தான் அறிமுகமான ‘வெண்ணிலா கபடிகுழு’ படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் இன்று வெளியிட்டார்.

சுசீந்திரன் இயக்கிய முதல் படமான வெண்ணிலா கபடிகுழுவில் விஷ்ணு விஷால், சூரி, கிஷோர், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் நடித்த பலரும் தற்போது முன்னணி நடிகர்களாக வலம்வருகின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது ‘வெண்ணிலா கபடிகுழு 2’ உருவாகி வருகிறது.

முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் விக்ராந்த் தவிர, முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இதிலும் நடிக்கின்றனர். செல்வசேகரன் இயக்கும் இதன் கதையை சுசீந்திரன் எழுதியுள்ளார். ஜூன் மாதம் படம் வெளியாகிறது.