அங்கே பாருங்கள்..காளாமுகர்கள் வருகிறார்கள்…
பூச்சாண்டி காளாமுகர்கள் வருகிறார்கள்….
நரமாமிசம் சாப்பிடும் காளாமுகர்கள்…..
நரபலி கேகும் மந்திரவாதிகள்… ஓடுங்கள்.. ஓடுங்கள்..
என வழிப்போக்கன் ஒருவன் கத்திக்கொண்டே மருத்துவச்சாலைக்கு பின்புறமக ஓடினான். அந்தி வேளையில் ஆலமரத்தடியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த அந்த சிறு கூட்டத்தாரை கொஞ்சம் திகைப்படைய வைத்தது அவனின் எச்சரிக்கை அறிவிப்பு..
சிலர் காளாமுகர்களைப் பற்றி தெரிந்து பயந்து ஓடினர். பலர் தெரியாமலும் விழித்தாலும். அவர்கள் பின்னேயே ஓடத் தொடங்கினர் மற்றவர்களும்.
ராஜேந்திரன் ஆதூரச் சாலை வாயிலுக்கு சற்று வெளியே வந்து. சத்தம் வந்த திசையை நோக்கினான். இப்போது அந்த இடம் சற்று மயான அமைதியாக இருந்தது.
இடையே. சற்று முன்னர் கத்தி கூப்பாடு போட்டவன் எங்கே என தேடிய ராஜேந்திரன். மருத்துவ சாலைக்கு பின்னால் நிறுத்தியிருந்த மாட்டு வண்டியின் அச்சாணிக்கு கீழே ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டு.
அவனிடம் நெருங்கிச் சென்றான்.
இளவரசன் வருவதைக் கூட பொருட்படுத்தாமல். மேற்கு கிழக்காக பயணிக்கும் நீண்ட அந்த நெடும்பாதையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் வழிப்போக்கன்.
அவனுடைய இரு விழிகளும் பயத்தில் வெளிரிப் போயிருந்தது. அவனது உதடுகள் போற்றி..போற்றி என சிவ நாமத்தை முனுமுனுத்துக் கொண்டிருந்தது. நெஞ்சுக் குழியில் உரலில் நெல் இடிப்பது போல டங் டங் என்று பெரிய சத்தம்…
ஆம்… இதயத்தின் துடிப்புகள் கூட கடார மணி ஓசை போல கேட்டுக் கொண்டிருந்தது அந்த வழிப்போக்கனுக்கு.
வழிப்போக்கன் மட்டுமின்றி அங்கு ஒதுங்கியிருந்த மக்களிடமும் பயம் தொற்றிக் கொண்ட ஒரு உள்ளுணர்வு இருந்ததை கண்கூடாக காண முடிந்தது ராஜேந்திரனுக்கு.
சில நாழிகைக்கு முன்பு தூரத்தில் கேட்ட கரடுமுரடான மனித குரல்கள்.
ஆதூரச்சாலைக்கு மிக அருகில் கேட்கத் தொடங்கியிருந்தது. மருத்துவ சாலைக்கு வெளியே நின்று கொண்டிருந்த தளபதிகள் பழுவூர் நக்கன்.நல்லப்ப உடையார் மற்றும் இளவரசர் ராஜேந்திரன் சற்று எச்சரிக்கையாகவே மங்கலான ஒரு இடத்தை நோக்கி செல்லத் தொடங்கினர். அப்போது ஆதித்தனின் வலது தோள்பட்டையை ஒரு கை அழுத்தியது.
சற்றும் எதிர்பாராத ஆதித்தன் திரும்பிப் பார்க்க.
மலர் மஞ்ச காந்த விழியாள் அங்கம்மா மாதேவியாரின் வலது கரங்கள் தான் ஆதித்தனின் தோள்பட்டையை அழுத்திக் கொண்டிருந்தது…
தன் அருகில் வர மாட்டாளா என்று ஏங்கி இருந்தவனுக்கு, இளவரசியே தனது தோளில் கைபோட்டு, தன் பின்னால் நின்று கொண்டிருந்த அந்த கணத்தை நினைத்த பொழுது, சிலிர்த்து எழுந்தது ஆதித்தனின் உடலும் உள்ளமும்.
நாழிகை செல்ல செல்ல ஒரு மோசமான மந்திர சத்தங்கள் சாலையில் எதிரொலித்தன.
நாழிகை நேரத்திற்கு முன்பு மரத்தின் கீழே குழுமியிருந்த மக்கள் யாரையும் காணவில்லை. இப்போது வெறிச்சோடிப் போயிருந்தது அந்த இடம். தூரத்தில் மந்திர ஓலங்கள் கேட்ட திசையில் அடர்த்தியான புகை கவசம் சூழ தீப்பந்தங்களோடு கூட்டம் ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆதுரசாலை வாயிலுக்கு இடப்பக்கமாக சதுப்பு நிலத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தவர்களுக்கு சற்று எதிரே உள்ள சாலையில். திடகாத்திரமான கருத்த உடலோடு, கையில் மந்திரக்கோலும், மண்டையோடும்.மரகத மாலையும், பலர் இலை தழைகளான ஆடைகளுடனும். சிலர் மாட்டுத்தோலான அங்கியும் அணிந்து காணப்பட இன்னும் சிலர் நிர்வாண கோலத்தில் சென்று கொண்டிருந்தனர். அந்த கூட்டத்தினை கண்ட அரச குழுவினருக்கு சிறிது பயம் தொற்றிக் கொள்ள தொடங்கியது.
காளாமுகர்கள் எனப்படுபவர்கள் காளி தெய்வத்திற்கு மனிதர்களை பலியிட்டு, அபிரிதமான பல சக்திகளை பெற்றவர்கள் என்று பேச்சுவாக்கில் கேட்டதுண்டு. மேலும் அவர்கள் அரச வம்சத்தைச் சேர்ந்த தலைச்சம் குழந்தைகளை காளிக்கு பலியிட்டு குறிப்பாக மந்திர தந்திர விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கபாலிகம் எனும் பிரிவினை சேர்ந்தவர்கள் இவர்கள் என்பதை அனைவரும் அறிந்தனர். அதனாலேயே இவர்கள் நாட்டு மக்களோடு இணைந்து வாழாமல். ஆற்றங்கரை முகத்துவாரங்கள். சமுத்திரத்தின் ஒதுக்குப்புற பகுதிகளில் அதிகமாக வசித்து வந்தாலும், சாதாரணமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் இவர்களைக் காண முடியாது. மந்திரம் ஓதி மனதை மயக்கும் தந்திர வித்தைகள் கற்றுத் தேர்ந்த இவர்கள். காளிக்கு மனிதர்களை பலியிட பல்லவ தேச சமுத்திர கடையொன்றில் மகாபலி பீடங்களையும் உருவாக்கியிப்பதாக மக்களிடையே பரவலான பேச்சு வழங்கி வருகிறது.( தற்போதைய மகாபலிபுரம்)
இதனாலேயே இவர்களைக் கண்டால் எத்தனை பெரிய வீரனாக இருந்தாலும் துண்டை காணோம் துணியை காணோம் என்கிற ரீதியில்தான் பதறியடித்து ஓடி வேண்டிய நிலை ஏற்படும்
அப்படிப்பட்ட இந்த நரபலி காளாமுகர்கள் பெருங்கூட்டமாக தீப்பந்தங்களை கையில் வைத்துக் கொண்டும், புரியாத பாஷையில் மந்திரங்களை ஓதி கொண்டும், எலும்பு கூடுகள் போன்று அமைக்கப்பட்ட பல்லக்கில் ஒருவன் அமர்ந்திருக்க. அந்த நபரலச்சூழ்ந்துகொண்டு ஆட்டம் பாட்டு என பல இசைக்கருவிகளை இசைத்து கொண்டும் ஆதுரசாலை எதிரே இருந்த நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்தனர்.
இவர்களின் தோற்றத்தை பார்த்து ஒரு வித பயம் கொண்ட அங்கம்மா தேவி. ஆதித்தனின் பின் பக்கத்தில் மிக அருகில் நெருங்கி கொண்டிருந்தாள். தங்களுக்கு எதிரே நரபலி கொடுக்கும் கருத்த உருவத்தில் சென்று கொண்டிருக்கும் சாமியார்களை பார்த்து சிறிது பயமும். தனக்குப் பின்னே. அழகிய தேவதை ஒருத்தி, தனது தோளில் கை வைத்துக்கொண்டிந்த சிலிர்ப்பான இரண்டு வெவ்வேறு இனம் புரியாத உணர்வுகளை அனுபவித்துக் கொண்டிருந்தான் பாளையத்து இளவரசன்.
சாமியார்களின் அந்தக் கூட்டம் ஆலமரத்திற்கு அருகே நெருங்கி விட. ராஜேந்திரன். நல்லப்ப உடையார். பழுவூர் நக்கன் மற்றும் சில பாதுகாவலர்கள் மருத்துவ சாலைக்கு பின் பக்கமாக செல்ல தொடங்கி இருந்தனர்.
ஆதித்தனும் அவர்களை பின் தொடர்ந்து செல்ல முற்படுகையில். அவனின் வலப்பக்க தோள்பட்டையை கொஞ்சம் அழுத்தி அவர்களோடு செல்ல வேண்டாம் என்ற ஒரு சமிஞ்சை கொடுத்தாள் மாதரசி அங்க மாதேவியார்.
காரணம் புரியவில்லை இளவரசனுக்கு. இருந்தாலும் அவர்கள் பின்னேயும் செல்ல மனமில்லாது திரும்பி அங்கம்மா தேவியாரை பார்க்க. இருவரின் காந்தப் பார்வைகளும் ஒரே நேர்கோட்டில் பயணித்து இரு முகங்களிலும் உணர்ச்சிக் கிளர்ச்சிகள் உந்துவிசை பண்ணி. காதல் கனி ரசங்களை கருவிழிகளால் மாற்றிக் கொண்டனர்.
அவர்கள் பின்னே செல்லாமல். இரு குழுவாக பிரிந்தனர் இவர்கள், மறுபடியும் ஆதுரசாலையின் உள்ளே சென்றனர் அங்கம்மா தேவியாரும் பாளையத்து இலவரசன் ஆதித்தனும்.
இளவரசி எங்கே செல்கிறோம். அவர்கள் வேறு பக்கமாக செல்கிறார்கள் என்றான் ஆதித்தன்.
உள்ளே செல்லுங்கள். பிறகு பேசிக் கொள்ளலாம்…. என அவனை முன்னே தள்ளிக்கொண்டே பின்னே சென்றாள் இவள்.
இருப்பினும் தோளில் வைத்திருந்த கையை இன்னும் எடுக்கவில்லை.
மகுடிக்கு மயங்கிய சர்ப்பம் போல இவளின் எண்ணங்களுக்கு கட்டுப்பட்டு மருத்துவச்சாலையின் உள்ளே சென்றனர் இருவரும்.
தேனினும் இனிய தேகம் கொண்ட தேவியாரை சந்திக்கவே பல நாட்டு இளவரசர்கள் போட்டி போட்டிக்கொண்டிருக்கிற இந்த வேளையில்.
அந்த வல்லரசியே தன்னை அன்பினால் அடக்கியிருந்ததை எண்ணி ஆனந்த களிவுற்றான் பாளைய தளபதி.
பகல் வேளையில் பயணப்பட்ட வெள்ளிச்சூரியன். அதற்க்குள் அந்தி வேளையை அடையத் தொடங்கியிருந்தான்.
காளாமுக மந்திரவாதிகள் வேதாரண்யத்தில் உள்ள காளிக்கும் நேர்த்திக்கடன் செய்ய பூசை செய்து போகிறார்கள். எதிரே யாரும் வர வேண்டாம் என அவர்களுக்கு முன்னே சில அடி தூரத்திற்கு முன்னால் தமுக்கடித்துக்கோண்டு ஒருவன் செல்ல… வெளியே அவன் சொன்னது தெளிவாக கேட்டது இவர்களுக்கு.
சுந்தர் ஆதூரச் சாலைக்கு உள்ளே வலப்பக்கமாக சென்றால் நாகப்பட்டினம் சூடாமணி விகார துறவியின் மருத்துவ ஓய்வறை வந்துவிடும். ஆனால் இவர் இடப்பக்கமாக செல்லத் தொடங்கினர். சிறிது தூரம் வரை தீப்பந்த மங்கலான வெளிச்சம் படர்ந்திருந்த அந்த இடத்தில். உள்ளே செல்ல செல்ல இருள் சூழ தொடங்கியது. இந்த இளஞ் சிட்டுக்களின் நடைபயணம் இன்னும் முடியவில்லை. தனிமையை தேடிக் கொண்டு இன்னும் உள்ளே சென்று கொண்டிருந்தனர்.
எதிரே பாதை அவ்வளவு சரியாக புலப்படவில்லை. முன்னே ஆதித்தன் செல்ல. அவன் வலப்பக்க தோளினை பிடித்துக் கொண்டு அங்கம்மா தேவி பின் தொடர.
தேவி… அந்த காளாமுகர்கள் நமக்கு ஆசீர்வாதம் வழங்கியது போல என் உள்ளுணர்வு பிதற்றுகிறது…
தாங்கள் என்ன எண்ணுகிறீர்கள்.. என்றான் ஆதித்தன்.
பேச்சு தொடர்ந்தது போல்,இவர்களின் அந்த இருள்சூழ் பகுதி நடையும் தொடர்ந்தது.
சுநாதமாக சிரித்தவள். அவனது தோளை அழுத்தி. இன்னொரு கரங்கத்தையும் ஆதித்தனின் இடது தோள்பட்டையில் வைத்து.
அவர்கள் ஆசீர்வாதம் கொடுத்தாக தெரியவில்லை மாமா.
பஞ்சாட்சார மந்திரங்களை நமக்காக உச்சரித்து செல்வது போல உணர்கிறேன் எனக்கூற….
மாமா என அவள் கூறிய அந்த வார்த்தை, ஆதித்தனின் உள்ள உணர்ச்சிகளை உசுப்பேற்றியது.
அவனது கால்கள் அதற்கு மேல் பயணிக்க மறுத்து. திடீரென நின்றுவிட்டது.
திரும்பினான்.
பதற்றம் தொற்றிக்கொண்டது இவளிடம்.
இருவரது முகங்களும் அருகருகே … புண்முறுவல் பூத்தது போல் பிரகாசம்.
இரு ஜோடி கண்களிலும் காதல் முன்னுரை. இரு மேனிகளும் ஸ்பரிச விரிவுரை எழுத முற்பட்டது. கரங்கள் நான்கும் பிண்ணிப் பிணைய.
கால்கள் கவிதை வரிகளை தரைப் பாடத்தில் எழுதிக்கொண்டிருந்தன.
மௌனம் தான் இவர்கள் பேசிய காதல் மொழி.
நிசப்தமான இந்த இடத்தில் இரண்டு இதயங்களின் துடிப்பு வாத்தியம் அபிநயம் மீட்டிக்கொண்டிருந்தது.
இசைக் கருவிகள் இல்லாது. இருள் சூழ்ந்த பகுதியில் நடந்து வரும் காதல் பாடசாலையில் சிலையாக நின்றிருந்தனர் இருக் காதல் பறவைகளும்.
நிணவுற்ற இவ்விருவரும். மெல்ல நிலையுணர தொடங்கினர்.
தேவி……
ம்ம்ம்ம்ம்…
இப்போது மெல்லிய புள்ளிமான் தேகவுடையாள் அங்கம்மா தேவியின் இரு தோள்களிலும் இவனது கரங்கள் பதிந்திருந்தது.
பாவையே. பைந்தமிழ் சோலையே.
பஞ்சவர்ண மாலையே .
கருந்தடாக சூழலில் என் கரம் பற்றிய உன்னை எப்போதும் கைவிடேன்.
இது உதடுகளால் உருவான வார்த்தையல்ல. உள்ளுணர்வின் வெளிப்பாடு என படபடவென ஆதித்தன் பேசிக்கொண்டிருக்க.
மெய்யுருகிப் போயிருந்த மேனிச் சங்கதியாள்.தலைவன் தாள் பணிந்து நிலையாக வர மனமின்றி சிலையாக காட்சி தந்தாள்.
வாள் பிடித்த கரங்கள். ஆள் பிடித்தபோது ஆதித்தனின் விரல்கள் நடுங்கியது.
என்னை ஏன் அப்படி விழுங்குவது போல பார்க்கிறீர்கள்….. தேவியார்
பட்டும் படாமல் …தொட்டுவிட்டு தோரணையில் நின்றிருந்த ஆதித்தனுக்கு..
பேச்சு வரவில்லை.
ம்ம்ம்ம்ம்………. ஆதித்தன்
என்னுள் இவ்வளவு தூரம் தாங்கள் வியாபிப்பீர் என்று கணப்பொழுது கூட நான் நினைக்கவில்லை. அந்த ஈசனும் அவன் மனைவியும் போல உங்கள் திருக்கரத்தை பற்றிக்கொண்டே வாழ்க்கை முழுதும் நான் வரவேண்டும் என முணகிக்கொண்டினுந்தாள் இளவரசி.
காதல் போதையில் மயங்கி இன்னும் வெளியே வர இயலாது. சில நாழிகையில் தான் வாழ்வே வேறு பக்கமாக மாறி பயணிப்பதை எண்ணி.
சொர்க்க உலகில் மிதந்து கொண்டிருந்தான் ஆதித்தன்.
இவள் பேசிய ஒவ்வொரு சொற்களும் இவனுக்கு அமுத விருந்து போல மனப்பசியை ஆற்றிக்கொண்டிருந்தது.
இருவரின் இதழ்கள் எதிரெதிரே…பிரம்மிப்பு.. ஆச்சரியம். காதல்.. இவைகளால் கட்டுப் போட்டிருந்த அந்த கணத்தில்..
எதிரெதிரே இருவரது சொற்றொடர் உதிர்த்த இதழ்கள். வெகு வேகமாக நெருக்கி கொண்டிருந்தது.
டப்….டப்…டப்…டப்…
படபடத்தது இருவரின் இதய படிக்கட்டுகள்…….
தேவி………
ம்ம்ம்ம்ம்ம்……
ம்ம்ம்ம்ம்ம்……
வார்த்தைகள் மறைந்து போயின….
ஆதித்தனின் இரு கரங்களும்.. இளவரசியின் கன்னக்குழியை பற்றியிருந்தது.
இவள் நாவில் எச்சில் ஊறிவில்லை.. அதற்கு பதிலாக தித்திக்கும் தேனமுதம் பெருக்கெடுத்தது..
கன்னித் தமிழ் காதல் கதை வெந்தழலில் எழுதப்பட..
இதழ்களின் இணைப்பு ஸ்பரிசத்தினால் எழுந்த ஒலியலைகள் அந்த இருள் பகுதி முழுவதும் எதிரொலித்தது.
நாக்கரங்களும், இருவிதழ்களும் சிலிர்த்தெழுந்து. கனியும் கன்னத்தில் நனிந்த சிலிர்ப்பும். நாச் சொற்கள் சத்தமின்றி இடமாறின இருவிதழ்களாலும்….
வெளியே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. உள்ளே இங்கு சோழ தேசத்தின் வாரிசுகள் அங்கங்களால் வியாபித்து.ஆன்மாவால் ஒன்றிப்போய். இதயங்களை இடமாற்றிக்கொண்டிருந்தனர்…
இப்போது மருத்துவச்சாலையின் வெளிப்பக்கத்தில் அமைதி.
உள்ளேதான் சோழ நாட்டின் இளவரசியும் பாளைய தேசத்து இளவரசனும் நடத்திய காதல் போரில். களவு போய்க்கொண்டிருந்தனர் கன்னியும். காளையனும்.
ஆதித்தா…..
அங்கம்மா….எங்குள்ளீர்கள்….
வெளியிலிருந்து கேட்டது இளவரசன் ராஜேந்திரனின் குரல்….
முந்தைய தொடர்: http://bit.ly/2lKnApa