சங்கிலித் தொடராய்

உன் பிம்பம்

எண்ண அலைவரிசைகளில்

எப்பொழுதும் “நீ”

நிசப்த நிமிடங்களின்

கற்பனை பிரபஞ்சத்தில்

உன் கால்தடம் துரத்தி

எங்கோ தொலைய…..

இதய அறைகளின்

நினைவுப் பிரதிகளில்

உன் அடையாளக் கீற்று

மீண்டும் உயிர்ப்பிக்க….

உன் சுவாசச் சிதறல்களின்

உட்கூட்டமைப்பில்

எனக்காய்

ஓர் இடம் தேட…

காலச் சக்கரத்தில்

நாட்களின் நகர்வில்

ஒளியியலின்

சங்கிலித் தொடராய்

எங்கும்

உன் பிம்பம்…..

 

 

கைபேசி     : 9600501232

மின்னஞ்சல் : civilmani124@gmail.com