டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளனர்.
தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில், ராஜேஷ்.எம் செல்வா இயக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்தில் விக்ரம் நடித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதேபோல், கெளதம் மேனன் இயக்கியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் ஒருபக்கம் தாமதத்தில் உள்ளது. இந்நிலையில்தான் விக்ரம் அஜய் ஞானமுத்து கூட்டணி உருவாகியுள்ளது.