மர் மற்றும் அவரது துணைவியார் தந்தி சக்தி விடங்கியும். மகள்கள் மாதேவடிகள். குந்தவையும் மற்றும் ஒருவரும் மகன் ராசேந்திர சோழனும் அக்கா குந்தவை என தங்கள் குடும்ப சகிதத்தோடு அமர்ந்து பூஜை புனஸ்காரம் வேத மந்திரங்கள் சாஸ்திர சம்பிரதாயங்கள் பாட! வேதவிற்பன்னர்களும் சைவசமய திருமந்திரங்கள் ஓத பெருவுடையார் கோவில் சித்திரை பெருவிழா வெகு சீரும் சிறப்புமாக சோழமண்டலமே திரண்டு வந்து அருள்மொழிவர்மரை வாழ்த்துக்கூற!
கோவிலின் முன்னே கம்பீரமாக நின்ற நந்தியின் அருளாசியோடும் மாமன்னர் அருள்மொழிவர்மரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தட்சிண மேரு விடங்கரான ஆடவல்லர் செப்புத் திருமேனிகளும் மற்றும் கோவிலில் பிரதிஷ்டை பெருவிழா நடைபெற்ற அந்த வேலையில். எக்காளம் அடித்தும் முழாம் ஊதியும் சிறுபறை பெறும்பரை என முப்பது வகை வாத்தியங்களும் சேர்க்கப் பெற்ற அந்த வேலையில். கீழ் வானத்தின் அடியிலிருந்து மேல்நோக்கி எட்டிப் பார்த்து. சோழத்தில் இசைக்கும் இசைகளை ரசிக்க.! தஞ்சை பெருவுடையார் கோவிலின் பிரதிஷ்டையை காண.! மேல் நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தான் அழகு கதிரவன்
தங்களது குடும்பம் சகிதத்தோடு கோவிலின் கருவறைக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள மேடையில் அமர்ந்திருந்த ராஜ ராஜனின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் சென்று யாக குண்டத்தில் பூக்கள் மற்றும் நெய்வேத்திய சம்பிரதாய சடங்குகளை செய்தனர். முறையே தனது அக்கா. மைத்துனர் வந்தியத்தேவர் என ஒவ்வொருவராக தங்கள் முறையாக வந்து அக்னி குண்டத்திற்கு வந்து சம்பிரதாய நடைமுறைகளை நிறைவேற்றி மறுபடியும் மேடைக்கு சென்று தங்களது இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.
மேடையின் இருக்கையில் நடுவாக ராஜராஜர் அமர்ந்திருக்க.
வலப்பக்கம் மனைவி மக்கள் என குடும்பமும். இடப்பக்கம் தமக்கை மைத்துனர் அரச மரபினர் சிற்றரசர்கள் தளபதிகள் என ஒரு புறமும் விழா மாடத்தில் அமர்ந்து யாக குண்ட வேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.
எதேச்சையாக திரும்பிய ராஜராஜர் குந்தவை தேவியின் அருகில் வீரம் பொருந்திய முகத்தோடு போர்வீரக் கலையோடு கட்டுமஸ்தான கம்பீரமான ஒரு இளைஞன் நின்றதையும் கவனிக்க தவறவில்லை
ராஜராஜன் அந்த இளைஞனை கவனித்த அதேவேளையில் இடைமறித்த வல்லவரையர் வந்தியத்தேவன். மன்னா அடுத்தமுறை நீங்கள்தான் போக வேண்டும் என யாகசாலை அக்கினி குண்டத்திற்க்கு போக சொல்லி அரசரின் கவனத்தை திசை திருப்பினார்.
கவனம் சிதறிய மாமன்னர் முறுக்கோடு எழுந்து அங்கியை சரி செய்து கொண்டு எதிரே இருந்த அக்னி குண்ட யாகசாலையை நோக்கி நடந்தார்.
இதற்கிடையே நேற்று கழுகு வானத்தில் நடந்த அய்யனார் பள்ளிப்படை கற்றளி கோவிலின் இரண்டாம் நாள் திருவிழாவில் பங்கேற்ற வல்லவரும் பார்த்திபேந்திரனும் அன்றைய நாளின் திருவிழாவை முடித்து கொண்டு தஞ்சைக்கு கிளம்பையில். அதிகாலை வேளையில் நடந்த சிறு அச்சுறுத்தலை மனதில் எண்ணி. ரெங்க மஞ்ச ஆதித்தனையும் தங்களுடனே அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கே குந்தவை தேவியார் அருகிலே ஆத்மார்த்தமாக ஒரு போர்வீரனின் தோற்றத்தோடு நின்று கொண்டிருந்தது ரங்க மஞ்ச ஆதித்தனே.
தன் மகன் தனக்கு அருகில் வெகு காலத்திற்குப் பிறகு நிற்பதை அறிந்த குந்தவை பிராட்டியாரும் வந்தியத்தேவனும் அகமகிழ்ந்தும் உள்ளம் மகிழ்ந்தோம் ஒப்பற்ற சந்தோஷத்தோடு மாடத்தில் அமர்ந்திருந்தனர்.
காலை வேளை சூரியன் மெதுமெதுவாக கீழ் வானத்தில் இருந்து மேல் நோக்கி நடக்க ஆரம்பிக்க.! இயல் இசை நாடகம் அரங்கோடு ஆர்ப்பரித்து. கோவில் கருவறை பிரதிஷ்டை அக்னி குண்ட யாகத்தோடும். பன்னிருதிருமுறை தமிழ் ஓதுவார்களின் பாடலோடும். சமஸ்கிருத இறை பணி ஓதுவார்களின் பாடலோடும் நிறைவு வேளையை நெருங்கிக் கொண்டிருக்க.
ஒவ்வொரு சில நாழிகைக்கு பிறகும் முழாம் என முப்பத்தி முக்கோடி இசைக் கருவிகள் முழங்கி பெருவுடையார் கோவிலை அதிரச் செய்து.! வானில் உலா வரும் இந்திரன் சந்திரன் போன்றோரை கூட கீழே இறங்கி வந்து தரிசித்துச் செல்லும் அளவிற்கு இசையும் இறையும் இரண்டறக் கலந்து பயப்பட்டன வானில் சூரியனின் ஒளிக்கு நிகராக.
மேலும் பூசகர்களும், சிற்பிகளும் தேவார ஓதுவார்களும், 400க்கும் மேற்பட்ட நடன மாதர்களும் நடனமாடி வந்தோருக்கு மகிழ்வான தருணங்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அக்னி குண்ட யாகசாலை முடிவுற்ற பின்னர் கோவிலின் விமானம் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னெடுக்கப்பட்டன.
கோவிலின் நந்தி சிலையின் அருகே கோபுரத்திற்கு நெருங்கி மரங்களால் கட்டப்பட்டிருந்த பெரிய சாரம் கோவில் கர்ப்பகிரகத்திற்கு நேர் உச்சியில் உள்ள விமானத்தில் போய் முடிந்தன. அந்த மரங்களால் அமைக்கப்பட்ட ஏணியில் ஏற.! உயரே உள்ள “இடைச்சிக்கல்” என பெயர் வைக்கப்பட்ட கோபுர உச்சியில் இருக்கும் விமானத்தை அடைந்து விடலாம்.
கோவில் கருவறையிலிருந்து குடும்பம் தளபதிகள் அரச சபையினர் சகிதமாக கம்பீர நடையோடு வெளியே வந்த ராஜராஜர். விமானத்தின் மேலே ஏற அமைக்கப்பட்டிருந்த மரத்தால் ஆன சாரத்தில் ஏற தொடங்க. கோவில் மதில்களில் மேல் நின்று இருந்த இசை வேந்தர்கள். தங்கள் இசையினை வாசிக்க. மன்னர் கோபுரவிமானம் ஏறும் பயணத்தை வெகு விமரிசையாக அறிவித்துக் கொண்டு இருந்தனர் கட்டுக்காவலையும் மீறி பார்வையாளராக வந்திருந்த பல்லாயிரம் மக்களுக்கு.
ஒவ்வொரு படிகளாக அடி எடுத்து வைத்த ராஜராஜனும் அவருக்கு உற்ற துணையாக சென்ற பழந்தமிழ் அரச மரபினரும். சில நாழிகைகளில் கோவில் கோபுர உச்சியை அடைந்து விமானத்தினைச் சுற்றிலும் மேடை போல அமைக்கப்பட்டு இருந்த அந்த திடலில் பாதுகாப்பாக நின்று கோவிலை சுற்றிலும் பார்த்த போது மெய்மறந்து ஆனந்த களிப்போடு இரு கைகளையும் இணைத்து கும்பிட்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும் சுற்றி இருந்த அனைத்து படையினருக்கும் தனது ஆத்மார்த்தமான நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து ஆனந்த கண்ணீர் வடித்தார் ராஜராஜர் அருள்மொழிவர்மர்.
கங்கை காவிரி நதிகளில் இருந்து பொற்குடங்களில் எடுத்து வரப்பட்ட நீர்களும் கோவிலுக்கு அருகே அமைந்துள்ள புதுஆற்றின் பொன்னி நதியின் நீர் நிரம்பிய மாவிலைத் தோரணங்களால் நிரப்பப்பட்ட அந்த குடம் ராஜராஜர் கையில் தலைமை குடமுழுக்கு அர்ச்சகர் அவர்களின் கையினால் கொடுக்கப்பட்டது.
கோவிலுக்கு கீழே நந்தி சிலைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குடும்ப உறுப்பினர்கள் அரச சபையினர் வீர தளபதிகள் வெற்றி வேந்தர்கள் சிற்றரசர்கள் வேற்று நாட்டு அரசர்கள் என அனைவரும் குடமுழுக்கு கும்பாபிஷேக நிகழ்வில் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.
மங்கள இசை நாதஸ்வரம் கெட்டிமேளம் சிறுபறை பெரும்பறை கலரி இன்னும் எண்ணற்ற இசைக்கருவிகள் இடைவிடாது முழங்கி இறை மந்திரத்தையும் இசை முழக்கத்தையும் முழங்கிக் கொண்டிருந்தது.
வேல் வேல் வெற்றிவேல். சிவசிவ. சிவாய நம. நமச்சிவாய போற்றி. நமச்சிவாய போற்றி. என்ற மந்திரங்கள் விண்ணதிர கோவிலை சுற்றிலும் மக்களால் திரும்பத் திரும்பக் கூற மேலிருந்த சோழ மன்னருக்கு புளங்காகிதம் அடையும் அளவிற்கு குரல் ஒலிக்கப்பட்டது.
தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என சிவனாரின் ஐந்து வடிவங்களைப் பெற்றிருந்த 216 அடி உயர புஷ்பக விமான கோபுரத்தில் நின்றிருந்த ராஜராஜ சோழர் கையில் பிடித்திருந்த கங்கை மற்றும் பொன்னி நதியின் நீர் உள்ள மாவிலை நிரம்பியிருந்த குடத்தினை மக்களுக்கு காட்டி. புண்ணிய தீர்த்தத்தை கோவிலின் கோபுர உச்சியில் ஊற்ற.!
மேலிருந்து பயணப்பட்ட நீரானது கீழ்நோக்கி ஒளியின் வேகத்தைவிட பயணித்து கோபுரத்திற்கு அருகில் இருந்த அனைவரும் மேலும் துளித்துளியாக பட்டு உடலினை சிலிர்க்க வைத்தன சிவ பக்தியும் இறை கலந்த தண்ணீர்த் துளிகள்.
குழுமியிருந்த மக்களும் மாந்தர்களும் இன்னும் குறிஞ்சி. முல்லை. மருதம். நெய்தல் பாலை என அனைத்து தரப்பட்ட மக்களாலும் நகர தெருக்கள் எல்லாவற்றிலும் ஜேஜே என கூட்டமாயிருந்தது. குதிரைகளும். குதிரை பூட்டிய ரதங்களும் பூமி அதிரும்படி சத்தமிட்டுக் கொண்டு சென்றன. கரிய குன்றுகள் அசைந்து வருவது போல் நிதானமாகவும் கம்பீரமாகவும் நடந்து பாதுகாப்பு செய்து கொண்டிருந்த யானைகளின் மணி ஓசை நாலாபுறங்களிலும் கேட்டது! அனைத்து மக்களும் ஒருசேர அரோகராஅரோகரா.! வேல் வேல் வெற்றிவேல்.! சிவாய போற்றி நமச்சிவாய போற்றி.! என பலர் பலவித நாமங்களையும் ஒலித்து கும்பாபிஷேக நிகழ்வினை ஒருங்கிணைத்து கொண்டிருந்தனர்.
கீழிருந்த திருஞான சம்பந்தரும் சிவபக்தியில் ஐக்கியமாகி உடல் முழுவதும் சிலிர்த்தெழுந்து.
நஞ்சைக் கழனிகளின் நாயகனே நீ வாழ்க !!
நடனமிடும் பொன்னி காவலனே நீ வாழ்க !!
தஞ்சமென வருவோர்க்கு தஞ்சம் வழங்குகின்ற
தஞ்சை பெருவுடைய தலைவனே நீ வாழ்க !!!
வெஞ்சமரில் வெற்றி கண்டு
அஞ்சலிக்கும் மக்களுக்கோர் விண்ணுயர்
பெரிய கோவில் தந்த வீர ராஜா ராஜா சோழனே நீ வாழ்க! !!!
மூன்று நிலங்களுக்கும் முடி சூடிய முத்தமிழே வாழ்க.!
புவனம் முழுதும் புலி பொறித்த கொடி நாட்டிய நந்திவர்ம நாயகனே வாழ்க.!
தோன்றும் இடங்களில் தன் புகழ் நாட்டிய.
சோழர் பரம்பரைக்கே வழி காட்டிய.
ஆய கலைகள் பல நிலை நாடிய.
தமிழ் ஆளும் அறிஞருக்கு சபை கூட்டிய. தூயவர் தமை வாழ்வில் துணை கூட்டிய சோழனே.!
தொட்டதை எல்லாம் பொண்னாக்கினாய். சோழ மண்ணாக்கினாய்.
அறம் காக்க அறச் சாலை உருவாக்கினாய் மரம் காக்க படை சாலை உருவாக்கினாய் உயர் கல்விக் கூடங்கள் உருவாக்கினாய்
பக்தி வளர்ந்திட ஆலயம் உருவாக்கினாய் சோழனே உருவாக்கினாய்.!
என சிவநாமத்தையும் சோழ ராஜ்யத்தைமும் பாட.
கூட குழுமியிருந்தவர்களும் இடையிடையே சிவாய போற்றியே சிவாய போற்றியே ராஜராஜர் வாழ்க என கரகோஷம் எழுப்ப. உச்சி வேளையில் நின்றிருந்த உதய சூரியன் மெய்மறந்து பயணித்தான் வான்வெளியில் சோழத்தின் சுரம் கண்டு .
பெரிய கோவிலின் வரலாற்று சிறப்புகள்:-
நேர் கோட்டில் துல்லியமாக கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் கோபுரம். தமிழர்களின் ஒப்பற்ற கட்டடக் கலைக்கு சான்று!
தஞ்சை பெரிய கோவில் ஆயிரமாயிரம் அதிசயங்களை தனகத்தே கொண்டு கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது. இந்த அளவு துல்லியத்துடன் பெரிய கோவிலை எழுப்பிய சோழர்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை. கட்டிடக்கலையில் மட்டுமல்லாது கடல் கடந்து வாணிபம்.இரசவாதம், மற்றும் மூலிகை வைத்தியம்.சித்த மருத்துவம்.நாடி வைத்தியம் கோள்களைப்பற்றிய ஆராய்ச்சி .கணக்கதிகாரம் ஜோதிடம், பஞ்சாங்க ஆராய்ச்சி.
மற்றும் குடவரைக் கோவில்கள்.
மேலும் உலோக உபகரணங்கள், ஆபரண அணிகலன்கள் மற்றும் சோழ இலட்சினை பொறிக்கப்பட்ட நாணயங்கள் தமிழ் இலக்கியங்கள்.வரி வசூலித்து திறம்பட ஆட்சி என அத்தனைத் துறைகளிலும் ராஜராஜ சோழனின் ஆட்சி காலம் தான் தமிழ் வரலாற்றின் பொற்காலம்.
இவ்வளவு வரலாற்று பெருமைகள் வாய்ந்த சோழ தேசத்தின் தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம் வெகு சீரும் சிறப்புமாக இன்றைய தினம் நடந்து முடிந்துள்ளது.இந்த திருவிழாவிற்கு வருகை புரிந்த வாசகர்களான உங்களுக்கும். உங்கள் எண்ண ஓட்டங்களுக்கும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சோழத்தின் புகழ்பாடும் பெரிய கோவில் விழா கமிட்டியினர் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது இந்த பாளைய தேச குழு.