மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரைக்கிளை உயர்நீதிமன்றம், செய்திகளை போட்டி போட்டு பிரேக்கிங் நியூஸ் தருவதால் வாடிக்கையாளர்களின் கவனம் சீரியலிலிருந்து செய்தி சேனல்களை நோக்கி திரும்பியுள்ளதாக செய்தி சேனல்களை பாராட்டியுள்ளது.

 ”தனியார் மற்றும் அரசின் தொலைக்காட்சி சேனல்களுக்கான  கட்டணத்தை மாற்றிய டிராய் , வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என உத்தரவிட்டது. இந்த புதிய விதிமுறை உத்தரவுகள், பிப்ரவரி 1 முதல் நடைமுறையில் உள்ளது. இதனால் தனியார் நிறுவனங்கள்  வாடிக்கையாளர்களை சுரண்டி கொள்ளையடிப்பது நிறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் பணம் கொடுத்து விரும்பிய சேனல்களை பார்ர்க்கும் போது தொலைக்காட்சி நிறுவனங்கள் வியாபார நோக்கில் பொய்யான பல விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வது இயற்கை நீதிக்கு எதிராக உள்ளது. செய்தி செய்யும் போது ஸ்கிரால்,டிக்கர் என அதிகளவில் திரையை மறைத்து ஒளிபரப்பாகிறது. தனியார் கட்டண சேனல்களில் விளம்பரங்கள் வெளியிட இடைகால தடைவிதிக்க வேண்டும்,”என மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி என்பவர் உயர்நீதிமன்ற முதுரைகிளையில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்தியாவில்  874 சேனல்கள் உள்ளன அதில் 125 சேனல்கள் விதிகளை மீறியதாக டிராயே அறிக்கை வெளியிட்டிருந்தது. தொடர்ந்து செய்திச் சேனல்கள் போட்டி போட்டு செய்திகளை பிரேக்கிங் நியூஸ் ஆக வழங்கி, சீரியல்கள் பார்த்து மக்களின் மனம் கெடாமல் இருக்க கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவதால் செய்தி சேனல்களுக்கு உயர்நீதிமன்றம் தங்கள் பாராட்டை தெரிவித்தது. இதுகுறித்து டிராய், மத்திய ஒளிபரப்புத்துறைசெயலர், தமிழக உள்துறை செயலர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை மார்ச் 19 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.