தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் தவிர்க்கமுடியாத இடத்தை பெற்றுவிட்டார் ஜிப்ரான். தற்போது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் மற்றொரு சம்பவமும் நடந்தேறியுள்ளது.

‘தல’ அஜித்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற ஜிப்ரானுக்கு உற்சாகமூட்டும் தகவலைச் சொல்லி நம்பிக்கை அளித்திருக்கிறார் அஜித்.

‘ராட்சஸன்’ திரைப்படத்தில் ஜிப்ரானின் பின்னணி இசை அனைவராலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. இதற்காக அவர் பரவலாக பாராட்டப்பட்டார். தற்போது இந்த சந்திப்பில் தல அஜித்தும் ஜிப்ரானிடம் ‘ராட்சஸன்’ திரைப்பட பின்னணி இசையை பாராட்டி பேசியுள்ளார்.

அதுமட்டுமின்றி, ஜிப்ரானுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக விரைவில் ‘நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்’ என அஜித் உறுதியளித்திருக்கிறார். இந்தத் தகவலை இசையமைப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததை தொடர்ந்து ஏராளமானோரால் கவனிக்கப்பட்டு வருகிறது