முன்னணி நடிகர் விஷால் – அனிருத் ஆகியோர் இணைந்து பணியாற்றும் சூழ்நிலை இன்னும் அமையாதபோதிலும், விஷால் படத்தில் பாடுவதை அனிருத் தொடர்கிறார்.
ஏற்கனவே, விஷால் நடித்த ‘மருது’ படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். அடுத்ததாக ‘அயோக்யா’ படத்தில் அனிருத் பாடியுள்ள ‘கண்ணே கண்ணே’ பாடல் நாளை வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கியுள்ள ‘அயோக்யா’ படத்தில் போக்கிரித்தனமான போலீஸாக விஷால் நடித்துள்ளார். பார்த்திபன் வில்லனாக நடிக்கும் இதன் ட்ரைலர் பரவலாக வரவேற்பை பெற்றிருக்கிறது.
சாம் C.S இசையமைப்பில் இதன் பாடல்கள் உருவாகியுள்ளன. முதலில் அனிருத் குரலில் வந்திருக்கும் பாடலை நாளை வெளியிடுகின்றனர். மே 10-ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.