உலகம் முழுவதும் கொரானா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக. கடந்த சில நாட்களாக இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் கடும் அச்சத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஏற்கனவே உலகம் முழுவதும் கடுமையான வீரியத்துடன் பரவி வரும் இந்த வைரஸ். இந்திய மக்களை தாக்காத வண்ணம் பேரிடர் மேலாண்மை மூலமாக நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அதிகாரிகள் கூறினாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விட அவசர காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேரிடர் மேலாண்மை பணிகளை இந்திய அரசு இதுவரை தொடங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி. இந்தியா மிகவும் ஆபத்தான கட்டத்தில் பயணிப்பதாகவும், அதன் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்றி தங்களது ஒற்றுமையை காட்டவும் என்று பேசியுள்ள விவகாரம் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளது.

இந்த பாதிப்புக்கு உள்ளான பல நாடுகள் தங்களின் மக்கள் மீது அக்கறை கொண்டு பல்வேறு முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்த வேளையில் இந்தியாவில் சமூக விலகல கடைபிடிக்காத பல மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகரிக்கரித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை தமிழ் நாடு, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் கடந்த இரண்டு நாட்களில் கொரோனா வைரஸ் வழக்குகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

பூமியை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இரண்டு வித ஆபத்துகளில் முதலாவது இயற்கைப் பேரிடர்கள், இரண்டாவதாக மனிதனால் ஏற்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த பேரிடர்கள்.

இரண்டாவதாக கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரப் போட்டியின் விளைவாக தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் எனும் வர்த்தக போரால் உலக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக அளவில் 9 லட்சத்து 35 ஆயிரத்து 197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இதுவரை 47 ஆயிரத்து 192 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதிகப்படியாக அமெரிக்காவில்  2 லட்சத்திற்கும் அதிகமான பேரும். இத்தாலியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் .

கடந்த 2005ஆம் ஆண்டு அமெரிக்காவை தாக்கிய கத்ரீனா சூறாவளி புயலால் அப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். சரியான திட்டமிடுதல் இல்லை என்ற காரணத்தை முன்வைத்து அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் அரசின் நிர்வாகத்தைப் பற்றி கடுமையான விமர்சனம் செய்தனர் அந்நாட்டு மக்கள். அதே நேரத்தில் அமெரிக்கப் புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க ஆயிரக்கணக்கான மருத்துவர்களை அனுப்புகிறோம் என்று தெள்ளத்தெளிவாக அறிவித்தார் கியூபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ. இதில் கவனிக்கத்தக்க விஷயம். உலகின் வல்லரசு நாடுகளுக்கெல்லாம் தலைவனாக தன்னை அறிவித்துக் கொண்ட அமெரிக்கா. தன் அரசை காப்பாற்றிக்கொள்ள எடுத்த நடவடிக்கையை விட. மக்கள் மீது கொண்டிருக்கவில்லை என்பதை அப்போதை தேர்தல் முடிவுகள் பறைசாற்றின.

இதேபோன்ற ஒரு சம்பவம் தான் இந்தியாவின் போபால் விஷவாயு கசிவு. இந்த சம்பவத்தால் சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளின் கவனத்தை கொண்டது. உள்ளூர் இயற்கை வளங்களை அழித்து விட்டு உலக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்ததன் பலனை இந்திய மக்கள் இன்றளவும் அனுபவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்று நோயை கட்டுக்குள் கொண்டுவரஅமெரிக்காவில் தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அதுமட்டுமின்றி அங்குள்ள மக்களுக்கு சானிடைசர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உடனடியாக வழங்கும் பொருட்டு அரசு அதிகாரிகளை மூடுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும். அமெரிக்காவிலிருந்து வரும் செய்திகள் அங்குள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உபகரணங்களை வாங்கக் கூட அரசிடம் நிதி இல்லை என்று அதிர்ச்சியான தகவல்களை தெரிவிக்கின்றன.

 

இந்தியாவில் அவசர நிலை அமலில் இருக்கும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தேசிய விலை நிர்ணய குழுவினரின் நேரடி கட்டுப்பாட்டில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை பல்வேறு தரப்பினரிடமும் எழுந்து வருகின்றது.

சீனா, இத்தாலி, ஜெர்மனி, நார்வே, ஜப்பான், பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற 123 நாடுகள் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டு இருந்தாலும்.

குறிப்பாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றன. அதன் பொருட்டு. தங்களது மக்களுக்கு காணொளி காட்சிகள் மூலமாக அறிவிப்பு செய்துள்ள அந்தந்த நாட்டு தலைவர்கள்.

நாட்டின் பொருளாதாரம் கடுமையாக விழுந்து விட்டாலும். மக்களின் உரிமைகளும் உடமைகளும் தான் தங்களுக்கு முக்கியம் எனவும். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலவசம் என்று சில நாடுகளும். உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று சில நாடுகளும் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில் ஆசிய கண்டத்தில் அதிக மக்கள் தொகை பெருக்கத்தில் உள்ள இரண்டாவது நாடான இந்தியாவில். கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது தான் தொடங்கியிருக்கிறது.

இதுவரையிலும் சுமார் 3100 பேருக்கு இந்த நோயின் தாக்குதல் பரவி இருப்பதாகவும். சுமார் 85 பேர் வரை உயிரிழந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த நோய் தாக்குதல் வீரியத்தை பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி. தேசிய பேரிடர் கால நிதியை ஒதுக்குவதாகவும்,  அந்தந்த மாநில அரசுகள் உடனடியாக செயல்பட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் படியும் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி கல்விக்கூடங்கள் பொதுமக்கள் கூடும் வணிக வளாகங்கள் போன்றவற்றை வருகின்ற ஏப்ரல் 14 வரை மூடுவதற்கு இந்திய அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு வணிகமும் மீளமுடியாத வீழ்ச்சியை நோக்கி அசுர வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது.அதிகப்படியான வேலை இழப்புகள், எகிறிப் போன விலைவாசி உயர்வுகள்.

வடமாநிலங்களில் தொடரும் விவசாயிகள் தற்கொலை, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிரடி விலை ஏற்றம் என்று நாடு பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் இந்த வேளையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு பொருளாதாரம் முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளது.

ஏற்றுமதி-இறக்குமதி.வெளிநாட்டு முதலீடுகள் எதுவுமின்றி இந்தியாவின் பொருளாதாரமே மீண்டெழும் முடியாத அளவிற்கு கீழே சரிந்துள்ளது.

1959களில் உலக நாடுகளின் ஒப்பீட்டளவில் இந்தியாவின் பொருளாதார உற்பத்தி 4.2 சதவிகிதமாக இருந்த நிலையில். 2003 2004 ஆம் ஆண்டு 8.5 சதவீதமும். 2006-07 ஆண்டில் 9.6 சதவீதமாக உயர்ந்தது.

அடுத்தபடியாக 2014ஆம் ஆண்டு பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்ற பிறகு பொருளாதாரத்தை கணக்கிடும் முறை அதிரடியாக மாற்றப்பட்டது.

அதற்குப் பிறகு ஏற்பட்ட அந்நிய செலவாணி தடை. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு விதிப்பினால் கடும் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு தற்போது 4.1 சதவிகித உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு ஆசிய நாடுகளிலேயே குறைந்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியாவில் தரக்குறியீடு சரிந்துள்ளது.

 

இந்த நிலையில். கொரோனா வைரஸ் தொற்று தாக்குதலால் உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார சீரழிவின் தாக்கம் இந்திய பொருளாதாரத்தையும் விட்டு வைக்கவில்லைஏற்கனவே பொருளாதார மந்த நிலையால் வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன.

சரியான மருத்துவ திட்டமிடல் இன்றி. வெறும் பேரிடர் மேலாண்மை என்ற வாசகத்தை மட்டும் வைத்துக்கொண்டு இந்திய அரசாங்கம் இந்த வைரசுக்கு எதிரான தாக்குதலை நடத்திக் கொண்டு வருகிறது.

உலகம் முழுவதும் இந்த வைரஸின் தாக்குதலை கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்க மக்களுக்கு அறைகூவல் விடுத்து வருகின்ற இந்த வேளையில்.இந்தியாவிலுள்ள குறிப்பாக ஆளுங்கட்சிக்கு ஆதரவான அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் நாட்டையே ஏளனம் செய்யும் அளவிற்கு தங்களது அதிமேதாவி புத்திசாலித் தனமான கருத்துக்களை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

ஆக மொத்தத்தில் ஊடகத்துறை மட்டுமின்றி நாட்டின் அனைத்து துறையையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. மத்திய அரசு கூறும் செய்திகள் மட்டும்தான் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

1977 ஆண்டு மார்ச் 22வரை  இந்திய அரசியலமைப்பு விதி 352ன் படி அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது . அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின்ஆலோசனை மற்றும் அறிவுறித்தலின் பேரில் அனைத்து பத்திரிகைகளும் மத்திய அரசின் தணிக்கைக்குப் பிறகே வெளியிடப்பட்டன. மக்கள் கேள்வி கேட்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதே போன்ற ஒரு சூழலை தான் தற்போது இந்தியா சந்தித்து வருகிறது.

வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த தான் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசு கூறினாலும் இந்த வியாதியை கட்டுக்குள் கொண்டு வரவும் அதற்கான சரியான மருந்துகளை கண்டுபிடிக்கவும் துளிகூட அக்கறையின்றி செயல்படுவதை கண்கூடாக காணமுடிகிறது.

இதுபற்றி எந்த ஊடகங்களும் வாய் திறக்கவில்லை. கேள்வி கேட்கவில்லை. நீதிபதிகளே மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதை போன்ற குற்றச்சாட்டுகள் எழுகிறது.

இதே நிலை இன்னும் சில நாட்கள் நீடித்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய். பொது மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் இன்று அச்சம் கொள்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

ஏற்கனவே சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ள இந்த சூழலில். அதற்கு மாற்றாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த அரசு முயலவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. இந்த வேலையில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்கு சரியான வழிகாட்டுதல் காட்டாத பட்சத்தில் அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியை இந்தியா விரைவில் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்கின்றனர் அரசியல் மற்றும் பொருளாதார வல்லுனர்கள்.