உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ள நிலையில். அதிக கதிர்வீச்சுகள் வெளியிடும் போன்களை கண்டவறிவதற்க்காக ஜெர்மன் கதிர்வீச்சு பாதுகாப்பு அலுவலகம் நடத்திய ஆய்வில் அதிகபட்சமாக MI-A1 மொபைல்போன் 1.75  வாட்ஸ் கதிவீச்சுகளை வெளியிடுவதாக தெரியவந்துள்ளது.

மனிதர்களின் அன்றாடம் வாழ்வில் மொபைல்போன்கள் ஒரு பகுதியாக உள்ளது. நாம் வாழ்ந்துவரும் இந்த தொழில்நுட்ப உலகத்தில் காலையில் கண்விழிப்பது  முதல் இரவு தூங்கும்வரை செய்யும் அனைத்திற்கம் நாம் செல்போனையே பயன்படுத்துகிறோம்.   இந்நிலையில், ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கையும், அழைப்புகளின்போது பேசும் காலஅளவும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என செல்லுலார் டெலிகம்யூனிகேஷன்ஸ் அண்ட் இன்டர்நெட் அசோசியேஷன் (Cellular Telecommunications and Internet Association – CTIA) நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து சமீபத்தில், ஜெர்மன் கதிர்வீச்சு பாதுகாப்பு அலுவலகமானது (The German Federal Office for Radiation Protection) பல நிறுவனங்களின்  செல்போன்களில் வெளியாகும் கதிர்வீச்சுகளைப் பரிசோதனை செய்தது. இந்தப் பரிசோதனையில், டாப்-15 இடங்களில் முதலிடம் உட்பட நான்கு இடங்களை MI மாடல்கள் பிடித்தன. அதுமட்டுமில்லாமல் ஒன்ப்ளஸின் 4 மாடல்களும் டாப் இடங்களை பிடித்துள்ளன. இந்த ஆய்வில் அதிகபட்சமாக MI-A1 மாடல் 1.75 வாட்ஸ் கதிர்வீச்சுகளை வெளியிடுவதாக தெரியவந்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஒன்ப்ளஸ் 5T(1.68 வாட்ஸ்) மாடலும், மூன்றாம் இடத்தில் Max 3 (1.58 வாட்ஸ்) மாடலும் உள்ளன.

இந்த கணக்கெடுப்பு முழுக்க முழுக்க ஜெர்மனியில் இருக்கும் மொபைல் மாடல்களை மட்டுமே வைத்து எடுக்கப்பட்டது . இதில் சில மொபைல்களின் கதிர்வீச்சு அளவு ஆபத்தானதாக தெரிகிறது என்றாலும்,  இதனால் இந்திய மொபைல்களுக்கு பிரச்னையில்லை.  இந்திய மாடல்களும் ஜெர்மனி மாடல்களும் வேறு என்பதால்,  இது அப்படியே இந்திய மாடல்களுக்குப் பொருந்தாது. ஜெர்மனியில் அதிகபட்ச கதிர்வீச்சு அளவு 2W/kg ஆகும். ஆனால், இந்தியாவில் இந்த SAR மதிப்பு 1.6 W/kg-க்குள்தான் இருக்கவேண்டும். எனவே இங்கு இந்த அளவிற்குள் கதிர்வீச்சு இருக்கும்படிதான் மொபைல்கள் தயாரிக்கப்படுகின்றன. நம்முடைய செல்போனில் கதிர்வீச்சைப் பற்றி  தெரிந்துகொள்ள *#07# என்ற எண்ணை டயல் செய்து தெரிந்துகொள்ளலாம்.