இந்தியாவில் நேற்று வெளியான ஹாலிவுட் திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ முதல் நாள் வசூலில் பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்களை முந்தியிருக்கிறது.

இந்தியாவில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நேற்று வெளியானது.

வெளியான அனைத்து திரையரங்கிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’. சென்னையில் பேட்ட 1.12 கோடியும், விஸ்வாசம் 88 லட்சமும் வசூலித்தன.

இப்போது ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ இந்த இரண்டு படங்களைவிட அதிகமாக வசூலித்திருக்கிறது. அதேபோல் இந்திய அளவில் ஒரேநாளில் இப்படம் 50 கோடி வசூல் செய்திருக்கிறது.