இன்றைய காலை வர்தகத்தில் சென்செக்ஸ் 205.27 புள்ளிகள் அதிகரித்து 39,919.47 புள்ளிகளோடு தொடங்கியது. மேலும்
நிஃப்டி 50.49 புள்ளிகள் உயர்ந்து 11,972.30 புள்ளிகளில் தொடங்கியது.

திங்கட்கிழமை வெளியிடப்பட்ட சீன உற்பத்தித் துறையின் தனியார் ஆய்வு, ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் விலக்கல் காரணமாக, தொழிற்சாலை மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் ஒரு மிதமான ஏற்றத்தினை எதிர்பார்க்கப்படுகிறது

ஹெச்டிஎல்சி, பி.பி.சி.எல், ஐஓசி, ஹீரோ மோட்டோகார்ப், பார்தி இன்ப்ராடெல், ஹெச்டிஎஃப்சி, கெயில் மற்றும் விப்ரோ ஆகியவை அதிகரித்தும். டாடா மோட்டார்ஸ், எஸ்பேங்க், ஐசர் மோட்டார்ஸ், எம் & எம், ஹிண்டால்கோ மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தும் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு ஜூன் 3ல் 69.50 டாலராக குறைந்துள்ளது, வெள்ளியன்று 69.67 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐசார் மோட்டார்ஸ், எஸ்கார்ட்ஸ், திலிப் பில்டிகான், எஸ்.எம்.எல் இசுயூ, அதல் ஆட்டோ, என்டிபிசி
திலிப் பில்டிகான். எஸ்.எம்.எல் இசுசூ அதுல் ஆட்டோ என்டிபிசி டாட்டா ஸ்டீல் பிஎஸ்எல் வைபவ் உலகளாவிய மற்றும் என்.எல்.சி. இந்தியா ஆகிய நிறுவனங்களின் செய்திகள் இன்று வெளியிடப்படுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கைக் குழு (MPC) அதன் இரு மாதக் கொள்கையை ஜூன் 6 அன்று அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

டாடா குளோபல் ஃபவரேஜ் நிறுவனப் பங்குகள் 254 வரை உயரும் எனவும் உஜ்வல் ஃபைனான்சியல் சர்வீசஸ் 372 இலக்கு நிலையமாகவும் இன்டெர்குளோப் அவியேஷன் பங்குகள் 1710 வரை‌ உயரும் என குறுகிய கால வர்த்தகத்திற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் விற்பனை 3 சதவீதம் அதிகரித்து 4.19 லட்சமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 4.07 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை ரூ 676.15 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர் என்றும் அதேவேளையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 394.09 கோடி ரூபாய்க்கு பங்குகளை வாங்கியுள்ளதாகவும் சந்தைக்குழு தெரிவித்துள்ளது,

திரிவேணி இன்ஜினியரிங் மற்றும் தொழிற்துறை நிறுவனத்தின் குழு கூட்டம் திங்களன்று (ஜூன் 3) நடைபெற உள்ளது. இதில் பைபேக் எனப்படும் தனது பங்குகளை திரும்ப வாங்குவதற்கான திட்டத்தை பரிசீலிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஹீரோ மோட்டோகோப், பஜாஜ் ஆட்டோ மற்றும் டி.வி.எஸ் மோட்டார் போன்ற மாருதி கார்கள் நிறுவனங்களின் மே மாதம் விற்பனை பட்டியல் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படுகிறது.

ஆட்டோமொபைல் துறை கண்காணிப்பு ஆய்வாளர்கள் இந்த துறையின் விற்பனை புள்ளிவிவரங்கள் மந்தமாக இருப்பதை எதிர்பார்க்கின்றன, ஒட்டுமொத்த மந்தநிலை இந்த முடிவுகளில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.