வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கல்யாணி பிரியதர்சன் நடிக்கவுள்ளார் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கல்யாணி பிரியதர்சன் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ படத்தில்  நடிக்க ஒப்பந்தாமாகியுள்ளார். மேலும் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் தமிழ் படம் ஒன்றிலும் ஹீரோவினாக நடிக்கிறார்.

இவர் நடிகை மட்டுமல்லாது உதவி கலை இயக்குனாராகவும் பணியாற்றியிருக்கிறார். மேலும் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ஹலோ’ தெலுங்கு படத்திற்காக பிலிம் ஃபேர் விருதையும் பெற்றிருக்கிறார்.