வெள்ளைப்பூக்கள் படத்தின்மூலம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார் நகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக்.

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார் விவேக். அமெரிக்காவில் இருக்கும் தன்னுடைய மகனுடன் வாழ அசைப்பாடு  அங்கு செல்லும் விவேக் பல நண்பர்களின் தொடர்பு கிடைக்கிறது.  அங்கு அந்த நண்பர்கள் மற்றும் அவரை சுற்றியுள்ள மனிதர்கள் காணமால்போவதால் ஏற்படும் சிக்கல்களை மையமாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளதாக படத்தின் இயக்குநர் விவேக் இளங்கோவன் கூறுகிறார். இவர் சர்வதேச அளவில் விருதுபெற்ற குறும்படங்களை இயக்கியவர்.

படம் ஏப்ரல் 19 வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.