சசிக்குமார் நடிக்கும் புதிய படத்தில் இப்போது இயக்குநர் இமயம் பாரதிராஜா மற்றும் சரத்குமார் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு (ஏப்ரல் 10) முன்னர் தொடங்கியது. இப்படத்தில் இதுவரை முயற்சிக்காத புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார் சசிக்குமார்.
சென்னை மற்றும் மும்பையில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்நிலையில், பாரதிராஜா மற்றும் சரத்குமார் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
பாரதிராஜா சசிக்குமாரின் அப்பாவாகவும், சரத்குமார் ஐபிஎஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.