யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்ற கருத்துக்கு எற்ப தேசிய குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தும் பட்சத்தில் என்னவிதமான அசம்பாவிதம் நடக்க இருக்கிறது என்பதற்கான சான்றுகள்தான் தற்போது டெல்லியில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை.

பொதுவாகவே முஸ்லிம் என்றால் தீவிரவாதிகள் என்ற அடையாளத்தை உருவாக்கி வருகிறது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். ஆனால் குஜராத் கலவரம் தொடங்கி உத்திரப்பிரதேச கொலை என தற்போதைய டெல்லி கலவரம் வரையிலும் முஸ்லிம் இந்துக்களை கொன்றதாக செய்திகள் இல்லை. ஆனாலும் இந்துக்களால் கொல்லப்படும் முஸ்லிம்களின் எண்ணிக்கை நாளடைவில் பெருகி வருவதைப் பார்த்தால் இந்தியாவில் இந்து தீவிரவாதம் தழைத்தோங்கி வளர்ந்துள்ளதை காண முடிகிறது.

சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டபேரவைவையில் காரசாரமாக பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. குடியுரிமை சட்டத்தின் கீழ் யார் பாதிக்கப்பட்டுள்ளார் என்று காட்டுங்கள் பார்க்கலாம் என சவால்விட்டு பேசியது ஞாபகம் இருக்கலாம்.

சபையில் இல்லாத எதிர்க்கட்சிகளைப் பார்த்து கடும் கோபமாக பேசிய எடப்பாடியாருக்கு. அவர் சார்ந்த கட்சியினரே பதிலடி கொடுத்துள்ளனர் .
டெல்லியின் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதையும். அவர்களின் வாழ்விடங்கள் கொளுத்தப்படுவதையும் கண்டுவிட்ட பிறகும் எடப்பாடி மீண்டும் இப்படி ஒரு கேள்வியை கேட்க முடியாது என்று நினைக்க தோன்றுகிறது.

ஆனாலும் எடப்பாடி பழனிச்சாமி அப்படி ஒரு கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பார். எப்படித் தெரியுமா.? குடியுரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் யாராவது பாதிக்கப்பட்டார்களா என்றுதான் நான் கேட்டேன் என்றுகூட சொல்லத் தயங்க மாட்டார். ஏனெனில். தங்கள் கட்சிக்கு வாக்களித்த மக்களைவிட, தங்கள் கட்சிக்கு வாழ்வளித்தவர்களுக்கு வாஞ்சையுடன் ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

இன்று நாடே பற்றி எரியும் இந்த அவலநிலைக்கு அஇஅதிமுக மற்றும் பாமக அளித்த வாக்குகள்தான் முக்கிய காரணம் இருந்து வருகிறது. இந்தக் கட்சிகள் குடியுரிமை சட்டத்தினை எதிர்த்து வாக்களித்திருக்கும் பட்சத்தில், அன்றைய உபி கலவரம் தொடங்கி இன்றைய டெல்லி கலவரம் வரை நீண்டிருக்காது.
ஆனாலும் எடப்பாடி அவர்களின் வாதம், பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்பதுதான்.

அய்யா எடப்பாடி அவர்களை ஒருமுறை டெல்லிக்கு அழைத்துச் சென்று அங்கே குடியுரிமை போராட்டத்தில் இறந்து போன முஸ்லிம்களின் கல்லறைகளை காண்பித்து வாருங்கள். அப்போதாவது எங்கள் பிணத்தின்மீதுதான் அவர் ஆட்சி புரிகிறார் என்று தெரியட்டும்.