ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் சமீபத்தில் மறைந்த தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் பங்காற்றியுள்ளார்.

பல வருடங்களுக்குப் பிறகு போலீஸ் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குகிறார். நயன்தாரா முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

படம் குறித்து இப்போது வெளியாகியிருக்கும் தகவலில், இதன் கதை விவாதத்தில் ஜான் மகேந்திரன் பங்கேற்றதாக கூறப்பட்டிருக்கிறது.

மேலும், ‘தர்பார்’ படத்தின் ஒரு சிறிய பாத்திரத்தில் ஜான் மகேந்திரன் தோன்றுவதாகவும் கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் வெளியான ‘சச்சின்’ திரைப்படத்தை ஜான் மகேந்திரன் இயக்கியது குறிப்பிடத்தக்கது.