காதல், கல்லூரி, வழக்கு எண் போன்ற சிறந்த படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல், ‘யார் இவர்கள்’ என்ற படத்தை  தற்போது உருவாக்கி வருகிறார்.
இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பே இன்னும் அகலாத நிலையில், அவர் இயக்கப்போகும் மற்றொரு படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பெண் பாத்திரத்தை முதன்மையாகக்கொண்டு உருவாகவுள்ள பாலாஜி சக்திவேலின் புதிய படத்தில் சாந்தினி தமிழரசன் நடிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
‘ரா ரா ராஜசேகர்’ என்கிற பட பணிகளிலும் ஈடுபட்ட பாலாஜி சக்திவேல், ‘அசுரன்’ படத்தின் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.