‘மாயா’, ‘இறவாகாலம்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் புதிய படம் ‘கேம் ஓவர்’.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படம் முழுவதும் சக்கர நாற்காலியில் இருக்கும் மாற்று திறனாளி பாத்திரத்தில் டாப்ஸி நடித்திருக்கிறார்.
ஒய்நாட் ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தயாரிக்கும் இப்படத்தின் இந்தி வெளியீட்டு உரிமையை இப்போது முன்னணி இயக்குநர் அனுராக் காஷ்யப் பெற்றிருக்கிறார்.
இந்தத் தகவலை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. முதற்கட்டமாக தமிழில் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.