சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஏஞ்சலினா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
நெஞ்சில் துணிவிருந்தால், ஜீனியஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படத்தை சுசீந்திரன் தொடங்கினார்.
முன்னணி நடிகர் யாரும் பெரிய அளவில் இடம்பெறாத இப்படத்தில் கிரிஷா குரூப் என்பவர் முதன்மையான பாத்திரத்தில் நடிக்கிறார். மற்றொரு முக்கிய பாத்திரத்தில் சூரி நடிக்கிறார்.
டி. இமான் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டிருக்கிறது. படத்தின் வெளியீடு பற்றிய தகவல் ஜூன் மாதம் அறிவிக்கப்படுகிறது.