மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகும் ‘எஸ்.கே – 16’ திரைப்படத்தின் நடிகர்கள் ஒவ்வொருவராக அறிவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இதில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்களும் அறிவிக்கப்பட்டுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஆன்டனி ரூபென் படத்தொகுப்பு செய்கிறார். வீரசமர் இப்படத்துக்கு கலை இயக்குநராக பணிபுரிகிறார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தில் முக்கிய நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர்.
அனு இமானுவல், சமுத்திரக்கனி, பாரதிராஜா, சூரி, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு என பலரும் நடிக்கும் இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார்.