‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகத்தை சேரன் உருவாக்குவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
ட்விட்டரில் தொடர்ந்து இயங்கும் சேரனிடம் ரசிகர்கள் இதுபற்றிய கேள்வியை எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், நிச்சயம் ‘ஆட்டோகிராஃப் 2’ திரைப்படத்தை இயக்குவேன் என கூறியுள்ளார்.
உறுதி அளித்தாலும், எப்போது இயக்குவார்? அடுத்தப் படமே அதுதானா என்றெல்லாம் சேரன் தகவல் கூறவில்லை . சேரன் இயக்கி நடித்த ‘திருமணம்’ சமீபத்தில் வெளியானது. இதற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிக்கும் படத்தை இயக்கும் திட்டமும் அவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.