காலைப்பொழுது படிப்படியாக ஒளிர்ந்தது வழித்தோன்றலெங்குமாக கிழக்குச் சூரியனால்.
வறுமையே இல்லாத சோழ நாட்டில், கையேந்தி யாசகம் பெறுபவர் எவரும் இல்லை. கேட்பவர்கள் எவரும் இல்லை என்பதால், வள்ளல் தன்மையோடு கொடுப்பவர்களும் இல்லை. தங்களுக்குள் பகை கொண்டு போர் புரிவோர் இல்லை என்பதால்.! போரில் காட்டும் வீரம் சாதாரணமாக வெளிப்பட வாய்ப்பே இல்லை. பொய் பேசுபவர்களே சோழ நாட்டில் இல்லை என்பதால், வாய்மையின் சிறப்பு வெளிப்பட வாய்ப்பே இல்லை. மக்கள் கல்வியால் அறிவில் சிறந்தவர்களாக விளங்கியதால் அறிவின் பெருமையும் மேம்பாடும் வெளிப்பட்டது.
அப்படிப்பட்ட புண்ணிய பூமியான சோழ தேசத்தின் தலைநகரான தஞ்சையில். வீரத்தோடு வீற்றிருக்கும் ராஜராஜ சோழரின் மாட மாளிகை முழுவதும் வீரர்கள் புடைசூழ. நல்லாட்சி செய்து வந்த அரசரை உலகம் முழுவதும் உள்ளூர வாழ்த்திய வண்ணம் சென்று கொண்டிருக்க. மன்னரின் முகத்தில் மற்றும் ஏதோ ஒருவித கவலை ரேகை படர்ந்துள்ளதை காண முடிகிறது.
அதன் பொருட்டு மாமன்னரின் உற்ற நண்பர்களான பார்த்திபேந்திர பல்லவர் மற்றும் வானவர் குல அரசர் வந்தியத்தேவரும் மன்னரை நேரில் சந்தித்து, மன்னரின் மனக்கவலை பற்றி விசாரிக்க ஆயத்தமாயினர். அரண்மனையின் வாயிலுக்கு நேர் எதிரே உள்ள நிலா முற்றத்தின் இடது புறமாக உள்ள லட்சுமி விலாசம் என்கிற தர்பாரில் மாமன்னர் சபையோருடன் அமர்ந்திருக்க..
சூரிய மரபு கொண்ட சுந்தரரின் புதல்வரே.
இமயம் முதல் ஈழம் வரை வெற்றிக் கொடி நாட்டிய ஈழத்து வேந்தனே.! உம்மை வணங்குகிறோம் என்று இருவரும் ஒருசேர கூறி மாமன்னரை வணங்கினர்.
இரு வீரத் தளபதிகளின் வணக்கத்தை ஏற்றுக்கொண்ட மாமன்னர் அருள்மொழிவர்மர் வந்த விஷயம் என்னவோ என வினவினார்.
இரு இரு தளபதிகளும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்த பின்னர் வந்தியத்தேவர் பேச ஆரம்பித்தார்.
மன்னர் மன்னா.
விரிவாக ஆராய்ந்து பேச இது புதிய விஷயம் அல்ல. ஈழத்திலிருந்து நீங்கள் திரும்பி வந்தபோது, தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்ட இடர்பாடுகளை நீங்கள் மறந்திருக்க முடியாது. அந்த சம்பவத்தில் தங்களின் மூத்த புதல்வரும், என்னை இங்கே உங்களோடு நட்பாகாண காரணமான இளவரசர் கரிகாலரின் அகாலமரணம் இன்றுவரை உங்களாலும் என்னாலும் ஏன்.! இந்த சோழ மண்டலத்தாராளும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு கருப்பு சரித்திரமாக மாறியுள்ளது அனைவரும் அறிந்ததே.!
தங்கள் தந்தைக்குப் பிறகு உங்களுடைய சித்தப்பனார் அரியணை ஏறிய பின்பு. இளவரசர் மரணம் பற்றிய விசாரணை என்பது அதல பாதாளத்தில் சென்றுள்ளதை பலமுறை நாங்கள் உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
அந்த வேளையில். இளவரசரின் மரணத்தில் சம்பந்தப்பட்ட நான்கு அந்தணர்களை நாடு கடத்தியும், அவர்களுடைய சொத்துக்களை அரசுரடமை ஆக்கியதோடு சரி. வேறு எந்தவித நடவடிக்கைகளையும் அவர்கள் மீது எடுக்கவில்லை.
அப்போது தங்கள் கவனத்திற்கு இந்த விஷயத்தை நாங்கள் கொண்டு வந்த போது. தாங்கள் அரியணை ஏறிய பின்பு முதல் வேலையாக ஆதித்த கரிகாலரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க தண்டனை எடுக்கப்படும் என உறுதி கூறினீர்கள்.
நீங்கள் அரியணை ஏறிய பின்பு நாட்டின் சமூக சீர்திருத்த வளர்ச்சியில் இணைந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல நீங்கள் அரும்பாடுபட்டு இருந்தாலும்.! ஆதித்த கரிகாலரின் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்கிற மக்களின் உணர்ச்சிகளையும் கருத்தில் கொள்ள வேண்டி உள்ளதால். அது பற்றி பேசவே இப்போது இங்கே வந்துள்ளோம் என கூறினார். வலது பக்கம் அமையப்பெற்ற சபையோரின் இருக்கையில் இருவரையும் அமரும்படி சைகை செய்தார் மன்னர் ராஜ ராஜ சோழர்.
மாமன்னர் அருள்மொழிவர்மரின் சபைக்கு வலது பக்கம் அமர்ந்திருத்த அரச குரு அநிருத்ரர். அவர்க்கடுத்ததாக கருணாகரப் பல்லவர். நல்லப்ப உடையார் அநபாயர் இன்னும் பல அமைச்சர் பெருமக்கள் ஆச்சரியம் கலந்த ஒரு எதிர்பார்ப்போடு. மாமன்னர் அடுத்து எவ்விதமான பதிலைக் கூற போகிறாரோ என்று அனைவரும் ஒன்று சேர்ந்து மாமன்னரை உற்றுநோக்க தொடங்கினர்.
கர்ஜனை குரலில் கர்ஜக்கும் சிங்கம் போல. வீரத் தளபதிகளே.
சோழ நாட்டின் வரலாறு என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போல் அல்ல. ராஷ்டிரகூட வம்சத்தையும், கீழை சாளுக்கியம், மேலை சாளுக்கியம் என. விஜயாலயச் சோழன் காலம் தொடங்கி இன்றுவரை சமகாலத்தில் நாம் பல்லாயிரம் ஆண்டுகால சாதனைகளை செய்து வந்திருக்கின்றோம்.
நமது தேசத்தின் சாதனைகளை நம்பியாண்டாரும் ஒட்டக்கூத்தரம் அப்பர் திருஞானசம்பந்தரும் சோழ நாட்டின் சிறப்பையும் நாட்டின் வளத்தையும் உலகம் முழுவதும் அறிவு கலை இலக்கியங்களால் பரப்பி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது நேற்றைய தினம் தஞ்சை நகரில் விண் முட்டும் அளவு வளர்ந்துள்ள பெருவுடையார் கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த மக்களும் மாமன்னர்களும் வியந்து சென்றதை பார்த்திருப்பீர்கள்.
இப்படிப்பட்ட சோழ தேசத்தின் அரசராக வீற்றிருக்க வேண்டிய எமது மூத்த தமையனார் ஆதித்த கரிகாலரின் புகழுக்க.! அவரால் காஞ்சியில் கட்டியுள்ள பொன் மாளிகையே வரலாற்று சரித்திர சாட்சியாகும். அப்படி சாதனை பண்ணிய எனது தமையன். இன்று நமக்கு வழிகாட்டியாய் மேல் உலகு சென்று நம்மை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
அப்படிப்பட்ட எமது மூத்த தமையனாரின் இழப்பு என்பது எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் பெரிய இழப்பாகவே இருக்கிறது.
ஆண்டுகள் பல ஆனாலும் மறக்க கூடிய விஷயமா இது.?
என் தந்தைக்குப் பிறகு அரியணை ஏறிய எனது சிற்றப்பனிடம் இது பற்றி பலமுறை நானும் கூறியிருக்கிறேன் நீங்களும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
சில மழுப்பல்களோடு அந்த விஷயத்தை ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்கள் தள்ளிப்போட்டு வந்ததை நானும் அறிவேன்.
இருந்தாலும் நான் அதை மறக்கவில்லை. யாரையும் மன்னிக்கவுமில்லை.
அதற்கான சரியான நேரம் காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு. ஆழ்மனதில் பதிய வைத்துள்ளேன்.
பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு இது பற்றி பேசலாம் என்று நினைத்திருந்தேன். சரியான வேளையில் இன்று அரச சபையிலேயே இந்த விஷயத்தை விவாதிக்கும் பொருளாக நீங்கள் எடுத்து வந்தது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது
என்று முழங்கி. விலகியிருந்த அங்கவஸ்திரத்தை சரி செய்து கொண்டு தனது அரியாசனத்தில் அமர.
அருகில் இருந்த தாதிப்பெண்கள் இருவரும் சாமரம் வீச தொடங்கினர்.
மன்னரைஉற்று நோக்கியிருந்த சபையினர் அனைவரும் வீராவேசத்தோடு எழுந்து நின்று ஒரு புதிய உத்வேகத்தோடு மன்னரின் வீராவேசமான பேச்சினைக் கேட்க கேட்க உடலில் ரத்த நாளங்கள் முறுக்கேறி ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தது எனலாம்.
மாமன்னரின் நாவிலிருந்து வெளிவந்த சொற்கள் ஒவ்வொன்றிலும் சோழதேசத்தின் வீரமும் போர்க்குணமும் தெறித்து விழுந்தது.
அப்படிப்பட்ட வீராவேச உரையானது சபையின் அனைத்து பக்கங்களிலும் எதிரொலித்து. சபையில் வீற்றிருந்த அனைவரும் ஒருகணம் சித்தபிரம்மையாக மாறியது போல் ஆயினர்.
பார்த்திபேந்திர பல்லவர் மற்றும் வந்தியத்தேவர் இருவரும் மீண்டும் ஒருமுறை மன்னரை வணங்கி..
மன்னர் மன்னா..! ஈழம் கொண்ட எங்கள் வேந்தே.! தாங்கள் உங்கள் மூத்த புதல்வர் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் அளவு கடந்தது என்பது நீங்கள் அறிந்ததுதான்.
இருந்தாலும் அன்றைய தினம் கரிகாலரின் பூதவுடல் இந்த தஞ்சை அரண்மனையில் வைத்திருந்த வேலையில், நீங்கள் எடுத்த சபதம் ஆதித்த கரிகாலரின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு இதே இடத்தில் தகுந்த தண்டனை என் கையால் வழங்குவேன் என்று கூடியிருந்த வீரத்தளபதிகள் சிற்றரசர்கள் சோழ தேசத்தின் மக்கள் முன்னால் ஒரு வீர சபதத்தை ஏற்று ஏற்று இருந்தீர்கள்.
அப்படிப்பட்ட வீர சபதத்தை நிறைவேற்ற சரியானதொரு தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தீர்கள் என்பதையும் யாமறிவோம். அதற்கு சரியான தருணம் இப்போது ஏற்பட்டுள்ள.
அதன் பொருட்டே நமது தோழ உடையார் மன்னர் நல்லப்ப உடையார் அவர்களின் உதவியை நாம் நாடியிருந்தோம். உங்கள் ஆலோசனையின்படியே பாளைய தேசத்தில் எமது புதல்வர் யாருக்கும் தெரியாமல் வளர்க்கப்பட்டார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
நேற்றைய தினம் பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகத்திற்கு எனது புதல்வரையும் அங்கு அழைத்து வந்து இருந்தேன். நீங்கள் பார்த்து இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
கும்பாபிஷேக விழா காரணமாக நீங்கள் மிகவும் சிரத்தையோடு இருந்ததால் உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் உங்களது மருமகனை அறிமுகம் செய்து வைக்க முடியவில்லை.
ரங்க மஞ்ச ஆதித்த கரிகாலன் என பெயரிடப்பட்ட எனது புதல்வர் நீங்கள் முன்னெடுத்து நடத்தப் போகும் போரில் ஒரு படைத்தளபதியாக முன்னின்று நடத்த முழுவதும் பயிற்சி பெற்ற ஒரு இளவரசனாகவே இங்கே வந்திருக்கிறார்.
தாங்கள் அனுமதித்தால் அரசு சபையிலோ அல்லது நமது நிலாமுற்றம் அமைந்துள்ள வானதி மாளிகைக்கோ அழைத்து வந்து தங்களிடம் அறிமுகப்படுத்துகிறேன்.
அதற்கு பிறகு தாங்கள் எடுக்கப்போகும் எந்த முடிவுகளுக்கும் நானும் பார்த்திபேந்திர பல்லவரும் உங்களது மருமகனுமான எனது புதல்வனும் இணைந்து உங்களுக்கு கரம் கொடுக்க தயாராக இருக்கிறோம், என்பதையும் இந்த அரச சபையினர் முன்னாள் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.. என்று ஒரு சிறிய வீர ஆவேச உரையை நிகழ்த்தி அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தார் வாணர் குல அரசர் வந்தியத்தேவர்.
அரசருக்கு வலது பக்கம் அமர்ந்திருந்த புலவர் ஆ்திரையனார் எழுந்து மாமன்னருக்கு வணக்கம். என்று மன்னருக்கான வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு தனது உரையை இப்படி ஆரம்பித்தார்.
அண்டம் முழுதும் போற்றும் விதமாக முதலாம் ராஜராஜ சோழன் என பெயரெடுத்த மன்னரின் மன்னா.! சுந்தரரின் புதல்வா.!
சோழ ராஜ்யம் என்பது ஒரு பரந்து விரிந்த நிலப்பரப்பு.
கிழக்கு கடற்கரை முதல் வெள்ளாறு, குடதிசை கோட்டை வரையும், வடதிசையில் ஏநாட்டுக்கோட்டை கரையும், புகாரில் ஆட்சி செய்த புண்ணியர்கள் வாழ்ந்த பூமி இந்த சோழ பூமி.
அப்படிப்பட்ட காவிரிபூம்பட்டினத்தில் கடல் தெய்வத்தின் புராதன இருப்பிடமான மணிமேகலையின் பெயரில் ஒரு ஆலயம் எழுப்பி. உமது முன்னோர்களான கிள்ளி வளவன் செம்பியன் சிபி சக்கரவர்த்தி கரிகாலர் போன்ற பல அரசர்களைக்க கண்ட அண்டை நாடுகள் அனைத்தும். அச்சம் கொள்ளும் அளவிற்கு ஆட்சிபுரிந்துள்ள வேலையில்.! இவ்வளவு புகழும் பெருமையும் வாழ்ந்த சோழ நாட்டில் தங்களது தமையனார் கரிகாலரின் துர் மரணம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை இங்கு.
சைவம் தழைத்தோங்க, பௌத்தமும் சிறந்து விளங்கும் சோழ நாட்டில். புகார் நகரில் இந்திரனுக்கு 28 நாட்கள் விழா எடுப்பதும். பறக்கக்கூடிய மாயக் கோட்டையை வைத்திருந்த அசுரர்களை அழித்தது இந்த சோழரின் சாதனைதான்.
புலிக் கூண்டில் வளர்ந்தே பலம் பெறுவது போல.! எதிரிகளின் சிறைக்கூடங்களில் வாழ்ந்த தாங்கள்.! ஒரு யானையின் பலத்துடன் ஈழம் சென்று வென்று.! சிந்தனையாலும் சீரிய முயற்சியினால் இன்று சோழ தேசத்தை ஆண்டு கொண்டு இருக்கிறீர்கள்.
உலகெங்கும் கலம் செலுத்தி, காற்றை அடக்கி, ஒரு மாபெரும் வீரனின் வழித்தோன்றலாக, பலம் பொருந்தி யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என ஆற்றல் பெற்று. பெருஞ்சேரலாதன் போரிட்ட உன் முன்னோர். வெண்ணிப் போரில் வென்றதனால் சீர்தூக்கி சிறப்பாக பாராட்டுகிறது சோழ தேசத்தின் வரலாறுகளை.
சாரண சரோராக விகித விலோசன பல்லவ திரிலோசன பிரமுகாகில பிரதி வீச்சுவர கார் இட காவிரி என பண்டைய வரலாற்றில் சோழ அரியணைக்கு வழங்கப்பட்ட பட்டத்து யானை காஞ்சி சென்று வென்று தொண்டை மண்டலத்தோடு துளிர்விட்டு பாளை தேசம் வரை விரிந்து இன்று அரியணையில் அமர்ந்திருக்கும் மாமன்னா.
நீங்கள் உங்கள் சகோதரரின் துர் மரணத்திற்கு பழி வாங்கும் விதமாக நீங்கள் எடுக்கப்போகும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நாங்கள் உங்களுக்கு பக்கபலமாக இருக்க விரும்புகிறோம். ஆனால் நாடு கடத்தப்பட்ட சில அந்தணர்கள் மற்றும் சேர, பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் அனைவரையும் மறுபடியும் சோழ தேசத்தின் தலைநகரான தஞ்சைக்கு வரவழைக்கப்பட்டு, தஞ்சை நகர வணிகவீதிகளில் நிறுத்தி.! மக்களின் முன்னால். யானை மூங்கிலை மிதிப்பது போல.! நம்பிக்கை துரோகம் செய்து ஆதித்ய கரிகாலனை கொன்ற அவர்களுக்கு. நமது யானைப் படையை வைத்தே சரியானதொரு தண்டனை வழங்க வேண்டும் என்பதை மாமன்னருக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.
எனது கோரிக்கைக்கு செவி சாய்ப்பீர்களாக.!! என்று கூறி மறுமுறை மன்னரை வணங்கி விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார் புலவர் ஆதிரையனார்.