‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ‘தேவ்’ எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. இத்தகைய சூழலில்தான் அவர் கைதி படத்தில் நடிக்கிறார்.
நான்கு மணி நேரத்தில் நடத்தப்பதைப்போல் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் கதை, சிறைச்சாலையில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்தியாக இப்படத்தில் கதாநாயகி இல்லை. ட்ரீம் வாரியர் தயாரிக்கும் இப்படத்துக்கு சாம்.C.S இசையமைக்கிறார்.