தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் கும்பாபிஷேக விழா நிகழ்வானது வெகு விமரிசையாக நடைபெற்று  அந்திவேளையை நெருங்கிக்கொண்டிருந்தது.

ஊர் முழுக்க உற்றார் உறவினர்கள். ராஜ்யத்தின் படைகள் மற்றும் தேசத்தின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள மக்கள் புடைசூழ தஞ்சை நகரம் விழாக்கோலம் பூண்டு விண்ணகம் போல ஒளிர்ந்தது. நகர வீதிகள் எங்கும் இருபுறமும் வேடிக்கை நிகழ்ச்சிகளும். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. சாலையின் ஒருபுறம் விளையாட்டு பொருட்களும். மண்பாண்ட பொருட்களும். ஓலைப் பாய், வீட்டு உபயோக பொருட்களும். மறுபுறம் சிறுவர்களுக்கான மரப்பாச்சி பொம்மைகள், பனை நுங்கு வண்டி, மர பொம்மைகள் என திருவிழாவின் நிகழ்ச்சியில் வீதிகளும் இணைந்து கொண்டதால் தஞ்சை நகரெங்கும் விழாக்கோலம் பூண்டது.

பெருவுடையார் கோவில் வடக்கு ரத வாயிலின் வழியாக  ராஜராஜர் மற்றும் அரசபை முன்னோர்கள் புடைசூழ வெளியேற.  மன்னரை அரணமைத்து வேளக்காரப் படையினர். காலாட் தோழர் படையினர். இருபுறமும் பாதுகாப்பு அரணோடு பயணப்பட்ட.
அந்திசாயும் வேளையில் மாமன்னரை நேரில் கண்ட மக்கள் புளங்காகிதம் அடைந்து. மாவீரர் ராஜராஜர் வாழ்க.! மாமன்னர் வாழ்க வாழ்க.! சிவாய போற்றி.! நமச்சிவாய போற்றி போன்ற ஒத்த கோஷங்களை எழுப்பி வாழ்த்துக்களுடன் வழியனுப்பி கொண்டிருந்தனர்.

சோழத்தின் தலைவன் வீதியில் உலாப் போக. அவரைக் காண ஆயிரக்கணக்கானோர் வீதியில் கூடி வாழ்த்த. தலைவனின் அழகையும் வீரத்தையும் பாராட்டிப் பேசினர்..

வீதிஉலா சென்ற இராசராசசோழனையும் அவரது முன்னோர்களின் புகழையும் புகழ்ந்து பின் வரும்படி பாடினர் மக்களும் இறை தூதர்களும்.
அவற்றை இனிக் காண்போம்.

புறாவின் துன்பத்தைப் போக்க.
தன் தசையை அரிந்து தராசுத் தட்டில் இட்டவனின் இளையோனே வாழ்க.!
வாழ்க வாழ்க..

வானோர் பகைவனாகிய சம்பரனை அழித்துத் தேவர்களைக் காத்த காந்தலூர் கொண்டோனே வாழ்க.!
வாழ்க வாழ்க…

மேல்கடலும் கீழ்க்கடலும் காவிரியால் ஒன்றாகிக் கலக்க இடையில் உள்ள மலைகளை எல்லாம் குடைத்து. புதுவாறு படைத்திட்ட மும்முடிச்சோழனே.!!
வாழ்க வாழ்க.!

மேரு மலை உச்சிதனில் புலிக்கொடியை பறக்கச்செய்த இராஜகேசரியே.!


வாழ்க வாழ்க.!

பொய்கையார் களவழி நாற்பது கண்டு.! சேரனின் கால் விலங்கை நீக்கிய ஜெயகொண்ட சோழனே.!
வாழ்க வாழ்க.!

96 விழுப்புண்பெற்று யானை மேல் துஞ்சிய கிள்ளிவளவனின் கிளைகொழுந்தே.!
வாழ்க வாழ்க.!

நாட்டில் உண்டாகிய கலகத்தை நீக்கி,சுங்க வரியைத் தவிர்த்து வறுமையை விரட்டிய ராஜேந்திர சிம்மனே.!
வாழ்க வாழ்க.!

என மக்கள் கரகோஷம் எழுப்ப. மக்களோடு மக்களாக இணைந்திருந்த அப்பர் பெருமான்… மாமன்னரை பின்வருமாறு வாழ்த்திப் பாட. சுற்றியிருந்த கூட்டம் வாழ்த்துக்கணைகளை பகிர்ந்து கொண்டனர்.

திருமகன் சீராசராசன் கதிரோன்
திருமகனாகி மறித்தும் திருநெடுமால்
ஆதிப் பிறவி அனைத்தினும் உம்பர்க்குப்
பாதிப் பகை கடிந்து பாதிக்கு மேதினியில்
செந்தாமரையாள் திருமார்பில் வீற்றிருக்க
வந்தான் மனு வம்ச மாமேரு.!!

என பொன்னியின் புதல்வன் சோழரின் புகழ்பாட…


சாலையின்  இருமருங்கிலும் இருந்த மக்கள் கடலில் வாழ்த்து கரகோஷங்களோடு மிதந்து சென்றது மன்னர் ராஜராஜரின் பல்லக்கு வாகனம்.. தஞ்சை அரண்மனையை நோக்கி சென்ற சக்கர ரேகைகளை உடைய அருண்மொழிவர்மருக்கு. மக்களின் ஆதரவு பெரும் அளவில் இருந்தது இந்த கூட்டத்தினிடையே பயணப்பட்ட பல சீமான்களுக்கும்.! சிற்றரசர்களுக்கும் முழுவதுமாக புலப்பட்டது. அதனாலேயே விசயாலய சோழனால் அடிகோலப்பட்ட பிற்கால சோழ அரசு மகோன்னதம் அடைந்தது இவரது ஆட்சியிலே தான் என வரலாறு பதிகிறது .
இது நாள் வரை தேங்கி இருந்த சோழரின் ஆற்றலை அனைத்து துறைகளிலும் வெளிக்கொண்டு வந்து சோழர் பரம்பரையை ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னரும் பேச செய்தவரு மாமன்னர் ராஜராஜ சோழரே யாவார்.  இயற்கைலேயே நுண்ணறிவும்,பெரும் ஆற்றலும்,மக்களின் செல்வாக்கும்,இறைவனின் ஆசியும் உடையவராக  இருக்க.இவரது ஆட்சியும் இவரது சாதனைகளுக்கு பெருந்துணை புரிந்துள்ளது தஞ்சை பெருவுடையார் கோவில் வரலாறுகளைப் போல.

பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜரால் தானமாக 2.692 கிலோ தங்கம் அளிக்கப்பட்டதாக கூறுகிறது திருவாலங்காடு செப்பேடு. மேலும் பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வருமானமாக 1 லட்சத்து 20 ஆயிரம் கல நெல்லும், கோவிலுக்கு வரும் வருவாயில் நெல் தவிர பொன் 300 களஞ்சுகளும், காசுகள் 2 ஆயிரம் என  நாட்டின் ஒரு பகுதி செல்வம் பெரியகோவிலிற்கென ஒரு பெரும் நிதி ஒதுக்கப்பட்டு.! இவற்றை நிர்வாகம் செய்வதற்கென  4 பண்டாரிகளும், 116 பரிசாரகர்களும், 6 கணக்கர்களும், 12 கீழ்க்கணக்கரளுமென பெரியகோவிலில் பணி புரிய. கோவிலுக்கு நெல்லும், பொன்னும் பொருளுமென ஏழேழு தேச  கிராம மக்களும் வாரி வழங்கினர்.

மேலும் அன்றாடம் இந்தக் கோவில் இயக்குவதற்காக மக்கள் மற்றும் தன்னார்வல சிவதொண்டர்கள் பெருமளவில் குவிந்து தங்கள் பக்தியினை பறைசாற்றி வாழ்த்தொலி பாட. திருக்குடமுழுக்கு திருவிழாவிற்குப்பிறகு இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிக்க 400 இடையர்கட்கு  ‘சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டு அதை பேணிக்காக்க அந்த மாந்தர்களுக்கு ‘வெட்டிக் குடிகள்’ என பெயர் வைக்கப்பட்டது. இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட. கோவிலுக்குக் கொடுத்தது போக, ஆடு மாடுகளிடமிருந்து கிடைக்கும் பால் நெய் மற்றும் வெண்ணெய் போன்ற  பொருட்களை மக்களிடம் விற்று தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொண்டனர்.

பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜரின் ஆட்சியிலே தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்தது நாடறியும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை  அளந்து முறைப்படுத்தியதால் ’உலகளந்தான் சோழன்’ எனும் பெயர் பெற்றதாக வரலாறு நமக்கு எடுத்துரைக்கிறது.
எகிப்தில் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். ஆனால் தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்பாகவும் பொற்கால களஞ்சியமாகவும் இன்றளவும் நம்மிடையே எழில் கொஞ்சும் ஓவியங்களாக காட்சி தந்து கொண்டிருக்கிறது.

சங்கம் மருவிய பின் களப்பிரர் காலத்திய வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு. சமணம் தழைத்தோங்கி இருந்த களப்பிரர்களை வீழ்த்தி. பாண்டிய பல்லவர்கள் மற்றும் ஏனைய சிற்றரசுகளும் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் எட்டியது இந்த சோழர் ராஜராஜரின் ஆட்சியில்.

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்று,மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்று,பாண்டிய நாட்டை வென்று கங்கம் மற்றும் கடாரம் வென்ற சோழரின் வெற்றிப் படிகளின் மணி மகுடமாக வீற்றிருந்து வரவேற்கிறது தஞ்சை பெருவுடையார் கோவில்.
சோழ தேசத்தில் வீசிய தென்றல் காற்று யாழ் கலந்து பொன்னி நன்நாடு முழுவதுமாக பொற்கால தென்றல் வருடியது போல சென்று கொன்றை மலர் மாலைகளை குவித்தது எனலாம்.


இந்திரன் போற்றும் பூம்புகாரும் இலக்கியச் சோலையான பழையாறையும் . அரிமாத் தலைவன்
ராஜராஜர் அரியணை ஏறிய தஞ்சையும்.
பருவமாரி பொழியும் மழைப்பொழிவைப் போல தேசம் முழுவதும் பெய்தன சோழத்தின் திருப்பணி சேவை எனும் மாமழை.

காலங்காலமாக வளர்ந்து செய்து கொள்ளை வனப்பு கூடி ஒளிரும் செம்மலர் சோலை என திகழ்கிறது சோழர் தேசம் என்றால் அது மிகையாகாது தான்.
இந்த சோழ தேசத்தின் சோலைவனத்தில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்க.! அந்த மலர்கள் பல்வேறு மனங்களையும் வண்ணங்களையும் இதிகாசங்களாகவும், இலக்கியங்களாகவும், வாசகங்களாகவும் ஒன்றுபட்டு. மேலும் காலங்காலமாக வழி வந்த பல கவிஞர்களை உருவாக்கி இருக்கிறது.
காலங்காலமாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய பேராற்றலின் திருப்புமுனையாக சோழ வரலாற்றில் முத்தமிழாய்.! எழில் பூத்து விளங்கும் செந்தமிழ் போல் பழமைக்குப் பழமையாய்.! புதுமைக்குப் புதுமையாய்.! அரியதொரு கருவூலத்தை படைத்து, புலிக்கொடி பறக்கும் சோழ தேசத்தின் வரலாற்று சிறப்புமிக்க பெருவுடையார் கோவிலின் கும்பாபிஷேக திருவிழா இனிதே சிறப்புற நிறைவேற்றது இந்த வேலையில்.

மாமன்னர் தனது அரசவை மந்திரிகள் மற்றும் அயல் தேச குறு சிறு மன்னர்கள் ஜமீன்தார்கள் நிலச்சுவான்தார்கள் வெளிநாட்டுப் பயணிகள் அறிவார்கள் கணியண்கள் போன்றோரை வரவழைத்து. தஞ்சை பெருவுடையார் கோவில் கும்பாபிஷேக பெருவிழா மகிழ்ச்சியை பகிரும் நோக்கத்தோடு மேற்கண்ட அனைவருக்கும்  பொன் பொருள் போன்றவற்றை தானமாக அளித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் தஞ்சை அரண்மனையின் அரசவையில்.

அவையில் கூடியிருந்த ஆன்றோரும் சான்றோரும் இலக்கண இலக்கியம் புடைசூழ வீட்டிருந்த சைவசமய சித்தாந்த ஆழ்வார்களும் மாமன்னரை வாழ்த்திப் பாட வரிசைகட்டி நின்று இருந்தனர். அதன்படி முதலாவதாக அப்பர் திருஞானசம்பந்தர் அரசவையில் வீற்றிருந்தார்..
சைவம் தழைத்தோங்க சிவாலயம் எழுப்பி அகிலம் போற்றும் அற்புத சேவையை அளித்த மாமன்னர் ராஜராஜ சோழர் அருள்மொழிவர்மரை பற்றி இவ்விதம் பாடினார்.

கோதென யாதும் புரியா கொற்றவ
காளையாய் உம்மை
வேறே இணைய விழித்தகு வேந்தே.!
முறுக்கிய மீசையும் முழுவலி மார்பமும்
தறுகண் சான்ற தகவுடை விழிகளும்
சிவபதம் சோநாட்டில்
திருவடி நல்லதோர் சீர் பரப்ப.! தென்னாட்டில் வேங்கடத்து புகழ் பரப்ப
ராஜராஜராய் அரியணையில் அமர்ந்து
ஆயர்பாடி நீ வாழ்க.!
நின் குலம் வாழ்க.!

என வேத விற்பன்னர்களும் சைவ சித்தாந்த சமய ஆழ்வார்களும் அரசவை மந்திரிகளும் சிறு குறு நில மன்னர்களும் படைத்தளபதிகளும் இன்னும் பிற ஆயிரமாயிரம் மக்களும் ஒன்றிணைந்து தஞ்சை அரண்மனை முழுவதும் புடைசூழ்ந்து மன்னருக்கு தங்கள் வாழ் துளிகளை கூற வரிசை கட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.

அரியணையில் கம்பீரமாக வீற்றிருந்த அருள்மொழிவர்மர் சபையின் நடுவே வீற்றிருந்த ஒவ்வொருவராக தன் வீர பார்வையை செலுத்திய வண்ணம் இருந்தபோது தனக்கு எதிரியே வீற்றிருந்த அரசவைத் தலைவர் மற்றும் அநபாயர். வந்தியத்தேவன் பார்த்திபேந்திரர் பாளையத்து அரசர்  என அனைவரும் மிடுக்காக அமர்ந்திருக்க.. அவர்களுக்கு அருகே தொண்டைமான் கருணாகர பல்லவரும் இன்னும் பல தளபதிகளும் அமர்ந்திருந்து திருவிழாவினை சிறப்பிக்க இன்று சோழ தேசத்தின் முக்கிய அதிபதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசவையை சிறப்பித்துக் கொண்டிருந்தனர் என்றால் மிகையாகாது தான்.

மேலும் அந்திப் பொழுதானது இரவு ஜாமத்தை நெருங்கிக் கொண்டிருந்த காலத்தில், ஒவ்வொருவராக தனது நன்றியை தெரிவித்து கொண்டு வந்த வேளையில். மாமன்னர் அருள்மொழிவர்மரும் தமது
சோழ உலகத்தின் செவிகளுக்கு அமுத விருந்தாகவும். அதன் கண்களுக்கு குளிர்ச்சியான குதூகலமாகவும். விருந்தளித்து பயணித்த தஞ்சை பெருவுடையார் கோவில் விழாவானது. தேச மக்கள் உள்ளத்தில் ஏதோ ஒரு வகை நம்பிக்கை நட்சத்திரமாகவும் உருப்பெற்று. அனைவரின் வாழ்த்துக்களோடு இன்றைய விழாவினை  நிறைவு செய்தார் மாமன்னர் ராஜராஜ சோழர்.