ஜோதிகா நடிக்கும் 2டி நிறுவனம் தயாரிக்கும் 11-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது.
காற்றின் மொழி படத்தில் நடித்தப் பிறகு கல்யாண் இயக்கும் இன்னும் தலைப்பிடப்படாத படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
ஜோதிகாவுடன் ரேவதி முதன்மையான பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இன்று வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்குடன் இதன் தலைப்பு அறிவிக்கப்படுமென தெரிகிறது.