இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான முதல் காலாண்டில் 3 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று உலகலாவிய வளர்ச்சி குறியீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டேன்லி கூறியுள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி ஏற்பட்டு வேலை இழப்புகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளது அந்த நிறுவனம்.

இந்நிலையில் முன்னாள் நிதிச் செயலாளர் திரு சுபாஷ் சந்திர கார்க் பத்திரிகை வாயிலாக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்படி நாட்டின் பொருளாதார மந்தநிலையை சீரமைக்க சுமார் 5 லட்சம் கோடியை உடனடியாக திரட்ட வேண்டும் எனவும். மத்திய அரசு மூலதன சந்தைகள் மூலமாக இருந்து கடன் வாங்குவதற்கு பதிலாக, ரிசர்வ் வங்கியிடம் நேரடியாக கடன் வாங்குவதை மாற்றும் விதமாக. மத்திய ரிசர்வ் வங்கியில் நடைமுறையில் உள்ள நிதியியல் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை திருத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் அவர்.

இதனால் நாட்டின் அந்நிய மூலதனம் உயர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார் சுபாஷ் சந்திர கார்க்.

அந்நிய நேரடி முதலீடுகள் கடந்த சில ஆண்டுகளாக அதிகப்படியாக வெளியேறியதன் காரணமாக நாட்டில் தற்காலிக நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த வேளையில் மத்திய அரசு கொண்டு வந்த சில சட்ட திருத்தங்களால் வெளிநாட்டு முதலீடுகள் முழுமையாக முடங்கிப் போயுள்ள இந்தச் சூழலை சமாளிக்க. மத்திய அரசு அந்நிய செலாவணி மற்றும் உலக வங்கியிடம் இருந்து 7.8 லட்சம் கோடி கடன் வாங்குவதற்கு உத்தேசித்துள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக ஆகும். நடப்பு நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க  நிதியாண்டின் முதல் அரையாண்டில் ரூ. 4.88 லட்சம் கோடியும் இரண்டாவது அரையாண்டில் மீதமுள்ள தொகையை கடன் வாங்க திட்டமிட்டுள்ளது மத்திய அரசு.

இந்தியாவில் சுரங்கம்.கட்டுமானம். உற்பத்தி போன்றவை, சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட அனைத்து தொழிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால்  இதனால் பாதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு உதவிட அவசர நிதியாக சுமார் 60 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் 15 வது நிதி ஆணையக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை வீடியோ கான்பரன்சிங் மூலம் மீண்டும் நடைபெற்றதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வளர்ந்து வரும் பொருளாதார மந்தநிலை. மொத்த உள்நாட்டு உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம் மற்றும் நிதி பற்றாக்குறை போன்ற பொருளாதார நிலமைகளை சீரமைப்பது தொடர்பான தன்மைகளை மதிப்பாய்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளது மத்திய அரசு.