கூண்டில் மண்டியிடவோ
அல்லது நிஜமாகவோ மன்னிப்பு வேண்டவோ
எனக்கு தயக்கமில்லை
ஆனால் நான் வெறுமென ஆப்பிள் மட்டும் பறிப்பவன் அல்ல
*

அது அமைதியை போதிக்கும்
நல்லது
எல்லோரையும் ஒன்றெனப் பேணும்
நல்லது
ஆனால் நான் இருக்கும் கரைக்கு ஒதுங்கிய படகில் காயாமல் பிசுக்கும் குருதியை கழுவ இயலவில்லை
எந்த அலையாலும்

*

நான் உன்னிடத்தில் இருக்கிறேன்
பிறகு
உனக்கு ஆதரவான காரியமொன்று செய்கிறேன்
பிறகு
எனக்கும் ஆதரவான காரியம்
முதலில் கிருஷ்ணா பிறகு சகுனி
முதலில் சகுனி பிறகு கிருஷ்ணா

*
யசோதா கண்களை பார்ப்பதற்கு அச்சப்பட்ட புத்தன்
துறவு பூண்ட அந்த இரவே தனது நகங்களை
அவ்வளவு மகிழ்ச்சியுடன் வெட்டிக்கொண்டாள் யசோதா.
*
ஓராண்டு இரவுகளின் தழுவலை தாங்க முடியாத ராமன்
சீதையை வேண்டுமென்றே தீயில் இறக்கினான்.
*
பன்னிரெண்டு பேர்களின் ஒருவளாக இருந்தவளின் மோகத்தை
கையாளத்தெரியாமல்
சிலுவைக்கு பணிந்தான் ஏசு,

 

Sharukhraj1999@gmail.com