சிறந்த ராப் பிரிவுக்கான கிராமிய விருது பெற்ற முதல் பெண் என்ற வரலாற்று  சாதனயை  படைத்துள்ளார் ப்ரண்டி கார்லே.

 

இசைக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான கிராமிய விருது, கடந்த 60 ஆண்டுகளாக  84 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறந்த அமெரிக்கா ரூட்ஸ் பேரஃஓர்மன்ஸ்  (Best American Roots performace) , சிறந்த அமெரிக்கன்  ரூட்ஸ்  பாடல் (Best American Roots Song ) மற்றும் சிறந்த ராப் ஆல்பம்  ( Best Rap Ablum) உள்ளிட்ட  மூன்று பிரிவுகளில் விருது வாங்கி அசத்தினார் ப்ரண்டி கார்லே. இது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது .

 

பிரண்டு  கார்லே போலவே லேடி காகாவும் மூன்று விருதுகள் வாங்கி அசத்தியுள்ளார். ஜோன்னே (Joanne) இசை ஆல்பத்துக்காக சிறந்த பால் சோலோ பேரஃஓர்மன்ஸ் மற்றும் ஷாலோவ் அல்பத்திற்காக இரு விருதுகளையும் பெற்றார். ஸ்வீட்னர் இசை ஆல்பத்தில் பாடியதற்காக  பாப் பாடகி அரியணை கிராண்டேவுக்கு சிறந்த பாப் குரல் ஆல்பம் என்ற பிரிவில் முதன்முறையாக விருது பெற்றுள்ளார்.

 

இந்த ஆண்டுக்கான சிறந்த பாடல் பிரிவுக்கான கிராமிய விருதினை  துப்பாக்கி வன்முறையால் நிகழும் உயிர் இழப்புகளை மையப்படுத்தி உருவான  சில்டிஷ் காம்பினோவின் “திஸ் இஸ் அமெரிக்கா” என்ற  பாடல் பெற்று அசத்தியது. சிறந்த புதுமுசிகா கலைஞர் பிரிவுக்கான விருதினை பிரிட்டன் பாடகரான டுவா லிபா வென்றுள்ளார். சிறந்த காமெடி ஆல்பம்  “Equanimity and the bird revelation”  ஆல்பம் வென்றது.