முதன் முறையாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் ’99 சாங்ஸ்’ படத்தின் முக்கியத் தகவல்களை ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
ரஹ்மானின் கதையில் உருவாகும் இப்படத்தை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தை தயாரிக்கிறார்.
எடில்ஸி வர்கீஸ், டென்ஸின் தல்ஹா நடிக்கும் இப்படத்தின் முக்கியப் பாத்திரத்தில் எயான் பட் என்பவர் நடிப்பதாக ஏ.ஆர். ரஹ்மான் அவரது ட்விட்டரில் இப்போது அறிவித்திருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படம் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகுமெனவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.