ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ‘கோமாளி’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிகள் கூட இன்னும் வெளியாகவில்லை என்றாலும், படத்துக்கு இப்போதே வரவேற்பு கிடைத்திருக்கிறது.
‘கோமாளி’ திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை ஸ்டார் விஜய் கைப்பற்றியிருக்கிறது. இதேபோல் மல்டிபிளெக்ஸ் பார்ட்னராக ஏஜிஎஸ் சினிமாஸ் இணைந்திருக்கிறது.
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் ‘கோமாளி’, ஜெயம் ரவியின் 24-வது  திரைப்படமாகும்.
இதில் காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். வேல்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.